Skip to main content

அண்ணனுடன் மோதும் தம்பி, தந்தைக்காக விலகிய மகன் - கர்நாடகா தேர்தல் சுவாரசியங்கள்!   

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

மே 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 224 தொகுதிகளிலும் மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கர்நாடக தேர்தல் களம் தற்போது அனல் பறந்து வருகிறது. வாரிசு அரசியல் என்பது இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதில் கர்நாடகா மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கர்நாடகாவில் இந்நாள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.

yeddi with son

 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இளைய மகன் யதீந்திரா சித்தராமையா (காங்கிரஸ்) மைசூர் மாவட்டத்தில் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து  முதலில் முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன்  விஜயேந்திரா (பிஜேபி) போட்டியிடுவதாக இருந்தது. இந்தப் போட்டியால் வி.ஐ.பி தொகுதியானது வருணா. ஆனால், திடீரென்று தன் மகன் போட்டியிடவில்லையென்று கூறினார். சில காலமாக அங்கு வீடெல்லாம் எடுத்து தங்கி தேர்தல் வேலை பார்த்த விஜயேந்திராவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியாகினர். 

 

 

 

yathindra sidhaஅது போல முன்னாள் பிரதமர் எச்.டி.தேவ் கவுடாவின் மகன்கள் இருவரும் போட்டியிடுகின்றனர். மூத்த மகன் எச்.டி.ரெவன்னா, ஹாசன் மாவட்டத்தில் ஹோலெனராசிபுராவில் போட்டியிடுகிறார். எச்.டி. தேவகவுடாவின் இளைய மகன்  குமாரசாமி ராமநகரா மற்றும் சென்னபத்தான்னா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். குமாரசாமி ஏற்கனவே முதல்வராக இருந்தவர்.
 

devegowdaகர்நாடகத்தின் முன்னாள் முதல்வரான சரகோபா பங்காரப்பாவின் மூத்த மகனும் கன்னட நடிகருமான  குமார் பங்காரப்பா சிவமோகா மாவட்டத்தில் சோரப்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனதாதள் சார்பில் போட்டியிடுவது யார் தெரியுமா?  இவரது சகோதரர் மது பங்காரப்பா. இவர்தான் ஏற்கனவே இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. இரண்டு பேருமே தங்கள் தந்தையின் பெருமையை நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள். மக்களுக்கு இப்பொழுது வேடிக்கையென்றாலும் வாக்குப்பதிவில் குழப்பம் ஆகப்போவது நிச்சயம். 

 

bangarappa familyமுன்னாள் கர்நாடக முதல்வர் ஜெ.ஹெச் படேலின் மகள் மஹீமா படேல் தாவணகிரி  மாவட்டத்தில் சன்னகிரியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் அக்கட்சியின் மாநில தலைவராக இருக்கிறார். முன்னாள் கர்நாடகா முதலமைச்சர் செல்வராஜ் சிங் மகன் அஜய் சிங் காளபுரகி மாவட்டத்தில் ஜெவேரியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடுகிறார் .

இத்தனை வாரிசுகள் தேர்தலில் போட்டியிடுவது நமக்கொன்றும் புதிதில்லையென்றாலும் இதையெல்லாம் பார்க்கும்போது இன்னொன்று உறுதியாகிறது. அரசியல் என்பது சமூக செயல்பாடு என்ற நிலையிலிருந்து குடும்ப தொழில் என்ற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

“பாஜகவையும், அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
BJP and ADMK must be defeated together says CM MK Stalin speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். நல்லாயிருக்கீங்களா? ஏப்ரல் 19ஆம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்.பி.யை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கிற தேர்தல். மதம், ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.

மாதாமாதம் மகளிருக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம், பள்ளி குழந்தைகள் காலையில் பசியில்லாமல் படிக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கிறோம். உங்கள் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்க, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.