Skip to main content

102 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு; 33 ஆண்டுகள் தேடல்; அசத்திய சுகாதாரத்துறை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

hundred and two years ago memory wishes pudukkottai health department 

 

தமிழ்நாட்டில் இருந்த மிட்டா மிராசுகளும், வணிகர்கள் உள்ளிட்ட பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த பலரும் ஏழைகளின் பயன்பாட்டிற்காக பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகளை சொந்த செலவில் ஏற்படுத்திக் கொடுத்த பெருமை இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாரிசுகள் அதை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரிமளம் தொடங்கி காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நகரத்தார்களால் இந்த பணிகள் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது.

 

இதே போல தான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 1920ல் தாய்சேய் நல மையத்தை கௌரவ மாஜிஸ்திரேட் பள்ளத்தூர் அடைக்கப்ப செட்டியார் தனது மகள் உமையாள் ஆச்சி பெயரில் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பிரசவம் என்பது குறைவு தான் என்றாலும் அதற்கான தேவைகள் இருந்ததால் அந்த கட்டடத்தைக் கட்டி அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் டட் என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார். இதற்கான கல்வெட்டு ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

102 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த கட்டடம் சற்றும் சிதிலமடையாமல் உள்ளதால் அந்த கட்டடத்தை இடித்து விடாமல் ரத்த வங்கியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவில் ரத்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை அலுவலராக பணிக்கு வந்த விவேகானந்தன் பழைய கல்வெட்டை பார்த்து அடைக்கப்ப செட்டியார் குடும்பத்தினரை அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று கடந்த 1990 ஆண்டு முதல் அவரது குடும்பத்தினரை தேடத் தொடங்கியுள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 

hundred and two years ago memory wishes pudukkottai health department 

 

சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் வந்த பிறகு சமூக வலைதளங்கள் மூலம் தேடிய போது 2021ம் ஆண்டு மதுரையில் இருந்து அருணாசலம் என்பவர் தொடர்பு கொண்டு எங்கள் பாட்டனார் தான் பள்ளத்தூர் அடைக்கப்ப செட்டியார் என்று அறிமுகமானார். கொரோனா காரணங்களால் அவர்களால் வர இயலாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைக்கப்ப செட்டியாரின் 3வது தலைமுறை வாரிசுகளான பெங்களூரில் இருந்து லெட்சுமணன் செட்டியார் (வயது 85) மற்றும் அடைக்கப்பன், கதிரேசன், அருணாசலம் ஆகியோர் தங்கள் பாட்டனார் கட்டிய மகப்பேறு மையத்தைப் பார்க்க பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்து பழைய கட்டடத்தைப் பார்த்து ஆனந்தப்பட்டனர்.

 

hundred and two years ago memory wishes pudukkottai health department 

 

தொடர்ந்து தாங்கள் கையோடு கொண்டு வந்த கௌரவ மாஜிஸ்திரேட் அடைக்கப்ப செட்டியார் மற்றும் அவரது மகள் உமையாள் ஆச்சி படங்களை தலைமை மருத்துவர் அன்பழகனிடம் வழங்கினார்கள். தொடர்ந்து விவேகானந்தன் அடைக்கப்பன் வாரிசுகளுக்கு புத்தகங்கள் பரிசளித்து பொன்னாடைகள் அணிவித்து கௌரவப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது. 

 

 

Next Story

அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்த இளைஞர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

அரிவாளுடன் இளைஞர் ஒருவர் கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே வராமல் போக்கு காட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரபல கோவிலாக இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென இளைஞர் ஒருவர் கோவிலின் கருவறைக்குள் அரிவாளுடன் சென்றுள்ளார். பொதுமக்கள் வெளியே வர சொல்லியும் அந்த இளைஞர் கருவறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவிலுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் அந்த இளைஞர் வர மறுத்தார். மேலும் கையில் இருந்த அரிவாளை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர்.

The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அந்த இளைஞர் வெளியே கொண்டுவரப்பட்டார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், காதல் விவகாரத்தால் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் சென்றதும் தெரியவந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கைகளை துணியால் கட்டி வெளியே கொண்டு வரப்பட்ட அந்த இளைஞர் ஆட்டோவில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

முதியோர் உதவித் தொகை ரூ.27 லட்சம் அபேஸ்; சிக்கிய கணினி ஆபரேட்டர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Old Age Assistance Rs.27 Lakh Abes; Trapped computer operator

60 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் அவர்களின் நலன் கருதி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1200 மாதாந்திர உதவித்தொகை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஏராளமான முதியவர்களின் வாழ்க்கையே இந்த உதவித் தொகையை வைத்தே நடக்கிறது. இப்படிப்பட்ட முதியவர்களின் உதவித்தொகையைத் தான் ஒருவர் ரூ.27 லட்சம் வரை திருடி இருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியான நபர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் சரியாக முதியோர் உதவித் தொகை செல்கிறதா? அதில் ஏதும் குளறுபடி நடக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய தனி வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இத்தனை கண்காணிப்புகளையும் மீறி தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டில் மட்டும் புதுக்கோட்டையில் மட்டும் இறப்பு இல்லாமல் ஒரே அளவில் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதைப் பார்த்ததும் மாநில சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென புதுக்கோட்டை வந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் ஒரே வங்கி கணக்கிற்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.27 லட்சம் வரை சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கி கணக்கு யாருடையது என்று விசாரணை செய்ததில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கணினி மூலம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு நபரான தேனி மாவட்டம் அம்பேத்ராஜா என்பவரை வைத்து தங்களிடம் உள்ள பாஸ்வேர்டுகளை கொடுத்து  தினக்கூலிக்கு பதிவேற்றம் செய்யும் பணியை கொடுத்துள்ளனர்.

இந்தப் பணியின் போது, உதவித் தொகை பெற்று வந்தவர்களில் இறந்தவர்கள், வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு இல்லை என்று திரும்பி வரும் பணத்தை மீண்டும் அரசுக்கு அனுப்பாமல் தனது வங்கி கணக்கிற்கு அனுப்பி மொத்தமாக எடுத்துள்ளார். மேலும் ஒவ்வொரு உதவித் தொகைக்கும் வங்கி சேவைக் கட்டணம் ரூ.30 வழங்குவதையும் வங்கிக்கு அனுப்பாமல் தனது கணக்கிற்கே அனுப்பிக் கொண்டார். இப்படியே அனுப்பியதில் ஒரு வருடத்தில் மட்டும் ரூ.27 லட்சம் அவரது வங்கி கணக்கிற்கு சென்று எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேடு காலத்தில் பணியில் இருந்த தனி வட்டாட்சியர்கள் பொன்மலர், சாந்தி, ரத்தினாவதி ஆகியோரே இந்தப் பணத்தை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று ஆய்வு அதிகாரிகள் கூறிவிட்ட நிலையில் அம்பேத்ராஜாவை அழைத்து பணம் எங்கே என்று கேட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் செலவாகிடுச்சு என்னிடம் பணம் இல்லை என்று அசால்டாக கூறியுள்ளார். அதனால் வட்டாட்சியர்கள் செய்வதறியாது நிற்கின்றனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதுடன் மேலும் எங்கெல்லாம் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளது என்பதைக் கண்டறியத் தயாராகி வருகின்றனர் சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள்.