Skip to main content

நச்சுக் கருத்துக்களை பரப்பும் எச்.ராஜா. நடவடிக்கை எடுக்குமா பா.ஜ.க?

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து வெறுப்புணர்வுடன் பதிவுகளிட்டு 

வருகிறார் பாரதிய ஜனதா  கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா. 

 

h.raja


அரசியலில் போட்டிகள் நிறைந்திருந்தாலும் பொதுத்தளத்தில் மாற்றுக் கட்சியினரை மரியாதை  குன்றாமல் விமர்சனம் வைப்பதே சரியான அரசியல் மாண்பு. ஆனால் பா.ஜ.கவின் தேசிய  செயலாளராக இருக்கும் எச்.ராஜா மாற்றுக்  கட்சியினரை நோக்கி தொடர்ந்து அருவருக்கச்  செய்யும் வகையில் விமர்சனம் வைத்து வருகிறார். 
 

இன்று காலை அவரது ஃபேஸ்புக் பதிவில், ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல்  தமிழகத்தில் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமூக  அரசியல் தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததை ஒட்டி இப்போது அந்த பதிவை  நீக்கியுள்ளார். இவ்வாறு ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி, எதிர்ப்புகள் எழுந்தவுடன்  நீக்குவது எச்.ராஜாவிற்கு புதிதல்ல. சமீபத்தில் பா.ஜ.கவின் தேர்தல் வெற்றி தமிழகத்திலும்  தொடருமா என்றொரு முகநூல் ஓட்டெடுப்பை நடத்தி முடிவுகள் எதிராக வரவர அதையும் நீக்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது. 
 

மேலும், தொடர்ந்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிட கட்சிகள் என மாற்றுக் கட்சியினர்  அனைவரையும் மிகவும்  தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் எச்.ராஜா. திரிபுராவில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியில் தோல்வியை கிண்டல் செய்யும் விதத்தில் பாடையில் போவது,  சவக்குழியில் கிடப்பது போன்ற படங்கள் போடுவது, காங்கிரஸின் தோல்விகளை  குறித்து, ராகுல்  காந்தி குறித்து நாகரீகமற்ற பதிவுகள் இடுவது, பெரியார் குறித்து தொடர்ந்து தரக்குறைவாக  பேசுவது என்று  அடிப்படை மாண்பற்ற அரசியலை முன்னெடுத்து வருகிறார் எச்.ராஜா. 
 

அதிலும் பெரும்பாலான சமயங்களில் எந்தவித அடிப்படைகளும் இல்லாத குற்றச்சாட்டுக்களையும்    அவதூறுகளையுமே  முன்வைத்து எழுதப்படுகின்றன ராஜாவின் பதிவுகள். நாட்டை ஆளும்  கட்சியின் தேசிய செயலாளர் ஒருவர், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து  இதுபோன்ற அருவருப்பான கருத்துக்களை வெளியிடுவதைக் குறித்து,  பா.ஜ.கவின் மேல்மட்ட  தலைவர்களிடம் இருந்து இதுவரை கடுமையான கண்டனங்களோ நடவடிக்கையோ எதுவும்  வரவில்லை.
 

அரசியல் களங்களிலும் சரி, தொலைக்காட்சி விவாதங்களிலும் சரி ஆக்கப்பூர்வமான  விமர்சனங்களை முன்வைக்காமல், அவதூறுகள் பரப்பு, சாதி மத இன மொழி தேச உணர்வுகளை  தூண்டி வெறுப்புணர்வை விதைத்து அரசியல் ஆதாயங்கள் தேடுவதே பா.ஜ.க வின் பாணியாக  இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இதையும் தனது அரசியல் வியூகமாக பார்க்கிறதா பா.ஜ.க?அல்லது இனியாவது ஆரோக்கியமான அரசியல் செய்யச் சொல்லி எச்.ராஜா மேல் கண்டனங்களும்  நடவடிக்கைகளும் பாயுமா?

 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.