Skip to main content

பணம் திரும்ப வருமா, வராதா? என்பதுதான் பிரச்சனை... அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் - கோவி.லெனின் பேச்சு

Published on 02/05/2020 | Edited on 02/05/2020


கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் பெரிய தொழிலதிபர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்  கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடனைப் பெற்ற சிலர் வெளிநாடுகளில் சிறையில் இருக்கும் இந்த நிலையில், எதற்காக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்தக் கடன் தொடர்பாக மத்திய அரசு வேறு சில தகவல்களைக் கூறுகிறது. இதில் உண்மை என்ன, எதற்காக இந்தக் கடன் தள்ளுபடி என்பது குறித்தான கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேல்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

பெரிய முதலாளிகளின் வாராக் கடன் 68,000 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பேட்டியளித்த மத்திய நிதிஅமைச்சர் இது 'ரைட் ஆப்' தான். கணக்கியல் தள்ளுபடிதான், இதைத் திரும்ப வசூல் செய்து கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கரோனா காலத்தில் மக்களுடைய சிரமம் என்னவென்றால், ஒருபக்கம் மருத்துவச் சிக்கல் இருக்கிறது என்றால், மறுபக்கம் பொருளாதாரச் சிக்கல் இருக்கின்றது. இந்தியா ஒன்றும் பெரிய பொருளாதார வலிமை உடைய நாடு கிடையாது. இந்தியாவில் உள்ள 70 கோடி மக்கள் இன்னமும் மத்திய அரசு கொடுக்கின்ற உணவுப்பொருட்களைச் சார்ந்தே வாழ்கின்றனர். இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே நாட்டில் உள்ள எழுவது சதவீத மக்களுக்கு நாங்கள் உணவளிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தற்போது பெரிய முதலாளிகளுக்குப் பணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்தான் இப்படிப் புரளியைப் பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்கள். பணம் திரும்ப வருமா வராதா என்பதைத் தான் தற்போது மத்திய அரசு கூற வேண்டும் அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். 
 

http://onelink.to/nknapp


சரி.. மத்திய அரசு கூறும் தொழிலதிபர்கள் எல்லாம் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள். விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டில் ஜெயிலில் இருக்கிறார். நீரவ் மோடியின் நண்பர் மெகுல் சோக்ஷிக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள். இவர் எங்கே இருக்கிறார் என்றால் அவரும் ஜெயிலில்தான் இங்கிலாந்து நாட்டில் இருக்கிறார். நம்முடைய கேள்வி எல்லாம் அவர்கள் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில் அவர்கள் வாங்கிய கடன்களை வாரகடன்கள் லிஸ்டில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியோ இதை நான் நாடாளுமன்றத்தில் கேட்டேன், எனக்கு உரிய பதில் வரவில்லை என்று கூறுகிறார். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் இந்தக் கேல்வியை எழுப்பியதால் இந்த உண்மை தற்போது தெரியவந்துள்ளது. நாட்டு மக்கள் இத்தகைய கடினமான சூழ்நிலையில் இருக்க வேண்டிய நிலையில், இந்தக் கடன் தள்ளுபடி தேவையா என்பதே எல்லோரின் பதிலாகவும் இருக்கின்றது, என்றார்.