மருத்துவராக வேண்டும் என்பது மாணவர்களில் பெரும்பாலானவர்களின் லட்சியமாக இருக்கும். மருத்துவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பு என்றைக்குமே அலாதியானது. இதனால், மருத்துவத் துறையில் சேர்ந்து படிப்பதற்கான ஆர்வமும் அதிகமாக இருக்கும். மருத்துவம் என்பது வேலையல்ல... சேவை. அதனாலேயே மருத்துவர்கள் மக்களின் போற்றுதலுக்குரியவர்களாக இருக்கிறார்கள். உயிர்காக்கும் மருத்துவராக வேண்டும் என்று விரும்புவரா நீங்கள்?
இலவச நீட் கோச்சிங்!
இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், நீட் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மருத்துவராகும் உங்கள் கனவை நனவாக்க `கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி (KIMA)’ உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. மருத்துவர் கனவோடு இருக்கும் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு மாத இலவச ஆன்லைன் நீட் கோச்சிங்கை வழங்குகிறது.
திறமையான வல்லுநர் குழு மூலம் நடத்தப்படும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் நீட் மாதிரி டெஸ்டுகள், இலவச ஸ்டடி மெட்டீரியல்கள் வழங்கப்படும். இந்த கோர்ஸில் இணைந்து பயன்பெறத் தவறாதீர்!
வெளிநாட்டிலும் மருத்துவம் படிக்கலாம்!
பிளஸ் டூவில் நல்ல கட்-ஆஃப் இருந்தும், நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், சில மதிப்பெண் புள்ளிகளால் மருத்துவப் படிப்பைத் தவறவிட்டர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் குறைந்த செலவில் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க முடியும் என்கிறது மாமல்லபுரத்தில் இயங்கிவரும் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி.
ஃபிலிப்பைன்ஸின் முன்னணி மருத்துவக் கல்லூரியான தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷன் (DMSFI)-இன் இந்தியப் பயிற்சி நிறுவனமாக கிங்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்திய மாணவர்களுக்கு சிறப்பான நீட் பயிற்சியை அளித்து வருவதோடு குறைந்த செலவில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு 1.4 வருட சிறப்புப் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.
ஃபிலிப்பைன்ஸில் என்ன பிளஸ்?
ஃபிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. நீட் தேர்ச்சி மட்டுமே போதும். இதற்காகத் தனியாக வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியமில்லை. அதேபோல், தங்குவதற்கான செலவும், உணவுக் கட்டணமும் குறைவு. சர்வதேசத் தரத்திலான அதிநவீன வசதிகள் கொண்டது DMSFI. அனுபவம் வாய்ந்த துறை வல்லுநர்கள் கொண்ட ஆசிரியர் குழு மூலம் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. மாணவர்களுக்குப் பாதுகாப்பான நாடாகக் கருதப்படுகிறது ஃபிலிப்பைன்ஸ். ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருப்பதால், மாணவர்களுக்கு மொழி ஒரு பிரச்னையாக இருக்காது. இந்தியாவில் இருந்து எளிதாக ஃபிலிப்பைன்ஸ் சென்றுவர முடியும் என்பது கூடுதல் வசதி.
FMGE தேர்வு என்றால் என்ன?
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட Foreign Medical Graduates Examination - FMGE என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஃபிலிப்பைன்ஸ் தாவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேஷனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் FMGE தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்வுக்கான பயிற்சியையும் கிங்ஸ் நிறுவனம் அளிக்கிறது. இந்த ஆண்டு FMGE தேர்வில் DMSFI-ல் பயின்ற மாணவர்கள் 6 பேர் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள்.
பொன்னான வாய்ப்பு!
வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் உங்கள் மகனோ/மகளோ தேர்ச்சி பெற திறமையான வல்லுநர்கள் குழு மூலம் கிங்ஸ் இண்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி இலவச ஆன்லைன் பயிற்சியை அளிக்கிறது. குறைந்த இடங்களே இருப்பதால், உடனடியாக இந்த லிங்கில் (www.kingsneet.in) உங்கள் தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்துவிடுங்கள்... இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டு விடாதீர்கள்!