Skip to main content

இன்னாள் அமைச்சர்களிடம் தொகுதிகளை பறிகொடுத்த முன்னாள் அமைச்சர்கள்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Ex-ministers who lost the seats of ministers today
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி - சக்கரபாணி

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றதொகுதிகளிலும் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை எதிர்த்து களமிறங்கிய எதிர்க்கட்சியான அதிமுக 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இதில் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்கவில்லை.  அதுபோல் பிஜேபி கூட்டணியும் சிலதொகுதிகளை தவிர பல தொகுதிகளில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல்டெபாசிட்டும் இழந்தும் இருக்கிறது.

ஆனால் 1972ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி புதிதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியதும் 1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முதன்முதலில் களமிறங்கியது. இதில் மாயத்தேவர் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட போது சுயேச்சை சின்னமாகத்தான் இரட்டை இலையைத் தேர்வு செய்ததே மாயத்தேவர்தான். அப்போது எம்ஜிஆரிடம் மாயத்தேவர் சொன்னபோது இது மக்கள் மனதில் இடம் பிடிக்குமா என்று அப்போது எம்ஜிஆர் கேட்டிருக்கிறார். அதற்கு மாயத்தேவரோ இரட்டை இலை என்பது நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரையுள்ள மக்களுக்கு எளிதாக மனதில் பதியக்கூடியதாக இருக்கும். அதோடு வெளிநாடுகளில் இரட்டை விரலை வெற்றிச் சின்னமாகக் காட்டுவார்கள். அதனால் இரட்டை இலையைத் தேர்வு செய்தேன் என்று கூறியதின் பேரில் தான் எம்ஜிஆரும் அதில் போட்டிப்போட அனுமதி கொடுத்ததின் பேரில் தான் வெற்றி பெற்றார். அந்தளவுக்கு அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிதான். அப்படிப்பட்ட திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியையே இன்னாள் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தக்கவைத்து இருக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் வேடசந்தூரைத் தவிர ஆறு சட்டமன்றத் தொகுதிகள் கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி. இத்தொகுதியில் ஆத்தூர் சட்;டமன்றத் தொகுதியை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தக்க வைத்து இருக்கிறார். அதுபோல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெற்றி பெற்று இருக்கிறார். அதுபோல் பழனி சட்டமன்றத் தொகுதியில் ஐ.பி.செந்தில்குமார் வெற்றி பெற்று இருக்கிறார்.  மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் ஆளுங்கட்சி கைப்பற்றி உள்ளது.

Ex-ministers who lost the seats of ministers today
சீனிவாசன் - எஸ்டிபி வேட்பாளர் முகமது முபாரக் - நத்தம் விஸ்வநாதன்

அதுபோல் நத்தம் சட்டமன்றத் தொகுதியை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தக்க வைத்து இருக்கிறார். அதுபோல் திண்டுக்கல் சட்டமன்றதொகுதியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வெற்றி பெற்று இருக்கிறார். நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தேன்மொழி வெற்றி பெற்று இருக்கிறார்.  மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.கைப்பற்றி இருக்கிறது. இப்படி ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதியை ஆளுங்கட்சியும், மூன்று தொகுதியை எதிர்க்கட்சியும் கைப்பற்றி இருந்தது.

இந்தநிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான சிபிஎம்கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதின் பேரில் வேட்பாளராக சச்சிதானந்தம் களமிறக்கப்பட்டார். ஆனால் இத்தொகுதியைப் பொறுத்தவரை சூரியன், இரட்டை இலை ஆகிய சின்னங்கள்தான் தொகுதி மக்கள் மத்தியில் அறிமுகமான சின்னமாக இருந்து வருகிறது. அதனால் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரில் கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை நகரம் மற்றும் பட்டிதொட்டிகள் வரை நோட்டீசுகளாகவும், விசிறிகளாகவும் கொண்டு சென்று மக்கள் மனதில் இரவு பகல் பாராமல் பதிய வைத்தனர். 

அதன் அடிப்படையில்தான் சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் அமோகமாக வெற்றி பெற்று இருக்கிறார்.  அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியான ஆத்தூர் தொகுதியில் சட்டமன்றத் தொகுதியில் உள்ள  மொத்த வாக்காளர்கள் 291149. இதில் 214623 பதிவானது. இதில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 139319, எஸ்டிபி(அதிமுக) முகமது முபாரக்-31720, பிஜேபி கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா-16387, நாம் தமிழர் கட்சி-18983. இதில் எஸ்டிபி கட்சி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 1,07,599 கூடுதலாக வாங்கியிருக்கிறார்.

Ex-ministers who lost the seats of ministers today
ஐ.பி.செந்தில்குமார் - வேட்பாளர் சச்சிதானந்தம்

அதுபோல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி மொத்த வாக்காளர்கள் 236457. இதில் 1,82,167 ஓட்டுக்கள் பதிவானது. சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்-113647, எஸ்டிபி(அதிமுக) முகமது முபாரக்-38121, பிஜேபி கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா-14707, நாம் தமிழர் கட்சி-9251, இதில் எஸ்டிபி கட்சி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 75,526 கூடுதலாக வாங்கியிருக்கிறார். அதேபோல் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மொத்தவாக்காளர்கள் 299199 இதில் 181219 பதிவானது. அதில் சிபிஎம் வேட்பாளர்சச்சிதானந்தம் -1,03,002, எஸ்டிபி(அதிமுக) முகமது முபாரக்-42,046, பிஜேபிகூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா-20,655, நாம் தமிழர் கட்சி-12,349 இதில் எஸ்டிபி கட்சி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்60,956 கூடுதலாக வாங்கியிருக்கிறார். அதேபோல் நிலக்கோட்டை சட்டமன்றதொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 245752 பதிவானது170907. இதில்சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்-89361, எஸ்டிபி(அதிமுக) முகமது முபாரக்-37533,

பிஜேபி கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா-17878, நாம் தமிழர்கட்சி -19670 இதில் எஸ்டிபி கட்சி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர் 51828ஓட்டுக்கள் கூடுதலாக வாங்கியிருக்கிறார். அதேபோல் நத்தம் சட்டமன்றதொகுதியில் மொத்த வாக்காளர்கள் 285526. பதிவான ஓட்டுக்கள் 209836. இதில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்-117782, எஸ்டிபி(அதிமுக) முகமது முபாரக்-45688, பிஜேபி கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா -16881, நாம்தமிழர் கட்சி-20680, இதில் எஸ்டிபி கட்சி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர்72,094 கூடுதலாக வாங்கியிருக்கிறார்.  

இதேபோல் திண்டுக்கல் சட்டமன்றதொகுதியியல் உள்ள மொத்த வாக்காளர்கள்  மொத்த வாக்காளர்கள் 278968.இதில் பதிவான ஓட்டுக்கள்-181422. அதில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம்-104280, எஸ்டிபி(அதிமுக) முகமது முபாரக்-30384, பிஜேபி கூட்டணியில் உள்ளபா.ம.க. வேட்பாளர் திலகபாமா-24505, நாம் தமிழர் கட்சி-15958, இதில் எஸ்டிபிகட்சி வேட்பாளரை விட சிபிஎம் வேட்பாளர் 73,896 ஓட்டுக்கள் (திண்டுக்கல்மாநகரில் 52ஆயிரம் ஓட்டுக்களும், திண்டுக்கல் ஒன்றியத்தில் 21886ஓட்டுக்கள்வாங்கியுள்ளனர்) கூடுதலாக வாங்கியுள்ளனர். இப்படி ஆறு சடடமன்ற தொகுதிகளில் சிபிஎம் வேட்பாளர்சச்சிதானந்தம் 4,43,821 ஓட்டுக்கள் கூடுதலாக வாங்கியிருக்கிறார்.  

Ex-ministers who lost the seats of ministers today
அதிமுக எம்எல்ஏ - பா..ம.க திலகபாமா

அதன்மூலம் அதிமுக கூட்டணி வேட்பாளரான  எஸ்டிபி வேட்பாளர் முகமது முபாரக் மட்டும் டெபாசிட் வாங்கியிருக்கிறார். ஆனால் பிஜேபி கூட்டணியின் பாமகவேட்பாளரான திலகபாமா தேர்தல் பிரச்சாரத்தின்போது வடை சுடுவதும்,பறைசாற்றுவதும், காய்கறி விற்பதும், மருந்தடிப்பதும் இப்படி தன்னைபப்ளிசிட்டி படுத்திக்கொண்டு வந்தாரே தவிர வாக்காள மக்களிடம் இறங்கிவாக்கு சேகரிக்க ஆர்வம் காட்டவில்லை. அதுபோல் தனது கட்சிக் காரர்களையும் கூட்டணி கட்சியினரையும் அரவணைக்கவும் சரிவர ஆர்வம் காட்டவில்லை.அதனாலேயே திலகபாமா டெபாசிட் இழந்தார் என்ற பேச்சும் அடிபட்டுவருகிறது. அதுபோல் நாம்தமிழர்கட்சி உட்பட அனைத்து சுயேட்சைகளுமேடெபாசிட் இழந்தனர். அந்த அளவுக்கு அமைச்சர்களான ஐ.பெரியசாமியும், சக்கரபாணி மற்றும் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்கூட்டணி கட்சியினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் பம்பரமாக செயல்பட்டதின்பேரில் தான் தமிழ்நாட்டிலேயே மூன்றாவது இடத்தையும் திண்டுக்கல்பாராளுமன்ற தொகுதி பிடித்து இருக்கிறது.

அதுபோல் அ.தி.மு.க. வசம் இருந்ததிண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் கூடுதல் வாக்குகள் மூலம் தி.மு.க. தக்க வைத்து இருக்கிறது. இதனால் இன்னாள் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணியிடம் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் மற்றும் நிலக்கோட்டை அதிமுகசட்டமன்ற உறுப்பினரான தேன்மொழி ஆகியோர் தொகுதியை பறிகொடுத்துஇருக்கிறார்கள். ஆனால் இத்தொகுதியை பொறுத்தவரை அதிமுக ஏழு முறைவெற்றி பெற்று இருக்கிறது. அதுபோல் காங்கிரஸ் ஐந்து முறை வெற்றி பெற்றுஇருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. நான்கு முறை வெற்றி பெற்று இருக்கிறது.அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் நடந்து முடிந்த 18வது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!