Skip to main content

ஜி20 மாநாட்டில் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை - கடலூர் இள. புகழேந்தி விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Ela Pugazhenthi | Modi | EPS | G20 |Annamalai

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி விரிவாகப் பேசுகிறார்.

 

அந்தக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களை இங்கு மிகவும் மதிப்புடன் நடத்தினார்கள். தற்போதைய பாஜக அரசு திருடித் தின்னும் வேலையை மட்டும் தான் செய்கிறது. G20 நிகழ்வுக்காக இவர்கள் கட்டிய இடத்தில் மழை பெய்தபோது நீர் நிரம்பியது. ஆனால் இந்த கூட்டத்துக்காக 990 கோடி செலவு செய்கிறோம் என்று பட்ஜெட்டில் சொன்ன இவர்கள், 4000 கோடிக்கும் அதிகமாக இதன் மூலம் திருடியுள்ளனர். அந்த மாநாட்டின் மூலம் இவர்கள் சாதித்தது என்ன?

 

இந்த மாநாட்டின் லட்சணத்தை வெளிநாட்டு பத்திரிகைகள் எல்லாம் எழுதியுள்ளன. எதையாவது சொல்லி திருடுவது, கொள்ளையடிப்பது தான் பாஜகவின் வேலை. இந்த மாநாட்டுக்காக ஏழைகளின் வீடுகள் இருக்கும் பகுதிகளை எல்லாம் இவர்கள் மறைத்தார்கள். அதை போட்டோ எடுத்துப் போட்டு வெளிநாட்டினர் கேள்வி கேட்கின்றனர். இந்த பாஜக கும்பலை நாட்டை விட்டே அனைவரும் வெளியேற்ற வேண்டும். மிக விரைவாக இந்த ஆட்சி முடிந்தால் நல்லது. இந்தியாவையே இவர்கள் சீரழித்து வருகிறார்கள். 

 

சனாதனம் என்பது பார்ப்பனியம் தான். பெரும்பான்மையான இந்துக்கள் படிப்பதற்கு உதவியது யார்? சனாதனம் இருக்கும்வரை நமக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று சொன்னவர் அம்பேத்கர். இப்படிப்பட்ட சனாதனத்தை எதிர்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பார்ப்பனர்களின் உயர்ந்த நிலை தான் சனாதனம். பார்ப்பனர்களில் சிலரே கூட சனாதனத்தை எதிர்க்கின்றனர். இந்து என்கிற பெயரை வழங்கியதே ஆங்கிலேயர்கள் தான். சனாதனத்தை ஒழித்தால் தான் இந்துக்களை காப்பாற்ற முடியும். திமுக ஆன்மீகத்துக்கு எதிரானது என்று இவர்கள் பரப்பும் பொய் எடுபடாது.

 

பார்ப்பனர்களுக்கு எடுபிடிகளாக இருப்பவர்களே பாஜகவின் கருத்துக்களை ஆதரிப்பார்கள். உதயநிதி கொள்கை ரீதியாக சனாதனத்தை தாக்குகிறார். சனாதனத்தை எதிர்த்ததால் தான் இன்று தமிழ்நாட்டில் அனைத்தும் இருக்கிறது. இவர்கள் கொஞ்சமாவது வரலாற்றைப் படிக்க வேண்டும். மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொன்ன மோசடிப் பேர்வழி எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களுக்கு எல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. டெல்லியில் சொல்வதை அப்படியே செய்பவராகத்தான் எடப்பாடி ஆட்சி நடத்தினார்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...