Skip to main content

"அதிமுகவும் பாஜகவும் இரு உடல் ஒரு உயிராகத் தான் இருக்கிறார்கள்" - பத்ம ப்ரியா

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

dmk padmapariya talks about erode east by election 

 

திமுக தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளர் பத்மப்ரியா நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டாலும் பாஜக தான் தேர்தல் களத்தில் இருப்பது போன்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பொதுவாகவே அதிமுக முதுகில் ஏறி பாஜக எதிர்க்கட்சி போன்று  குரலை உயர்த்துகிறார்கள். அதிமுக அமைதியாகத் தான் சென்று கொண்டு இருக்கிறது. அமைச்சர் முதல் சென்னை மேயர் வரை இளைஞர்கள் அதிகமாக அரசியலில் உள்ளே வர ஆரம்பித்து விட்டார்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர உள்ள திமுக வழிவகை செய்து கொண்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 21 மாதத்தில் 210 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். எங்கள் தரப்பில் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்ற பட்டியல் உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று சொல்லுபவர்கள் அதற்கான பட்டியலை வெளியிடுங்கள். வாய்ப் பேச்சில் அண்ணாமலை வீரர் என்பது மக்களுக்கு தெரியும்.

 

மக்களிடம் பணத்தை கொடுத்து வாக்கு வாங்கினார்கள் என்ற நிலை மாறி மக்களுக்கு இறைச்சி,  சாப்பாடு  கொடுத்து வாக்காளர்களை பூட்டி வைக்கிறார்கள்  என கூறி வருகிறார்கள். மக்களை கொடுமைப்படுத்தி வாக்குகளை பெறும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது. பிரச்சாரத்திற்கு கூட்டணி கட்சிகளுடன் சென்று வாக்கு கேட்கிறோம். ஆனால் அதிமுகவினர்  யாரிடம் கூட்டணி வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை. அண்ணாமலையை தவிர்த்து  மோடியின் பெயரை யாருமே பயன்படுத்துவதில்லை. ஒன்றிய அரசு பற்றி அண்ணாமலை எதுவும் பேசுவதில்லை. திமுக மீதான குற்றச்சாட்டை மட்டுமே அண்ணாமலை பேசி வருகிறார்.

 

திமுக ஆட்சியில் மகளிருக்கு, பள்ளி மாணவருக்கு, இளைஞருக்கு இதை செய்தோம் என்று சொல்கிறோம். ஆனால். எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என்று சொல்லும்போது கூட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா செய்த திட்டங்களை தான் சொல்லுகிறார். திமுக ஆட்சிக்கு வந்து சொன்ன திட்டங்களை விட சொல்லாத திட்டங்களையும் அதிகமாக செய்துள்ளோம். உதயநிதி ஸ்டாலின் செங்கல் தூக்கி பிரச்சாரம் செய்ததை காப்பி அடித்து அண்ணாமலையும் தற்போது செங்கல்லை தூக்கிக் கொண்டு இருக்கிறார். சமீப காலமாக அண்ணாமலை எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.

 

தேர்தலில் பாசிச சக்திகள் தலைதூக்கி விடக்கூடாது என்பதால் தான் அமைச்சர்கள் தேர்தல் களத்தில் வேலை செய்கிறார்கள். மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறத் தான் அனைவரும் விருப்பப்பட்டு தேர்தல் களத்திற்கு வருகிறார்கள். அதிமுகவும் பாஜகவும் இரு உடல் ஒரு உயிராகத் தான் இருக்கிறார்கள். சின்னம் தான் அதிமுகவுடையது  அவர்களின் பேச்சு பாஜக போன்று இருக்கிறது. அண்ணாமலை பேசும் பேச்சு தான் அதிகமாக கேட்கிறது" என்று தெரிவித்தார். 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.