திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சைகள் தற்போது எழுவரும் நிலையில், அதுதொடர்பாகவும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாகவும் நம்முடைய கேள்விகளுக்கு திமுகவை சேர்ந்த ஐ.லியோனி பதிலளித்துள்ளா். அவரின் அதிடியான பதில்கள் வருமாறு,
திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சைகளை பாஜகவினர் தற்போது கிளப்பியுள்ளனர். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசி தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மேலும் பாரதியாருக்கும் காவிச்சாயம் பூசுவோம் என்று தெரிவித்துள்ளா்கள். அயோத்தி தீர்ப்பு கூட அவர்கள் விரும்பியது போல அமைந்துள்ளது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியதை போல ஒரு முட்டாள்தானமான நிகழ்வு வேறொன்றும் இருக்க போவதில்லை. இது வள்ளுவனுக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம். நாம் பள்ளிகளில் கம்பராமாயணம் உள்ளிட்ட பல நூல்களை படித்திருப்போம். அது இந்து சமயம் தொடர்பான நூல்கள் என்று நம்மிடம் நமது ஆசிரியர்கள் தெரிவித்து இருப்பார்கள். ஆனால் திருகுறளை இந்து நூல் என்று எந்த தமிழாசிரியராவது நம்மிடம் கூறியிருக்கிறார்களா? இவ்வாறு விஷமத்தனமான கருத்துக்களை மதவாதிகள் பரப்புகிறார்கள். இந்த எஸ்.வி சேகர், நாராயணன் போன்ற ஆட்கள் தற்போது திருவள்ளுவரை பற்றி பேசுகிறார்கள். எஸ்.வி சேகர் இல்லாத கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் தான். அந்த கட்சிகளுக்கு இவர் எதுக்கு போகவில்லை என்றால் அவர் அரசியலை விட்டு போன பிறகு இந்த கட்சிகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது. இல்லை என்றால் அந்த கட்சிகளுக்கு அவர் போய்விட்டு வந்திருப்பார். இவர் திருவள்ளுவர் ஒரு இந்து துறவி என்று சொல்கிறார். அவரை ஒரு மதத்தோடு ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். எங்கே குமரியில் உள்ள சிலைக்கு காவி அடிங்களேன் பார்க்கும். அவ்வளவு பெரிய சிலைக்கு நீங்கள் எப்போது ஆடை தைத்து போடுவீர்கள். அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார். நீங்கள் இன்னும் இவ்வளவு கீழானவர்களாக இருக்கிறீர்கள். அடையாளங்களை வைத்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அயோத்தி விவகாரத்தில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதனை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும். அதனை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. இந்த தீர்ப்பின் மூலம் சகிப்புதன்மை அதிகரித்துள்ளதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அதுவே தேசம் எப்போதும் போல இருப்பதற்கு காரணம். அதனை நினைத்து நாம் பெருமை படவேண்டும். ஆனால் ஒரு நாட்டில் சிறுபான்மை சமூகம் ஒடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டதாக கூறக் கூடாது. அது நாட்டிற்கும் ஜனநாயகத்துக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதே அந்த இடத்தில் மசூதி கட்டலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டிருந்தால் பிரதமர் உள்ளிட்டவர்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி இருப்பார்களா? அப்படி எதுவும் நடந்திருக்காது. அதனை ஏற்க கூட மாட்டார்கள்.
சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
கேரளாவை சேர்ந்த அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான தற்கொலைகள் மதத்தின் பெயரால் தில்லி பல்கலைக்கழகத்தில் கூட சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் வேட்டையாடப்படுவது கொடூரமானது. அதனை மத்திய, மாநில அரசுகள் தடுக்க முயற்சி எடுக்க வேண்டும். எனவே , அந்தமாதிரியான சம்பவம் இனி நடைபெறாமல் மாணவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.