Skip to main content

தினகரன்' அலுவலக எரிப்பு! நீதிக்கு துணைநின்ற நக்கீரன்! நீதியரசர்கள் பாராட்டு!

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தமிழகத்தையே பதற வைத்த மதுரை "தினகரன்' பத்திரிகை   ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட  வழக்கில், தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அட்டாக்பாண்டி  உள்ளிட்ட  9 குற்றவாளிகளுக்கு  எதிராக  பத்திரிகை  ஊடகங்கள்  சாட்சி  சொல்லாத  நிலையில்... ஆசிரியர் நக்கீரன்கோபால்,  அப்போதைய  இணையாசிரியர் காமராஜ் அளித்த  சாட்சியங்கள்  கொடூரக் குற்றவாளிகளுக்கு  ஆயுள் தண்டனை  பெற்றுத் தந்திருப்ப தோடு நீதியரசர்களின் பாராட் டையும் பெற்றிருக்கிறது.  
 

attackpandya


 

attackpandyaகலைஞரின் அரசியல் வாரிசு யார்? என்றக் கருத்துக் கணிப்பை 2007 மே 9-ந் தேதி வெளியிட்டது சன் டி.வி. குழுமத் தின் பத்திரிகையான தினகரன். இதனால், ஆத்திரம் அடைந்த அழகிரி ஆதரவாளரும் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக்பாண்டி தலைமையிலான அடியாட்கள்  தினகரன் பத்திரிகை மீது நடத்திய தாக்கு தல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களான கோபி, வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய அப்பாவி ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நக்கீரனில் முதலில் வெளியானது. தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியாகவே நக்கீரன் எடுத்த புகைப்படங்கள்தான் உதவின. அதன்பிறகு, பல்வேறு பத்திரிகை ஊடகங்களிலும் வெளியாகி தமிழகத்தையே பதறவைத்தது. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் ஜெயா டி.வி. நிறு வனத்தினர் உட்பட அனைத்து ஊடகங்களும் அக்கொடூர கொலைக்குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த தோடு, பலர் பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள். 

 

attack pandyaஇந்நிலையில்தான், பத்தி ரிகை ஊழியர்களை எரித்துக் கொன்ற வழக்கின் மேல்முறை யீட்டு மனுவில், அட்டாக்பாண்டி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோ ரைக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அலறிய, சம்பவத்தில் இறந்துபோன உடல்களைப் பார்த்து முதலைக்கண்ணீர் வடித்த, மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலம் சென்ற பத்திரிகையாளர்கள், நீதிமன்றம் அழைப்பாணை கொடுத்தும் சாட்சி சொல்ல முன்வராத நிலையில்... அரசுத்தரப்பு சாட்சிகளான நக்கீரன்கோபால், நக்கீரன் (அப்போதைய) இணையாசிரியர் காமராஜ் (தற்போது இவர் பணியில் இல்லை) இருவரும் நீதிமன்றத்துக்கு வந்து "பத்திரிகையில் வெளியான புகைப்படம் வீடியோக்கள் உண்மைதான்' என்று சொன்ன சாட்சியம்தான் அரசுத்தரப்புக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது'’ என்று குறிப்பிட்டு பாராட்டியிருக்கிறது.


இத்தீர்ப்பை வரவேற்று தனது கருத்தை தெரிவித்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதந்திரம், “மற்ற அனைத்துப் பத்திரிகை ஊடக நிருபர்கள், புகைப்படக்காரர்கள்,  ஜெயா டி.வி. வீடியோகிராபர்கள் உட்பட,  சாட்சி  சொல்ல முன்வராத  நிலையில்...  நக்கீரன்  மட்டும்  சாட்சி சொன்னது வழக்குக்கு வலுவாக அமைந்தது. பாராட்டத்தக்கது. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'’ என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்''’என்று சுட்டிக்காட்டி பாராட்டி யுள்ளார்.

 

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?” - இ.பி.எஸ். விளக்கம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
"Why the By-Election Boycott?" - EPS Explanation

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

"Why the By-Election Boycott?" - EPS Explanation

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.