Skip to main content

கொரோனாவை வீழ்த்தும் பணியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்! 

Published on 27/03/2020 | Edited on 01/04/2020

 

                                   

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க 9 குழுக்களை அமைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய அந்த 9 குழுவும் களத்தில் இறங்கியிருக்கிறது. 

 

ias

                                               ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.       ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ்.


கரோனா தொற்றுவை அழிக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் குழுவில் செந்தில்குமார், அதுல்யமிஸ்ரா, பங்கஜ்குமார் பன்ஜால், சந்தோஷ் கே மிஸ்ரா ஆகிய 4 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். முருகானந்தம், அருண்ராய், அனுஜார்ஜ், அணீஷ் சேகர் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான உற்பத்தியை கண்காணிக்கவும்; தயானந்த கட்டாரியா, ககன்தீப்சிங்பேடி, சந்திரமோகன் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ். அதிகாரியும் இணைந்து மாவட்ட அளவில் அத்தியாவசிய பொருட்கள் சப்ளையாவதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழக ஊடகங்களை ஒருங்கிணைக்கவும் அதனை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட குழுவில் குமரகுருபரன், சங்கர், தீபக்ஜேக்கப் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.  

 

ias

                                                     கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.               பிரபாகர் ஐ.ஏ.எஸ்.
                

அதேபோல, கோபால், நாகராஜன்  ஆகிய 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் தனியார்  மருத்துவமனைகளை ஒருங்கிணைக்கும் குழுவும் ; பிரபாகர், ஜவஹர், தர்மேந்திரபிரதாப்யாதவ் ஆகிய 3 ஐ.ஏ.எஸ்.கள் தலைமையில் போக்குவரத்துகளை கண்காணிக்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட  மருத்துவ வார்டுகளை கண்காணிக்க உமாநாத், ஜெகனாதன், சாம்சன் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

 

ias

                                                                                   அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்.



ஹன்ஸ்ராஜ்வர்மா, ஹர்மேந்தர்சிங், மாணிவாசன் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் மருத்துவமனை கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் குழுவும் ; கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஐ.ஏ.எஸ். ஆகிய 3 அதிகாரிகள் தலைமையில் நிவாரணபணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ குழுக்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள், பாதிக்கப்பட்ட முதியவர்களின் தேவைகளை கவனிக்கும் குழுவும் என 9 குழுக்களை அமைத்துள்ளது எடப்பாடி அரசு. அந்தந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை இன்று முதல் (27.3.2020) துவக்கியிருக்கிறார்கள்.