Published on 21/05/2019 | Edited on 21/05/2019
வியக்கவைக்கும் பல கட்டுமானங்களுக்கு சொந்தக்கார நாடான சீனா, இப்போது, சூரியசக்தி மின்திட்டம் ஒன்றையே பாண்டா கரடியைப் போல வடிவமைத்துள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்திட்டம் 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்கிறார்கள்.
பாண்டா மின்திட்டம் என்று அழைக்கப்படும் இது, 25 ஆண்டுகளில் 320 கோடி கிலோவாட் மணி நேரத்திற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 10 லட்சம் டன்கள் நிலக்கரியை மிச்சப்படுத்தி, 274 லட்சம் டன் கார்பன் காற்றில் கலப்பதை தவிர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற பாண்டா திட்டங்கள் மேலும் உருவாக்கப்படும் என்றும், முழுமையாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது 1500 ஏக்கர் அளவுக்கு பரவியிருக்கும் என்று சீனா மெர்ச்சண்ட்ஸ் நியூ எனெர்ஜி குரூப் தெரிவித்துள்ளது.