அமெரிக்க அதிபரின் அந்த தைரியம்!
எத்தனை இறக்குமதிக்கு சுங்கவரியை நீக்குவீர்கள்? சைனாவினுடைய அத்தனை இறக்குமதிக்கும் சுங்கவரியைக் குறைத்திட வேண்டும். நாங்கள் இதிலெல்லம் குறைக்கிறோம். உங்களுடன் நாங்கள் வர்த்தகம் பண்ணிக்கொள்கிறோம். டெக்னாலஜிக்கு நாங்கள் திறந்துவிடுகிறோம். எங்களுடைய பொருள்களுக்கு சைனா நீங்களும் கொஞ்சம் திறந்துவிட வேண்டும். இப்படித்தான் பேசியிருப்பார்கள். மற்றபடி, பொலிடிகல், ஜியொ-பொலிடிகல், எகனாமிக்ஸ் இந்த 3 லெவலிலும் இன்றைக்கு நாம் இல்லை. ஆனால்.. இந்தியா கண்டிப்பாக சைனாவின் நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நமது பிரதமர்..? ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “என் நாட்டு மக்களுக்கு நான் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன். என்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் நான் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறேன். என் நாட்டு மக்களுக்குத்தான் கல்வியிலும் ஹெல்த்லயும் முன்னுரிமை. அதற்குப்பிறகுதான் வெளிநாட்டு குடிமகன்கள். அடுத்ததுதான் அகதிகள்..” என்று தைரியமாகச் சொன்னார்.“என் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறேன். அதனால்தான், நான் இன்றைக்கு இந்தியாவுடன் கை கொடுக்கிறேன்.” என்றார். அப்படி நாம் சொல்ல முடியுமா? சொல்லமுடியாது.

பகடைக்காய்களாக உருட்டப்படுகிறோம்!
வெளிநாட்டு முதலீடுகள்.. இந்தியாவிலிருந்து குறிப்பாக JSW அதிகமாக முதலீடு செய்கிறது. எங்கள் நாட்டு இளைஞர்களுக்கு குறிப்பாக அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறோம் என்று சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. இதையெல்லாம் சொல்லக்கூடிய அளவில், இந்திய பிரதமர் அடுத்த 10 ஆண்டுகளில் சைனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள டிரேட் பாலன்ஸை நாங்கள் ஜீரோவாக்கி காண்பிக்கிறோம். உங்களோடு கை குலுக்குகிறோம். உங்களோடு சேர்ந்து இந்த ஏசியா.. ஏசியன்.. ஈரோப்பியன் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளுமே ஒரு வலிமையான நாடாக, நட்பு நாடுகளாக இரண்டு நாடுகளுமே மாறுவோம். இரண்டு நாடுகளையும் பகடைக்காயாக சில சில்லறை நாடுகள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதை நாம் மாற்றுவோம்.

உலகையே கட்டியாளலாம்!
ஒரு equal peddaling stage- ஐ சைனாவும் இந்தியாவும் அடுத்த 10 ஆண்டுகளில் அமைத்துக்கொடுப்போம் என்று சொன்னால்.. அடுத்த 10 ஆண்டுகளில் நிச்சயம் வராது. 30 ஆண்டுகளில் சைனாவும் இந்தியாவும் ஒரே லெவலில் வரும். அது உலகத்தையே கட்டி ஆளக்கூடிய ஒரு ஜாய்ன்ட் ஃபோர்ஸ் ஆக மாறக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால். அது நடக்குமா என்று தெரியவில்லை. அது எல்லாமே நமது பிரதமரின் கைகளில்தான் இருக்கிறது. அவர் எந்த அளவுக்கு இந்தியாவை அதிகமாக பொசிஷன் பண்ணுகிறாரோ? அங்கே போய் நான் டாய்லெட் கட்டி கொடுத்தேன்னு சொன்னா பிரயோஜனம் கிடையாது. அதனால், இந்தியாவினுடைய strength-ஐ maximize பண்ணி, இந்தியாவை நான் இப்படி உருவாக்குவேன் என்று சொல்லி, அதைச் சைனாவுடன் சேர்ந்து எப்படி செய்வோம் என்று strategic ஆக பிளான் பண்ணினால் கண்டிப்பாக அது நடக்கும்.

இருவருடைய பேச்சுவார்த்தையும் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ஆற்றல், நீர், சுற்றுச்சூழல், தொழில் விவசாயம் என பல்வேறு நிலைகளில் இந்தியாவும், சைனாவும் இணைந்து, தொழிநுட்பத்திலும், அறிவியலிலும், வர்த்தகத்திலும் கூட்டு ஒப்பந்தம் மூலமாக, உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவில் வளர்ந்து நிற்கச் செய்யும். அப்படிப்பட்ட சூழ்நிலையை நமது பிரதமரும் சைனா அதிபரும் உருவாக்குவார்கள் என்று நம்புவோம்.” என்றார் எதிர்பார்ப்புடன்.
‘கனவு காணுங்கள்’என்று அப்துல்கலாம் சொன்ன மந்திர வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறார் வெ.பொன்ராஜ்.
முந்தைய பகுதி:
சீனா எங்கே? இந்தியா எங்கே? தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேட்டு!- பகுதி: #3