காவிரியில் தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில் 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:-
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடுவர் மன்றத்தில் பல வருடங்களாக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்த பிரச்சனையில் தமிழகம் கேட்டது 264 டி.எம்.சி. ஆகும். ஆனால் நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. தற்போது 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும் என்பது கவலை அளிக்கிறது.
அதேநேரத்தில் காவிரி ஆற்றை உரிமை கொண்டாட முடியாது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முழுமையான தகவல் வந்த பிறகு இதைப்பற்றி விரிவாக பேசலாம். காவிரி நதிநீர் பிரச்சனையில் இதுவரை மத்திய அரசாங்கம் எந்த உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அதனால்தான் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இனியாவது தமிழகம் பாதிக்காத வகையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.