Skip to main content

ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?; பலப்பரீட்சையில் வேட்பாளர்கள்!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Candidates preparing for multiple exams for Rahul Gandhi? Modi?

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். தொடர்ந்து, 2004, 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். 

இருப்பினும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினரானார். இந்த மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் முதல் சுற்று நிலவரப்படி முன்னிலை வகித்து வருகிறார். 

அதே போல், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதி பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தேர்தலில், மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில், அஜய் ராய் போட்டியிடுகிறார். பா.ஜ.கவைச் சேர்ந்த அஜய் ராய் கடந்த 2007ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.  2014, 2019, 2024 என தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் முதல் சுற்று நிலவரப்படி அவர் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு வகித்து வருகிறார். தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து வரும் நிலையில், முக்கிய வேட்பாளர்களாக இருக்கும் ராகுல் காந்தி முன்னிலையிலும், மோடியிலும் பின்னடைவும் அடைந்து வருவது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது

சார்ந்த செய்திகள்

 

Next Story

ராகுல் காந்தி பிறந்த நாள்; நலத்திட்ட உதவிகளை வழங்கிய காங்கிரஸ் 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Congress has provided welfare assistance on the occasion of Rahul Gandhi's birthday

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தி எம்.பி பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் வடக்கு மாவட்டம் முழுவதும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, தா.பேட்டை, உப்பிலியபுரம், தொட்டியம். புள்ளம்பாடி உள்ளிட்ட 11 வட்டாரங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது. சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் பஸ் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள  பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து பட்டத்தம்மாள் தெருவில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனாம்பாள், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பிரமிளா, மகளிர் அணி சுதா, வட்டார தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுக்குழு அப்துல் காதர், சேவாதளம் தெற்கு மாவட்ட தலைவி லட்சுமி, சேவா தளம் வடக்கு மாவட்ட தலைவி மேரி ஆஷா, வட்டார பொறுப்பாளர் செல்வம், மண்ணச்சநல்லூர் நகர பொறுப்பாளர் பாட்ஷா, நிர்வாகிகள் செல்வராஜ், மாசிலாமணி, பழனியாண்டி, கணேசன், மூர்த்தி, சந்தியாகு அலெக்ஸாண்டர் உட்பட திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட தலைவர் திருச்சி கலை கலந்து கொண்டு கட்சிகொடி ஏற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Next Story

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு; பரபரப்பு சம்பவம்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Shoes thrown at PM Modi's car in varanasi

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 291 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா 234 இடங்களை கைபற்றியது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் தனித்து 99 இடங்களைக் கைபற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. 

பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு நேற்று (18-06-24) சென்றார். அங்கு நடைபெற்ற ‘பிஎம் கிசான் சமேலன்’ என்கின்ற விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி உதவி செலுத்தும் திட்டத்தின் 17 வது தவணையாக 20000 கோடி ரூபாயை விடுவித்தார். இதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரில் வருவதைக் கண்ட பொதுமக்களும், பா.ஜ.க தொண்டர்களும் சாலையோரம் நின்று கையசைத்து வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்த போது பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு ஒன்று விழுகிறது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், காரில் இருந்த செருப்பை எடுத்து தூக்கி எறிகிறார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.