/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3396.jpg)
வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் நடந்த தள்ளுமுள்ளு வாக்குவாதம், அதை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தேசியக்கொடி போட்ட கார் மீது செருப்பு வீச்சு விவகாரம் பதற்றப் பரபரப்பை உருவாக்கியது. மதுரையில் தி.மு.க.வினர் ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம், ஆங்காங்கே அண்ணாமலை, டாக்டர் சரவணன் படம் எரிப்பு என்று கொந்தளித்தனர். இதையடுத்து, டாக்டர் சரவணன் ஆவேச பேட்டியளித்தார். சில மணிநேரம் கழித்து, சரவணன் தனது மருத்துவமனையின் பின்பக்கம் வழியாக வெளியேறிய தகவல் கசிந்தது. அங்கே பாதுகாப்புக்காக நின்ற பா.ஜ.க.வினரில் ஒருவர் கூட இல்லை.
இரவு 12 மணியை தாண்ட பாஜக டாக்டர் சரவணன் அமைச்சர் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்க வந்துவுள்ளார் என்ற தகவல் வர... நாம் அங்கு சென்றோம் அமைச்சரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சரவணன், "நடந்த சம்பவத்திற்க்கு அமைசர் பி.டி.ஆர்.தியாகராசனிடம் வருத்தம் தெரிவித்தேன் என்னால் மதவாத அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. அது என்னால் விரும்பதக்கதாக இல்லை அதனால் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன். தாய் கட்சியில் மீண்டும் இணைந்தால் தவறில்லை, வேறு எதுவும் கேட்காதீர்கள்'' என்று காரில் ஏறிப் போனார்.
ஒரு சில மணி நேரங்களில் என்ன நடந்தது?
மு.க.அழகிரி ஆதரவாளர் ஒருவர் நம் லைனுக்கு வந்தார். "எல்லாம் எங்க அண்ணன் போட்ட ஸ்கெட்ச்தான். ஏர்போர்ட்டில் நடந்த அந்த சம்பவத்தை அழகிரி அண்ணன் பார்த்ததும் மிகவும் கொதித்துப்போனார். சரவணன் முதலில் கொடுத்த பேட்டியும் கொந்தளிப்பாக்கியது. உடனே டாக்டர் சரவணனின் மாமனார் சேதுராமனுக்கு போனை போட்டு, "நாளைக்கு விடியறதுக்குள்ள உங்க மருமகன் மன்னிப்பு கேட்கணும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. விலகி இருந்தால் எதற்கும் வரமாட்டேன் என்று நினைக்காதீர்கள்"னு கோபப்பட்டார். அதற்கப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என்றார் அந்த ஆதரவாளர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1090.jpg)
நாம் பி.டி.ஆர். வீட்டில் இருந்த சில தி.மு.க.வினர்களிடமும் விசாரித்ததில், "அழகிரி கோபப்பட்டதெல்லாம் தெரியவில்லை. தலைமை மிகவும் கோபமாக இருந்தது நிஜம். முதல்வரில் ஆரம்பித்து சபரீஸன், உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சு வரை லைன் பிஸியாக இருந்தது. சபரீசன் ஒவ்வொரு நிகழ்வையும் அப்டேட் செய்தபடி இருந்தார். சரவணனுக்கும் தொடர்ந்து போன்கால்கள். அப்புறம்தான் அமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கேட்டார். சரவணனை சந்திக்க முதலில் ஒப்புக்கொள்ளாத அமைச்சர், பின்னர் சபரீசனிடமிருந்து போன் வந்த பிறகே, சரவணனை வரச்சொல்லியிருக்கிறார்.
நாம் சரவணனிடம் பேசினோம். "விரைவில் தலைவரை சந்திக்க உள்ளேன். பா.ஜ.க.வில் மனமும் கொள்கையும் ஒப்பாமல்தான் பயணித்தேன். தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன்'' என்றவர், பா.ஜ.க.வின் மதவாத அரசியல் பற்றியும் விளக்கினார். தமிழக பா.ஜ.க.வை பொறுத்தவரை இரட்டைத் தலைமைதான். அண்ணாமலையால் எந்த முடிவும் எடுக்க முடியாது எல்லா முடிவுகளுமே தமிழக ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியரான ‘கேசவவிநாயம்’ வைத்ததுதான் எல்லாமே. அவர் அண்ணாமலைக்கு விடும் உத்தரவுபடிதான் எல்லாம் நடக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_345.jpg)
ஒவ்வொரு மாதமும் என்ன செய்யவேண்டும் என்று சார்ட்டே அங்கிருந்துதான் வருகிறது அதற்கு ஒரு சம்பவம் உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் மேலூரில் ஒரு முஸ்லிம் பையனும் இந்து பெண்ணும் காதலித்து திருமணம் செய்ய இருந்த போது, அதற்கு இரு தரப்பும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண் தூக்குப்போட்டு இறந்துபோக, அந்தப் பையனும் மருந்து குடிக்க, அவர் பிழைத்துகொண்டார். இதை கையில் எடுத்த பா.ஜ.க.வினர் அந்தப்பெண்ணின் "தாயிடம், முஸ்லிம் மதத்திற்கு மாறச் சொன்னார்கள் அதனால்தான் என் மகள் தூக்கு போட்டு இறந்தது' என்று சொல்லச் சொல்லி வாக்குமூலம் வாங்கச் சொன்னார்கள். நானும் கேட்டேன். "அப்படியெல்லாம் இல்லை... நாங்கள் தாயா பிள்ளையாக பழகுறோம்'னு அந்தப் பெண்ணின் தாய் மறுக்க... நான் பின்வாங்கினேன். இது என் மனதை மிகவும் பாதித்தது.
அன்றிலிருந்து ஆர்.எஸ்.எஸ். விநாயகம் என்னை ஓரங்கட்ட ஆரம்பித்தார்'', என்றவரிடம்... "அழகிரி உங்கள் மாமனார் சேதுராமனிடம் பேசியதாக் சொல்கிறார்களே?'' என்றோம். "அப்படி எல்லாம் இல்லை. என் மனசு கேட்கவில்லை நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. என்னை மீறி எனக்குப் பின்னால் ஏதோ சதி நடந்திருக்கிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தேன். என்னால் பா.ஜ.க.வில் தொடர்ந்து பயணிக்க முடியாது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)