Skip to main content

மல்யுத்தத்தில் மெர்சல் செய்யும் இந்திய பெண்கள்! 

Published on 03/03/2018 | Edited on 03/03/2018

கிரிகிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கிக்கில் மல்யுத்தத்திற்கான 'சீனியர் ஏசியன் சாம்பியன்ஷிப் ' போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 28 வயதான நவ்ஜோட்  கவுர், பெண்களுக்கான 65 கிலோ எடை  பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

novjot kaura

இந்தியாவின் கவுர், ஜப்பானை சேர்ந்த மியா இமாய்யை  இறுதிப்போட்டியில் நேற்று எதிர் கொண்டார். இதில் 9-1 கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வென்றார்.  சீனியர் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார், நவ்ஜோட் கவுர். இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசியன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளியும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளில் வெண்கலமும் வென்றுள்ளார்.

shakshi malik

இதே போல் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்க்ஷி மாலிக் பிலே ஆஃப் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ஆயுலிம் கஸ்மிவாவை எதிர்கொண்டார்.  இதில் 10-7 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

vinesh phogat

50 கிலோ பிரிவில் வினிஷ் போகட் சீன வீராங்கனை சுன் லீயிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் தங்கத்தைப் பறிகொடுத்து  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.  

sangeetha bohat

59 கிலோ பிரிவில், சங்கீதா போகட் கொரிய வீராங்கனை ஜியுன் உம்மை 9-4 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியா மொத்தமாக 6 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் தங்கம் ஒன்று, வெள்ளி ஒன்று, வெண்கலம் நான்கு என்று பெற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 8ஆம் இடத்தில் உள்ளது. இதில் 12 பதக்கங்கள் வென்று சீனா முதிலிடத்தில் உள்ளது. 

இதில் பதக்கம் வென்றுள்ள வினிஷ் போகட் மற்றும் சங்கீதா போகட் சகோதரிகளாவர். இவர்களின் கதையை மையமாகக்கொண்டுதான் உலகையே கலக்கிய திரைப்படமான "டங்கல்" படம் எடுக்கப்பட்டது.