Skip to main content

அமேசானில் 'ஷாப்பிங்' செய்த கிளி !

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
அமேசானில் 'ஷாப்பிங்' செய்த கிளி !

 


பட்டி - அலெக்சா கருவி - கோரியன்

தெற்கு  லண்டனில் வாழும்  கோரியன் எனும் 39 வயது பெண்மணியின் செல்லப் பறவை பட்டி (buddy)  என்ற   ஆப்பிரிக்க சாம்பல் கிளி. கோரியன், வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு, 250 டாலர் மதிப்புள்ள அமேசான் அலெக்சா என்னும் கருவியை இயக்கி  அந்த கருவியுடன் உறையாடி உள்ளது பட்டி. இந்த அமேசான் அலெக்சா என்பது, கணினி இல்லாமல் பயன்படுத்துபவரின் குரல் மூலமே இயக்கி, தேவையான பொருளை வருவிக்கப் பயன்படுத்தப்படும் கருவி. இதை அமேசான் நிறுவனமே அறிமுகப்படுத்தி, விற்கிறது.
    


  'அமேசானில் பரிசுப் பெட்டிகள்  ஆர்டர்  செய்யப்பட்டுள்ளது' என்று கோரியனுடைய   லேப்டாப்பிற்கு அறிவிப்பு வந்துள்ளது . தன் கணவன் மற்றும் மகனிடம்  விசாரித்த போது அவர்கள் ஆர்டர்  செய்யவில்லை என்று அறிந்தார்  கோரியன். கடைசியில்தான் தெரியவந்தது இந்த வேலையை செய்தது,  அவர்கள் வளர்க்கும்  கிளியான பட்டி   என்று. எப்போதோ அவர் பேசியதைக் கேட்ட கிளி,  அப்படியே பேசி 15 யூரோ மதிப்புள்ள கிஃப்ட்   பாக்ஸ்  ஆர்டர் செய்துள்ளது. கோரியனின் கிளி, அவரது குரல் மட்டுமல்லாமல், அவர்கள் வளர்க்கும் செல்லப் பூனை உள்பட பல குரல்களில் பேசும் திறமை வாய்ந்ததாம்.   




இதனைத்  தொடர்ந்து அந்தக் கிளி  பேசுவதையும், மிமிக்ரி செய்வதையும் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் போட்டதால் தற்போது 'பட்டி'  வைரல் ஆகி வருகின்றது. இதுகுறித்து  அமேசான் செய்தி தொடர்பாளர், "அலெக்சா கருவியில் பேசுவது மூலம் ஆர்டர் செய்யும் சேவையை பயன்படுத்தாத பொழுது அணைத்து  வைக்கலாம். மேலும் அதற்கு கடவுச்சொல் அமைத்து   விட்டால் இது போன்று நடப்பதைத் தவிர்க்கலாம். அதையும் தாண்டி, வாங்கிய  பொருட்களை குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தக்  கட்டணமுமில்லாமல் திருப்பியளிக்கலாம்" என்று  கூறினார். மனிதர்கள் தொழில்நுட்பம் பயன்படுத்துவது  போல் தற்போது பறவைகளும்,விலங்குகளும் பயன்படுத்தத்  தொடங்கிவிட்டன. நம்மைப் போலவே சலுகையை (offer) நம்பி ஏமாறாமல் இருந்தால் சரி !


சந்தோஷ்  

சார்ந்த செய்திகள்