2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக செயற்குழு பரபரப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்மானங்களில் அந்தப் பரபரப்பு காணப்படவில்லை. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவராலும் சேர்ந்து வடிவமைக்கப்பட்ட இந்த தீர்மானங்களில் மத்திய அரசை விமர்சித்து பல தீர்மானங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
கரோனா காலத்தில் ஜி.எஸ்.டி. வரி பாக்கியை மத்திய அரசு தராதது, நீட் தேர்வை நடத்தியது என மத்திய அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இ.பி.எஸ். அடுத்த முதலமைச்சர் என்றோ, ஓ.பி.எஸ். கட்சியின் பொதுச்செயலாளர் என்றோ எந்த தீர்மானமும் இல்லை. ஆனால் செயற்குழுவில் நடைபெறும் விவாதத்தில் இந்தப் பிரச்சனை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்களால் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அதிமுகவின் செயற்குழு அடுத்தக் கட்ட பரபரப்பிற்கு நகர்ந்து சென்றிருக்கிறது.