அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்திருக்கிறார் செந்துறை (வடக்கு) திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி.
''தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் எந்த கூட்டணியாக இருந்தாலும் தன்னை வைத்துதான் கூட்டணி பேசுவார்கள் என்று இருமாப்பில் இருந்த தேமுதிகவுக்கு இந்த தேர்தல் கூட்டணி பேச்சு நல்ல பாடத்தை கொடுத்திருக்கிறது.
தன்னைத்தான் முதலில் அழைத்து பேசுவார்கள் என்று இருந்த தேமுதிகவை அழைத்து பேசாமல் பாஜகவுடன் பேசி 5 சீட்டும், பாமகவுடன் பேசி 7+1ம் முடித்ததால் கொதித்துப்போன பிரேமலதா பொங்கி எழுந்தார்.
''ஜெயலலிதா எங்களோடு கூட்டணி வைத்ததால்தான் முதலமைச்சர் ஆனார். தமிழ் நாட்டில் 3வது பெரியகட்சியான தேமுதிகவை அழைத்து பேசாமல் பாமகவை முதலில் அழைத்து பேசியது எந்த விதத்தில் நியாயம்?'' என பாஜக மந்திரியிடம் சுதீஷ் மூலம் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், ''அவர்களுக்கு கொடுத்த அளவுக்கு எங்களுக்கும் சீட்டு கொடுக்க வேண்டும்'' என்றும் ''அதே மரியாதையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும்'' என்றும் கேட்டிருக்கிறார்.
இப்படி பேச்சுவார்த்தை நீளவே மோடி சென்னை வந்த அன்று திமுகவோடும், அதிமுகவோடும் ஒரே நேரத்தில் தேமுதிக பேசியது ஊடகங்கள் மூலம் தெரியவே பாஜகவினர் அதிர்ந்து இப்படி ஒரு கேபலமான கட்சியை இந்தியாவிலேயே நாங்கள் பார்த்தில்லை என கூறிவிட்டு சென்று விட்டனர்.
மறுநாள் எப்படியாவது அதிமுகவோடு சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கத்தோடு சுதீஷும், பிரேமலதாவும் மாறி மாறி ஊடகங்கள் மூலம் செய்தி கொடுத்து அதிமுகவுடன் இணையும் முயர்ச்சியை கையாண்டனர். அவர்களும் 18 சட்டமன்ற தொகுதியை மனதில் வைத்து தேமுதிகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டனர்.
நோட்டு மட்டும் எவ்வளவு வேண்டுமாலும் தருகிறோம், சீட்டு மட்டும் கேட்காதீர்கள் என்ற கட்டளையுடன் 7+1 என கேட்டுக்கொண்டிருந்த தேமுதிகவுக்கு 4 தான் அதுவும் நாங்கள் கொடுக்கும் தொகுதிதான் என மொட்டையடித்து முடித்து விட்டார்கள்.
பிரேமலதாவோ சீட்டு அதிகம் வாங்கி கட்சிக்காரர்களுக்கு கொடுத்தாலும் பதவிக்கு வந்ததும் நம்ம பேச்ச கேட்காம வேறு இடத்துக்கு ஓடிவிடுகிறார்கள். அதனால் சீட்டைவிட நோட்டுதான் முக்கியம் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
எனவேதான் நோட்டாவோடு போட்டி போடும் பாஜக 5 தொகுதியை பெற்றார்கள். 10% வாக்குகள் வைத்திருக்கிறோம் என்கிற தேமுதிக 4 தொகுதியை தவம் கிடந்து பெற்றார்கள்''. இவ்வாறு கூறினார்.