Skip to main content

கஷ்டத்தால் கவர்ச்சி நடிப்பு! - சீரியல் நடிகைகளின் மறுபக்கம்!

ddd

 

சினிமா நடிகைகளுக்குப் போட்டியாக அல்ல, அதற்கும் மேலாகவே டி.வி. சீரியல் நடிகைகள் கவர்ச்சிக் களத்தில் குதித்து கதிகலக்கி வருகிறார்கள். இதற்கெல்லாம் அச்சாரம் போட்ட டி.வி.நடிகை 19 வயதே ஆன ஷிவானி நாராயணன்தான். ஆனால் இப்போது கிளாமர் வாரில் கலக்கி வருபவர்கள் எல்லோருமே கல்யாணம் ஆனவர்கள்.

 

சில சீரியல் நடிகைகள், உடன் நடிக்கும் நடிகரைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சிலரோ தொழிலதிபர்களைக் கரம்பிடித்து வாழ்கிறார்கள். சீரியல் நடிகையை கல்யாணம் பண்ணிய பிறகு, அந்த நடிகருக்கு சீரியல் வாய்ப்புகள் குறையத் தொடங்கினாலோ. தொழிலதிபர்களுக்கு தொழில் டல்லடிக்க ஆரம்பித்தாலோ, அல்லது பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களாலும், குடும்பக் கஷ்டத்தைப் போக்க மீண்டும் நடிக்க வருகிறார்கள், வந்துவிட்டார்கள் டி.வி. நடிகைகள். அப்படிப்பட்ட நடிகைகளின் மறுபக்கம்தான் இங்கே.

 

நீபா

 

கலைஞர் டி.வி.யில் ஹிட்டான ‘"மானாட மயிலாட'’நிகழ்ச்சி மூலம் கலக்கல் டான்சராக டி.வி. ஏரியாவில் அறிமுகமானவர் நீபா. அதற்கடுத்து "விஜய் டி.வி.'யில் ஒளிபரப்பான ‘"காவியாஞ்சலி'’ சீரியலில் நடித்தார். இந்த நேரத்தில் சினிமா வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. சில படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் தலை காட்டிய நீபாவுக்கு ‘"காவலன்'’ படத்தில் "வைகைப்புயல்' வடிவேலுக்கு ஜோடி போட்ட பின்னும் கிளாமர் வேஷங்களே கிடைத்தன.

 

""எனது அப்பாவின் சிகிச்சை செலவுக்கும் குடும்ப கஷ்டத்தைப் போக்கவும்தான் கிளாமர் ரோலில் நடிக்க ஆரம்பித்தேன். கிளாமர் நடிகைகள் என்றால் பலருக்கு வேறு மாதிரி நினைப்பெல்லாம் வருது. என்ன பண்றது... சினிமாவின் முகம் அப்படி''’எனச் சொல்லும் நீபா, 2013-ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, பெண் குழந்தைக்கும் தாயானார். இப்போது என்ன கஷ்ட சூழலோ, மீண்டும் டி.வி. ஏரியாவில் எண்ட்ரியாவதற்காக போட்டோ ஷூட் ஒன்றை சமீபத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

 

பவானி ரெட்டி!

 

ஆந்திரதேசம் இவருக்கு சொந்த மாநிலம் என்றாலும் "சின்னத்தம்பி’, ’"ரெட்டை வால் குருவி',’"நீலக்குயில்',’"ராசாத்தி'’போன்ற தமிழ் சீரியல்கள்தான் இவருக்கு வாழ்வு கொடுத்தது. 2017-ல் பிரதீப்குமார் என்ற தெலுங்கு சீரியல் நடிகரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் பவானி ரெட்டி. பிரதீப்புக்கு என்ன கஷ்டகாலமோ, கல்யாணமான ஒரே வருடத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

 

குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வருமானம் இல்லாததால், தொழிலதிபர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பவானி ரெட்டி, இப்போது சினிமாவிலும் நடிக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளார். "வம்சம்'’, "மெட்டி ஒலி', ‘"கல்யாணப் பரிசு'’ சீரியல்களின் வில்லி கிருத்திகாவும் பவானியும் செம திக் ஃப்ரண்ட்ஸ்.

 

சமீபத்தில் பவானி ரெட்டியின் பிறந்த நாளன்று, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்து திக்குமுக்காட வைத்தார் கிருத்திகா. இந்த கிருத்திகாவும் திருமணத்திற்குப் பின்னும் நடிப்பதில் மும்முரமாகி விட்டார்.

 

மகேஸ்வரி

 

"சன் மியூசிக்' சேனல்தான் இவருக்கு எண்ட்ரி கார்ட். அதன்பின் "ஜீ தமிழ்' டி.வியின் தொகுப்பாளினியாக கலக்கிய மகேஸ்வரிக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் ஆகி, இப்போது ஆறு வயதில் மகன் இருக்கிறான். சிம்பு உட்பட பல சினிமா பிரபலங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் மகேஸ்வரி, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அதிரடி கிளாமர் காட்டி, நான்கு போட்டோ ஷூட்களை ரிலீஸ் பண்ணிவிட்டார். பெங்களூருக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து பணம் சம்பாதிக்கிறார் மகேஸ்வரி.

 

சித்ரா

 

"மக்கள் டி.வி.' மூலம் எண்ட்ரியாகி, "ஜெயா டி.வி.', "கலர்ஸ் டி.வி.', "ஜீ டி.வி.' என ஒரு ரவுண்ட் வந்த சித்ராவுக்கு "விஜய் டி.வி.'யில் ஒளிபரப்பாகும் ‘"பாண்டியன் ஸ்டோர்'’ முல்லை கேரக்டர்தான் எல்லையில்லா பேர் வாங்கிக் கொடுத்தது.

 

சித்ராவுக்கும் ஹேமந்த் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னும் நடிப்பதற்கு ஹேமந்த் ஓகே சொல்லிவிட்டதால், சித்ராவும் செம ஹாட் போட்டோஸ்களை ரிலீஸ்பண்ணி கலக்கி வந்தார்.

 

இந்த நிலையில்தான் டிசம்பர் 9 அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

-ஈ.பா.பரமேஷ்வரன்

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !