wromg call

""ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளால் நாடே பரபரத்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியினர் உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.''’’

Advertisment

""ஆமாம்பா, அதே சமயம் எடப்பாடி பலத்த அப்செட்டில் மூழ்கியிருக்காரே.''’’

""உண்மைதாங்க தலைவரே, தேர்தல் முடிவு வரும்வரை குறைந்த பட்சம் 12 சீட்டுகளாவது வருவோம்ன்னு சொல்-க்கொண்டிருந்த எடப்பாடி, தமிழகத்தில் மகத்தான வெற்றிச் சூறாவளியாக, தி.மு.க. கூட்டணி எழுந்திருப்பதைக் கண்டு ரொம்பவே அப்செட் ஆயிட்டார். போதாக்குறைக்கு, எடப்பாடியிடம் பேசிய அ.தி.மு.க. சீனியர்கள் பலரும், "நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும்'னு நீங்க அறிவிச்சதைப் பார்த்து மகிழ்ச்சி அடைஞ்சோம். ஆனா அதற்கான எந்த முயற்சியிலும் நீங்க ஈடுபடலை. ஆனால் அதுக்கு மாறாக, நாம் பா.ஜ.க.வுடன் வைத்திருந்த கூட்டணியையும் நீங்க வேண்டாம்னு சொன்னீங்க. அப்பவும், நீங்க போடும் கணக்கு சரியாத்தான் இருக்கும்னு நினைச்சி, உங்க முடிவுகளுக்குத் தலையாட்டினோம். ஆனால் எல்லாமே இப்ப தவிடு பொடியாடிச்சி. இந்தத் தேர்தல் தோல்வியால் எங்களால் வெளியில் தலைகாட்டவே முடியலைன்னு வருத்தப்பட்டிருக்காங்க.''’’

Advertisment

""அதுக்கு எடப்பாடி என்ன சொன்னாராம்?''

""ஆமாங்க. நல்லது நடக்கும்ன்னு நினைச்சிதான் சில முடிவுகளை எடுக்குறோம். ஆனால் அது சரியா வரலைன்னா என்ன பண்றது?ன்னு அந்த சீனியர்களிடம் திருப்பிக் கேட்ட எடப்பாடி, பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம்னு நான் மட்டுமா சொன்னேன். "நீங்களும்தான் சொன்னீங்க. பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நம்மை மதிக்கவே மாட்டேங்கறார்'னு எல்லோரும் வருத்தப்பட்டீங்க. அதனால், உங்க எல்லோரின் கருத்தையும் ஏற்றுக்கொண்டுதான் பா.ஜ.க.வுடன் இனி எந்த உறவும் வேண்டாம்ன்னு அறிவிச்சேன். ஆனால், நிலைமை இப்படி ஆகும்ன்னு நினைக்கலைன்னு வருத்தப்பட்டிருக்கார். அப்ப, சீனியர்கள் சிலர், இது உங்கள் தலைமை மீது எங்க எல்லோருக்கும் அவ நம்பிக்கையை ஏற்படுத்துதுன்னு அவரிடம் நேரடியாகவே சொல்ல, எடப்பாடி இதைக்கேட்டு ரொம்பவே நொந்து போயிருக்கார். அவர்கள் இப்படி எடப்பாடியிடம் சொன்னதோடு நிற்காமல், மற்ற கட்சி நிர்வாகிகளையும் எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்களாம். அதனால் அ.தி.மு.க.வில் தனக்கு எதிரான பூகம்பம் எப்ப வெடிக்குமோங்கிற திகி-ல், எடப்பாடி இப்ப பரிதவிக்கிறார்னு சொல்றாங்க.''’’

""முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமலே காவல்துறையில் பல முடிவுகள் எடுக்கப்படுகிறதுன்னு சர்ச்சைகள் கிளம்புதே?''’’

""உண்மைதாங்க தலைவரே, காவல்துறையில் கருப்பு ஆடுகளாக இருக்கும் சில அதிகாரிகள், இன்னும் ஜெ.’மற்றும் எடப்பாடி விசுவாசிகளாகவே இருக்கிறார்களாம். அவர்கள் தங்கள் விருப்பம்போல் விளையாடவும் செய்கிறார்களாம். குறிப்பாக, வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, விசாரணை என்ற பெயரில் அப்பாவி மலைவாழ் மக்களை சித்ரவதை செய்தும், மலைவாழ் பெண்களை வன்புணர்வுக்கு ஆட்படுத்தியும் பேயாட்டம் போட்ட, காவல்துறை அதிகாரிகளில் சிலர் இப்போதும் தெனாவெட்டாக உலா வருகிறார்கள். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய மோகன் நிவாஸ் என்ற அதிகாரி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. இது, அவரால் பாதிக்கப்பட்ட மக்களை மனரீதியாக அதிகம் பாதித்திருக்கிறது.''’’

""ம்''’’

""அப்படிப்பட்ட அந்த வில்லங்க அதிகாரிக்கு தமிழக அரசில், அவர் ஓய்வுபெறும் சமயத்தில், அவர் செய்த பாவங்களுக்கு வெகுமதி கொடுப்பது போல, பதவி உயர்வையும் கொடுத்து, மிக மரியாதையாக அவரை ஓய்வு பெற அனுமதிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, வீரப்பன் விவகாரத்தில் ஜெயலலிதாவிக்கு ஆதரவாகவும், கலைஞர் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் பல வகையிலும் நடந்துகொண்டதோடு, நமது நக்கீரன் ஆசிரியரை காட்டுக்குள் வைத்து தீர்த்துக்கட்ட சதி செய்தவர்களில் முக்கியமானவராக இருந்தவர் வால்டர் தேவாரம். அப்படிப்பட்டவர் பொய்யும் புளுகுமாக எழுதிய புத்தகத்தை, காவல்துறை கேன்டீன்களில் இப்போதும் விற்பனை செய்ய அனுமதித்திருக்கிறார்களாம். இதுபோன்ற வில்லங்கங்கள் எல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாமலே, அவர் ஏமாற்றப்படுகிறாரா? என்கிற பேச்சு பரவலாகவே எழுந்திருக்கிறது. இந்த தி.மு,க. ஆட்சியில், ஆட்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் காவல்துறையில் அதிகம் என்கிற டாக்கும் இருக்கிறது.''’’

""நார்வே செஸ் தொடரில் உடன்பிறப்புகளான பிரக்ஞானந்தா, வைஷாலி கலக்குறதைக் கவனிச்சீங்களா தலைவரே''’’

“""ஆமாம்பா, நார்வே செஸ் தொடரின் செஸ் போட்டிகளின் ஏழாவது சுற்று நடந்து முடிஞ்ச நிலையில, ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் நீடித்தனர். இந்தத் தொடரில் உலக செஸ் சாம்பியனாகத் திகழும் கார்ல்சனை மீண்டும் ஒருமுறை தோற்கடிச்சு உலகின் பார்வையைத் தன்பக்கம் திருப்பியிருக்கிறார் பிரக்ஞானந்தா. பிள்ளைகளோட வெற்றியில் பிரக்ஞானந்தா வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்பாபு #நாகலட்சுமி தம்பதிக்கும் கணிசமான பங்கு உண்டு. ஈன்ற பொழுதைவிட தன் பிள்ளைகள் சான்றோர் எனக் கேட்கும்போதே தாய் பெரிதும் மகிழ்ச்சியடைவாள்னு வள்ளுவர் குறள் எழுதியிருக்கார். பிரக்ஞானந்தாவும் #வைஷா-யும் பெற்றோரோட சேர்த்து இந்தியாவையே சந்தோஷத்தில் திளைக்க வச்சிருக்காங்க.''

""அதெல்லாம் இருக்கட்டும், காங்கிரஸ் தரப்பில் அனல் வீசுகிறதே?’’

""விருதுநகர் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யும், காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாக்கூரின் பிறந்த நாள் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. விருதுநகரில் இருந்த அவரை அவரது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் பலரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது, வருங்கால மத்திய அமைச்சர் வாழ்க என்று அவர்கள் முழக்கமிட, அவர்களை அமைதிப்படுத்திய மாணிக்கம் தாக்கூர், இப்படியெல்லாம் கோஷம் போடுவது சரியல்ல என்று அட்வைஸ் செய்திருக்கிறார். அன்று அவர்களிடம் நடந்த ஆலோசனையின்போது, நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் விவகாரம் தொடர்பான சந்தேக வளையத்தில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனுடன், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தொழில் ரீதியாக கைகோர்த்திருக்கிறார் என்றும், அதனால் அந்த வழக்கில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும், கட்சியின் மாவட்டத் தலைவர்களுக்கே இதனால் பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது என்றும் பலரும் மாணிக்கம் தாக்கூரிடம் புலம்பினார்களாம்.''’’

""நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் சோலை ரிசார்ட்டை, பெண் அதிகாரி தலைமையில் முற்றுகையிட்ட ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், ரெய்டு என்ற பெயரில் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். கடைசியில் ’இங்கு எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கிறது’ என்று எழுதிக் கொடுத்துவிட்டு அந்த ரெய்டு டீம் கிளம்பியதாம். எதற்காக இந்த ரெய்டு தெரியுமா? அந்த ஜி.எஸ்.டி. பெண் அதிகாரியின் மகன் தொல்காப்பியன், கொஞ்ச நாட்களுக்கு முன் அங்கே தன் கேர்ள்பிரண்டுடன் வந்து தங்கி, மது அருந்தினாராம். அப்போது போதையேறிய நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட... நெப்போ-யன் அந்தப் பெண்ணைத் தாக்கினாராம். அதில் அங்கிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் டேமேஜ் ஆகிவிட்டதாம். லோக்கல் போலீசார், அந்த நபர் அதிகாரியின் மகன் என்பதை அறிந்து சமரசம் செய்ததோடு ரிசார்ட் தரப்புக்கு நஷ்டஈடும் வாங்கிக் கொடுத்தார்களாம். இதையறிந்த அந்தப்பெண் அதிகாரி, "என் மகனிடமே நஷ்டஈடா?' என்று கொதித்துப்போய்தான், அந்த ரெய்டையே நடத்தினாராம்.''