சேலம் தி.மு.க. எம்.பியான எஸ்.ஆர். பார்த் திபன் மீது அறிவாலயத்தில் அடுக்கடுக்காக புகார்கள் குவிந்துகொண்டிருக்க, மாங்கனி மாவட்டம் பரபரப்பில் முழ்கியிருக்கிறது.
தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க,.வுக்கு இடையில் வந்தவர் பார்த்திபன். இப்போது புகுந்த வீடான தி.மு.க.விற்குள் கலாட்டா அரசியலைக் கையில் எடுத்து கட்சியினரையே மிரட்டிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
குறிப்பாக, சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர னுக்கு எதிராக பார்த்தி களமாடுகிறாராம். இது குறித்து நம்மிடம் விவரிக்கும் ஓமலூர் ஒன்றிய தி.மு.க. உடன்பிறப்பு ஒருவர், "நாலஞ்சி நாளா ஒரு பரபரப்புச் செய்தி பரவிக்கிட்டு இருக்கு. அதாவது எம்.பி. பார்த்திபனின் அடாவடியைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டா லின் அவரைக் கடுமையாகத் திட்டிவிட்டார். அதனால் அப்செட்டான எம்.பி. யாருடைய செல்போன்ல தொடர்புகொண்டாலும் எடுப்பதில்லை. அலுவல கத்துக்கும் வர்றதில்லை’என்பது போன்ற செய்திகள்தான் சமூக ஊடகங்களில் ரொம்பவே வைரல் ஆகிக்கிட்டிருக்கு''’என்று நம் காதைக் கடித்தார்.
இது உண்மையா என சேலம் தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, "கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, எதிர்பாராதவிதமாக பார்த்திபனுக்கு ஜாக்பாட் அடித்தது. சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வழக்கறிஞர் ராஜேந்திரனிடம், "பார்த்தியை ஜெயிக்க வெச்சிடுவீங்கள்ல?'ன்னு கட்சித் தலைமை கேட்க... அவரும், 'உறுதியாக ஜெயிக்க வைப்போம்'னு சொன்னார். அப்போது ராஜேந்திரனுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நேரம். அந்த நிலையிலும் பார்த்திபனுக்காக தேர்தல் வேலைகளை முன் னின்று செய்து, அவரை வெற்றிபெற வைத்தார்.
தொடக்கத் தில் அவர்களுக் குள் உறவு சுமூக மாகத்தான் இருந்தது. பின்னர் ராஜேந்திர னுக்கு எதிராக அரசியல் செய்த வீரபாண்டி ராஜா வுடன் அவர் நெருக்கம் பாராட்டினார். பார்த்திபனின் பிறந்தநாளுக்கு அவரது ஆதர வாளர்கள் 'சேலத்து சிங்கம்', 'மாவீரன்' என்றெல்லாம் அடைமொழியிட்டு போஸ்டர் அடிப்பதும், அந்த போஸ்டர் களை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வின் அலுவலகத்திற்கு எதிரி லேயே வந்து ஒட்டுவதுமான வேலைகளைச் செய்து, அவரைச் சீண்டிப் பார்த்தனர். ஆரவார அரசியல் செய்து பழக்கப்படாத ராஜேந்திரன், பார்த்தியின் நடவடிக்கைகளைக் கொஞ்சமும் ரசிக்கவில்லை.
அதோடு பார்த்திபன், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போதே டெண்டர் விவ காரங்களில் தலையிடத் தொடங்கினார். அதுவும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, ஆய்வு என்ற பெயரில் பொதுப் பணித்துறை அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டத் தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, "சேலத்தில் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்ல கட்டடத்தை ஆய்வுசெய்ய என்னோடு நீங்க வந்தே ஆகணும்'னு பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவரை, பார்த்தி கட்டாயப்படுத்த, இந்த விவகாரம், அமைச்சர் எ.வ.வேலு வரை போனது. இதனால் அந்த அதிகாரி இல்லாமல் பார்த்தி மட்டும் சென்றுவந்தார். எம்.பி. எதிர்பார்த்ததை அந்த அதிகாரி செய்து கொடுக்காததால், தனது ஆதரவாளர்கள் மூலம் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ், அந்த அதிகாரியின் கல்விச் சான்றிதழ்களில் டவுட் கிளப்பி, ஆர்.டி.ஐ.யில் நகல்களைக் கேட்க வைத்து, புது ரூட்டில் குடைச்சல் அவருக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்''’என்றவர்கள், மேலும் அவரைப் பற்றிய ஆதங்கங்களையும் கொட்டத் தொடங்கினர்.
"’சமீபத்தில், சேலத்தில் இருந்து கோயம்புத்தூ ருக்கு மாற்றலாகிச் சென்ற மற்றொரு பொதுப் பணித்துறை உயரதிகாரி ஒருவருக்கும் டெண்டர் தொடர்பாக குடைச்சல் கொடுத்துள்ளார் பார்த்தி. அதோடு, தன் தம்பி அண்ணாமலையை திடீர்ன்னு அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்க வைத்து, அவருக்காக அரசு ஒப்பந் தப் பணிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் ஆர்வம் காட்டுறார். இது ஒருபுறம் இருக்க, கட்சிக் குள்ளும் தன் பராக்கிரமத்தைக் காட்ட, பல்வேறு சித்து வேலைகளையும் அவர் செய்து வருகிறார். மேட்டூர், மேச்சேரி, ஓமலூர் வரை அவர் தனக்கென ஓரளவு ஆதவாளர்களை வைத்திருக்கிறார். அவர்கள் மூலமாக சேலம் மேற்கு மாவட்ட திமுகவில் தன் ஆதிக்கத்தைச் செலுத்த ரொம்பவே மெனக்கெட்டார். ஆனால் அவருடைய பாச்சா, அந்த மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வ கண பதியிடம் எடுபடவில்லை. அதனால், ராஜேந்திரன் பக்கமே தன் சித்து வேலைகளைக் காட்டுகிறார்.
இந்நிலையில்தான், மேட்டூர் அணை திறப்புக் காக சேலம் வந்த அமைச்சர் துரைமுருகனிடம், அரசு ஒப்பந்தங்களில் பார்த்திபனின் தலையீடு களையும் மா.செ.ராஜேந்திரனுடனான அவரது மோதலையும் உடன்பிறப்புகள் சொல்லி வைக்க, டெண்டர் மேட்டர்களில் இனி எப்போதும் நீ தலையிடக்கூடாது. மாவட்ட செயலாளரை அனுசரித்துப் போகணும்னு பார்த்தியை தனது பாணியில் எச்சரித்து விட்டுப் போனார் துரைமுருகன். மேலும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவும், பார்த்திபனை அடக்கி வாசிக்கும்படி அட்வைஸ் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்” அவர்கள் குரலில் சூடு கனன்றது.
அதேநேரம், பார்த்திபன் தரப்பு, மா.செ. ராஜேந்திரன் மீது பதிலுக்குப் புகார்களை அனுப்பிவருகிறதாம். இந்தப் புகார்கள் குறித்து நாம் எஸ்.ஆர்.பார்த்திபனிடமே கேட்டபோது, ''கடந்த இருபது நாள்களாக என் மீது இப்படியான விமர்சனங்களை கட்சிக்குள் கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். என் மீதான மொட்டை பெட்டிசன்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நான் எந்த டெண்டர் விவகாரத்தில் தலையிடுவதும் இல்லை. அதிகாரிகளை நான் மிரட்டவும் இல்லை'' என்றார்.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, ''சார்... மாணவப் பருவத்தில் இருந்தே தி.மு.க.வில் இருக்கிறேன். அப்போது இருந்து இப்போது வரை நான் யார் மீதும் புகார் சொல்லி பழக்கப்பட்டதில்லை. கட்சித்தலைமை என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு என் வேலைகளைச் செய்து வருகிறேன்.'' என அவருக்கே உரிய பாணியில் விளக்கம் அளித்தார்.
"கட்சிக்குள் வெடித்திருக்கும் இந்த மோதல், வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்''’என்கிறார்கள் தி.மு.க.வினரே.
பார்த்திபன் எம்.பி. மீது ஏகத்துக்கும் குவியும் புகார்களைப் பார்த்து அறிவாலயமே திகைத்துப் போயிருக்கிறதாம்.