கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டி காந்தி நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் குணசேகரன். இவர் தன் பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டினார். இவ்வீட்டின் பணிகள் முடிந்த நிலையில், ராஜேஷ்குமார், மோகன்ராஜ், சிவகுமார், கோபால் ஆகிய 4 பேரும் சாரம் அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டு வந் துள்ளனர். அப்பொழுது மோகன்ராஜ் எதிர்பாராதவித மாக கீழே கழிவு நீர்த் தொட்டியில் விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அருகிலிருந்த சிவா மற்றும் மற்ற இருவரும் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்த அவரைக் காப்பாற்று வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர். 4 பேரும் செப்டிக் டேங்க் தொட்டியில் மூச்சுவிட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கரூர் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவ தாகவும், அதற்கு முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சிவக்குமார், 18-ஆம் தேதி கட்ட டத்தை நேரில்சென்று ஆய்வுசெய்து, அந்த கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் ஒட்டினார். கரூர் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர்கள் மரணம் குறித்து தொழில்நுட்ப விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கட்டட உரிமையாளர், கட்டடப் பொறுப்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கரூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 6 வாரங்களுக்குள் தனித்தனியாக தங்களுடைய அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி, வேலைவாய்ப்புக்கான ஆணை, ஓய்வூதியத்திற்கான ஆணை உள்ளிட்டவற்றை உடனடியாக அறிவித்தார்.
ராஜேஷ்குமார், சிவக்குமார் குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரணமும், மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, குழந்தைகளின் கல்விக்கு மாதம் 4 ஆயிரம் உள்ளிட்டவை வழங்கப்பட் டது. அதேபோல் கோபால், மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் நிவாரண நிதியும், மாதம் 6,700 ஓய்வூதியமும், 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை 4 ஆயிரமும் வழங்கப் பட்டுள்ளது.
கோபால் மனைவி விஜயலட்சுமிக்கு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் சமை யலர் பணிக்கான ஆணை, 8.68 லட்சத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தால், தமிழகம் முழுவதும் தொழிலாளர்களின் நிலைகுறித்தும், அவர்கள் பணியாற்றும் சூழ்நிலைகள், அங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.