போடி தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கியுள்ள துணைமுதல்வர் ஓ.பி.எஸ். மக்கள் எதிர்ப்பையும் முக்குலத்தோர் இடையே யான புறக்கணிப்பையும் எப்படி சமாளிப்பதென கவலையடைந்துள்ளார்.

பா.ம.க.வுடனான கூட்டணியை உறுதி செய்ய வன்னியருக்கு 10.5 சதவிகித ஒதுக்கீட்டை எடப்பாடி அறிவித்தார். தன் இடத்தை உறுதிசெய்துகொள்ள சிறையிலிருந்து திரும்பிய சசிகலாவை அ.தி.மு.க. விலிருந்து முற்றிலுமாக ஒதுக்கிவைத்தார். இவை யிரண்டுமே ஓ.பி.எஸ்.க்கு பேரிடியாக அமைந்தன. மேலும் ஓ.பி.எஸ்.ஸின் போடி தொகுதியில் சீர் மரபினர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரு கின்றனர்.

bodi

போடியிலுள்ள குயவர் பகுதியிலுள்ள ஒரு சமுதாயக்கூடத்துக்குச் சென்றபோது அந்த சமூகத்தினர் சமுதாயக் கூடத்துக்குள் நுழைந்து எப்படி ஓட்டுக் கேட்கலாமென ஓ.பி.எஸ்.ஸையும் அவரது மகன்களையும் சிறைப்பிடித்தனர். காவலர்கள் வந்து சமாதானப்படுத்தியபிறகே அவர்கள் அங்கிருந்து வெளியேறமுடிந்தது.

Advertisment

தொகுதி மக்களின் அதிருப்தி காரணமாக பல்வேறு பகுதிகளில் ஓ.பி.எஸ்.க்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதனால் தனக்கு சாதகமான இடங்களில் மட்டும் மைக் மூலம் ஓட்டுக் கேட்கும் அவர், சாதகமில்லாத ராசிங்கபுரம் போன்ற பகுதிகளில் வார்த்தை களைத் தவிர்த்து மௌனமாக இருகை கூப்பி மட்டும் ஓட்டுக் கேட்கிறார்.

தன் தொகுதியிலுள்ள ஜாதிரீதியான பிரபலமான கோவில்களுக்கு லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்து ஓட்டுக்களை வாங்கவும் திட்டமிட்டுவருகிறார் ஓ.பி.எஸ். மேலும் தொகுதியிலுள்ள வாக்காளர்கள் ஒவ்வொரு வருக்கும் தலைக்கு மூவாயிரம் கொடுக்கும் திட்டமிருப்பதாகவும் கட்சிக்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

இதுபோதாதென "சசிகலா மீது தனக்கு சந்தேகமும் இல்லை… வருத்தமுமில்லை… நன்மதிப்புதான் இருக்கிறது' என எடப்பாடியின் அறிவிப்புக்கு எதிராக யூ டர்ன் எடுத்ததோடு, "வன்னியருக்கான இடஒதுக்கீடு தற்காலிகமானதே' எனப் பேசி ராமதாஸின் கோபத்தையும் கிளறியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

Advertisment

இன்னொருபுறம் தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், ஓ.பி.எஸ். குடும்பத்தினரின் சொத்துப் பட்டியலோடு, பத்தாண்டுகளாக தொகுதிக்கு பன்னீர் செல்வம் ஒன்றும் செய்யவில்லையென கடும்பிரச்சாரம் செய்துவர, அ.ம.மு.க. முத்துச்சாமி வேறு ஜாதிய ரீதியிலான ஓட்டுக்களைப் பிரிக்க நெருப்பின்மேல் நிற்பதுபோல் தவித்து வருகிறார் ஓ.பி.எஸ்.