புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற 39 வயது முதுகலை பட்டதாரி பெண், கடந்த 32 வருடங்களாக விபத்து காப்பீட்டுக்காக தொடர் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருவாரூரில் நேரில் சந்தித்தும் மனு கொடுத்திருக்கிறார். இந்த தகவல்கள் அறிந்து, நாம் அவரை சந்தித்தோம்.
"நான் பிறந்தது அறந்தாங்கி பக்கத்தில் உள்ள சுப்பிரமணியயுரம் கிராமம். விவசாய குடும்பம். அப்பா சின்ன வயசுலயே எங்களை விட்டுப் போயிட்டார். அம்மாதான் கூலி வேலை செஞ்சு வளர்த்தாங்க. என்னோட 7 வயசுல 1989 ஜனவரி 20-ந் தேதி எங்க சித்தி எங்க வீட்டுக்கு வந்துட்டு பள்ளிக்கூடம் லீவுக்கு, அவங்க வீட்டுக்கு கூட்டி போனாங்க. 24-ஆம் நம்பர் டவுன்பஸ்ல ஜன்னல் ஓர சீட்ல நான் இருந்தேன்... பக்கத்தில் எங்க சித்தி.
பஸ் அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்பக்கம் சென்று முன்னால போகணும். பின்பக்கம் நிறைய கடைகள் இருக்கும். அதனால எப்ப வுமே நெருக்கடியா இருக்கும். டவுன்பஸ் போகும் போது அந்த சந்தில் ஒரு லாரி கடைகளுக்கு வாழைத் தார் இறக்கிக்கொண் டிருந்தது. பஸ் டிரை வர் மெதுவா போகும் போது என் கை லாரி கயிறு இழுக்கும் ஊக்கில் மாட்டிக் கொண்டு இழுத்து பிஞ்சுருச்சு. அப்பவே எங்க சித்தி கதறிக்கிட்டு என்னை அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு தூக்கிட்டுப் போனாங்க. அங்க முதலுதவி சிகிச்சை மட்டும் கொடுத்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வச்சாங்க. அங்கே சில மாதம் சிகிச்சைக்கு பிறகு காயமடைந்த கையை அறுத்து எடுத்துட்டாங்க. அதுக்கு பிறகு இப்ப வரை ஒற்றை கையோட தான் இருக்கிறேன்.
விபத்துக்கான இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தி ல் வழக்கு நடந்தது. 1994-ல் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பில் "ரூ.95 ஆயிரம் இழப்பீடு வழங்கச் சொன்னவங்க, அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.47,500-ம் லாரிக்கான இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.47,500-ம் கொடுக்கச் சொன்னாங்க. ஆனால் லாரிக்கு இன்சூரன்ஸ் இல்லை என்பதால் லாரி உரிமையாளர்தான் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தாங்க. அரசு போக்குவரத்துக் கழகம் நீதிமன்றம் சொன்ன தொகையை வங்கியில் டெபாசிட் செஞ்சுட்டாங்க. ஆனால் லாரி உரிமையாளர் கொடுக்க வேண்டிய இழப் பீட்டுத் தொகைக்காகத்தான் 39 வயதாகியும் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறேன்.
முதலமைச்சர் பதவியேற்ற பிறகு அவங்க பாட்டியின் நினைவிடத் திற்கு வரும் தகவல் தெரிஞ்சு 100 கி.மீ சென்று முதலமைச்சரை நேரில் பார்த்து மனு கொடுத் தேன். அந்த மனு புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு வந்து மாவட்ட சட்டப் பணி கள் ஆணைக் குழுவிற்கு சென்றுள்ளது. எனக்காக சட்டப் பணிகள் குழுவில் வழக்கறிஞரும் நியமனம் செய்திருக்கிறார்கள். முத லமைச்சர் தலையிட்ட பிறகாவது எனக்கு நீதி கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
ஒற்றைக் கை இல்லாதபோது ஒரு பக்கம் இழப்பீட் டுக்கான போராட்டத் தோடு தொடர்ந்து எம்.ஏ. பி.எட் படிச்சுட்டு, வேலையும் இல்லாமல் தையல் கற்றுக்கொண்டு ஜவுளிக்கடைகளுக்கு தேவையான பைகள் தயாரிக்கிறேன். என் அத்தை மகனை திருமணம் செய்துகொண்டு இப்ப மறமடக்கியில் வசிக்கிறோம். இப்பவும் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோட காத்திருக்கிறேன்'' என்றார்.