""ஹலோ தலைவரே, ரிசல்ட் பற்றி பல கணிப்புகள் ஓடினாலும் தி.மு.க. தரப்பில் கான்ஃபிடன்ட்டா இருக்காங்க.''’’
""கொடைக்கானலில் ஓய்வெடுத்தபடியே ஸ்டாலின் நடத்திய ஆலோசனைகளைப் பற்றி நம்ம நக்கீரனில் வந்திருந்ததே.''’’
""தலைவரே, கோட்டை அதிகாரிகள் தரப்பிலிருந்தே தி.மு.க. தலைமையைத் தொடர்புகொண்டு, எந்த இடத்தில் பதவி ஏற்பு விழாவை வச்சிக்கலாம்? யார் யாரை அழைக்கலாம்? எந்தெந்த மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கணும்னு லிஸ்ட் வச்சிருக்கீங்களான்னு கேட்கிறாங்களாம். அதுக்கு ஸ்டாலின், "இப்பவே அவசரப்பட வேண்டாம்... ரிசல்ட் வரட்டும். தி.மு.க ஜெயித்துப் பதவி ஏற்பு விழா நடக்கும்போது, கொரோனா பரவலைப் பொறுத்து சிம்பிளா நடத்துறதா, பல மாநில முதல்வர்களையும் அழைத்து பிரம்மாண்டமா நடத்துறதான்னு முடிவெடுக்கலாம்'னு சொல்லியிருக்காராம். அதேசமயம், தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இப்பவே பதவியேற்பு பற்றித் தீவிரமா விவாதிச்சிக்கிட்டு இருக்காங்க.''’’
""முதல்வர் எடப்பாடி திடீர்னு மருத்துவமனையில் அட்மிட் ஆனாரே?''’’
""ஆமாங்க தலைவரே, எடப்பாடிக்கு குடல் இறக்கப் பிரச்சினை கொஞ்ச நாளாவே இருந்திருக்கு. தேர்தல் பிரச்சார நேரத்திலும் தொந்தரவு தந்திருக்கு. கொரோனா ஆலோசனை நேரத்தில், லேசா வலி ஏற்பட்ட உடனேயே தனியார் மருத்துவமனையில் எடப்பாடி அட்மிட் ஆகி, அறுவைச் சிகிச்சை செஞ்சிக் கிட்டவரை, 3 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்தி யிருக்காங்க. கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு, வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் விரைவாக குணமடையணும்னு ஜி.கே.வாசன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. டாக்டர் ராமதாசிடமிருந்து உடனடி வாழ்த்து வராததில் எடப்பாடிக்கு வருத்தமாம். டாக்டருக்கு என் மேலே கோபமான்னு சக அமைச்சர்களிடம் விசாரித்தாராம் எடப்பாடி.''’’
""ம்...''’’
""தலைவரே... நம்ம நக்கீரனில் வெளிவந்த கோயம்பேடு நில விவகாரம் பற்றி கூடுதல் டீடெய்ல் சொல்றேன். "பாஷ்யம் பில்டர்ஸ்'’என்ற கட்டுமான நிறுவனம், விறுவிறுன்னு வைரஸ் வேகத்தில் வளர்ந்துக்கிட்டிருக்கு. எங்க பார்த்தாலும் அதன் முதலீடுகள் பாயுது. அதுமட்டும் இல்லாமல், டெல்லிவரை செல்வாக்கை வளர்த்து வச்சிக்கிட்டு ஏகத்துக்கும் சொத்துக்களை வாங்கிக் குவிக்குது. கோயம்பேடு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு "பாஷ்யம்' என்கிற பெயரை வைத்ததிலேயே அதன் செல்வாக்கு புரிஞ்சிருக்கும். அந்த நிறுவனம் சமீபத்தில் கோயம்பேட்டில் அரசுக்குச் சொந்தமான ஒரு இடத்தை வாங்குச்சு.''’’
""அரசு சொத்துன்னா, முறையா டெண்டர் விட்டுத்தானே விற்பனை நடந்திருக்கும்?''’’
""அதான் இல்லைங்க தலைவரே... அரசுச் சொத்தை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை கிளியரன்ஸ் எல்லாம் வாங்கி, பாஷ்யம் பில்டர்ஸுக்கு அதை வித்திருக்காங்க. இந்த விற்பனைக்கு உடந்தையா இருந்தது ஐ.ஏ.எஸ். அதிகாரியான சஞ்சய்குமார் பன்சால். இது மட்டுமில்லாம சகல சித்து வேலைகளையும் அந்த நிறுவனம் செய்துக்கிட்டிருக்கு. இந்த கோயம்பேடு இட விவகாரத்தை தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கிளற... இதைக்கண்டு அதிர்ந்துபோன அந்த பாஷ்யம் பில்டர்ஸ் தரப்பு, ஸ்டாலின் மருமகன் சபரீசன் தரப்பிடம், "எங்களுக்குச் சிக்கல் இல்லாமப் பாத்துக்கங்க'ன்னு பதட்டத்தோடு அணுகியிருக்கு. இதையறிந்த ஸ்டாலின், அந்த பாஷ்யம் பில்டர்ஸ் பத்தி விசாரிக்கச் சொல்லியிருக்கார். கிடைத்த தகவல்கள், அவரையே திகைக்க வச்சிடுச்சாம்.''’’
""ஓ... ரொம்பவும் டீட்டெய்லா தகவலைச் சேகரிச்சிட்டாங்களா?''’’
""ஆமாங்க தலைவரே, அந்த பாஷ்யம் பில்டர்ஸின் நிறுவனர் பெயர் அபிமன்யூ. இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராம். தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானோரின் கரன்ஸிகள், அவர் வழியா, பெரும் பெரும் பிசினஸில் முதலீடுகளாப் போடப் பட்டிருக்குதாம். இதில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., சுகாதாரம் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்ட வர்கள் இந்த லிஸ்ட்டில் உண்டாம். இதில் என்ன வேடிக்கைன்னா, எடப் பாடிக்குத் தெரியாமல் ஓ.பி.எஸ்.சிடமும், ஓ.பி. எஸ்.சுக்குத் தெரியாமல் எடப்பாடியிடமும் தொழில் நெருக்கம் வச்சிருக்காராம் அபிமன்யூ. ஓ.பி.எஸ்.சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப், இவர்கூடவே பெரும்பாலும் இருப்பாராம். பாஷ்யம் நிறுவனம் மேலே நடவடிக்கை எடுத்தாலே, அ.தி.மு.க. அமைச்சரவை மொத்தமும் சிக்கிடும்னு தி.மு.க. தரப்பு நினைக்குதாம்.''’’
""இந்து அறநிலை யத்துறையிலும் பரபரப்பு தெரியுதே?''’’
""ஜக்கி வாசுதேவ், டாக்டர் கிருஷ்ணசாமி, மற்றும் பா.ஜ.க ஆதரவு சக்திகள்னு பல தரப்பிலும் கோவில்கள் குறித்து கேள்வி கேட்குது. இந்து அற நிலையத்துறை ஆணைய ராக இருக்கும் பிரபாகர் ஐ.ஏ.எஸ்., தமிழகம் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கோயில் சொத்துக்களை மீட்பதிலும், குத்தகை நிலத்திற்காக நிலுவைத் தொகைகளை வசூலிப் பதிலும் தீவிர ஆர்வம் காட்டுகிறார். ஆனாலும் அவர் வேகத்துக்கு, அந்தத் துறையில் இருந்து நகர வேண்டிய ஃபைல்கள் பலவும் நகராமல் தேங்கியே இருக்குதாம். இதுக்குக் காரணம், துறையின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் லஷ்மணன், சிவகுமார் ஆகிய இரு அதிகாரிகள்தானாம். எந்தக் கோப்புகளிலும் கையெழுத்துப் போடவிடாமல், அவர் பார்வைக்கே போகாமல் பெண்டிங்கில் வைக்கிறாங்களாம்.''’’
""தேர்தல் முடிவுகள் வெளிவருவதில் தாமதம் இருக்கும்னும் நள்ளிரவுக்குள் முடிவுகள் வந்திடும்னும் தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு சொல்லியிருக்காரே?''’’
""கொரோனா தீவிரமாக இருப்பதால், அதிக கூட்டம் இல்லாதபடி வாக்குச் சாவடிகளைப் பிரிச்சது தேர்தல் ஆணையம். அதுபோலவே, வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் சுற்றுக்களையும் மேஜைகளையும் அதிகரிக்க வேண்டும்ங்கிற கோரிக்கை, தேர்தல் ஆணை யத்துக்கு போயிருக்கு. முந்தைய தேர்தல்களில் அதிகபட்சம் 18 சுற்றுகள்வரை எண்ணப்பட்டிருக்கு. இந்தமுறை கொரோனா அதிதீவிரம் காட்டுவதால், சுற்றுகள் அதிகமானாலும், மேஜைகள் அதிக மானாலும், அதிகம்பேர் அங்கே கூடும்படி ஆகிவிடும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க முடியாது. அதனால் 3 நாளைக்கு முன்னாடியே முறையா கொரோனா டெஸ்ட் நடத்தி, நெகட்டிவ் ரிசல்ட் உள்ளவங்களை மட்டும் அனுமதிச்சு கவனமா கவுன்டிங் பண்ணனும்னு முடிவெடுத்திருக்காங்க. இதனால் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கினாலும் ஒரேநாளில் முடிந்துவிடுமா? இரண்டு, மூன்று நாள் இழுத் தடிக்கப்படுமான்னு கட்சிகள் கவலைப்படுது.''’’
""வேற தகவல் இருக்குதா?''’’
""தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்னு தனது விசுவாசிகளாக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விசாரித்த படியே இருக்கிறாராம் சசிகலா. கோயில்களுக்கு விசிட் அடித்தபோதும் இதைத்தான் கேட்டா ராம். ஆட்சி மாற்றம் வரும்னு நினைக்கும் சசிகலா, வாக்கு எண்ணப் படும் நாளான மே 2-ஆம் தேதி, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குப் போய் வணங்கிவிட்டு, அங்கிருந்து அ.தி.மு.க. தலைமையகத்துக்கு அதிரடியாக விசிட் அடிக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். கட்சியின் லகானைக் கைப்பற்றும் முயற்சியிலும் சசிகலா இறங்க இருக்கிறார்னு அவர் தரப்பில் சொல்றாங்க.''’’
""பா.ஜ.க.வின் டெல்லி தலைமை, தமிழகத்தில் தேர்தல் பணிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட நிர்வாகிகள் யார், யார்னு ரிப்போர்ட் தயாரிச்சிருக்காமே?''’’
""யார், யார் ஒழுங்கா தேர்தல் வேலை செய்யலை? தேர்தலை வைத்து தனிப்பட்ட லாபத்தை அடைந்தவர்கள் யார், யார்னு இங்கிருந்து சென்ற புகார்களின் அடிப்படையில் ஒரு ரிப்போர்ட்டை பா.ஜ.க. டெல்லி தலைமை தயாரித்திருக்கிறது. அதில் அதிகமா அண்டர்லைன் அடிக்கப்பட்டிருப்பவர், தமிழக பா.ஜ.க. தலைவரான எல்.முருகன்தானாம். சீட்டுகளை ரேட் பேசி விற்றார், மக்களோடு தொடர்பில்லாத பலருக்கும் சீட்டுகளைக் கொடுத்தார். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே தொகுதிகளை அ.தி.மு.க.விடமிருந்து வாங்கினார், வெற்றிபெறக் கூடியவர்களை ஓரம்கட்டினார், சாதி அரசியலைக் கையில் எடுத்தார் என்றெல்லாம் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறதாம். இந்தத் தகவல் தெரிந்ததில் இருந்து பதட்டமாகவே இருக்கிறாராம் முருகன்.''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள கவர்னருமான சதாசிவத்திடம் மிகவும் நெருக்கமான தொடர்பை வைத்திருக்கிறாராம் எடப்பாடி. அடிக்கடி அவருடன் சட்ட ஆலோசனைகளையும் செய்துவருகிறாராம். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், அதில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம், எடப்பாடிக்கு எதிராகவே இருந்தது. இந்த விவகாரத்தில் சதாசிவம்தான் சட்ட ஆலோசனைகளை வழங்கினாராம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இந்த வழக்கு தனக்கு பெரும் சிக்கலை உண்டாக்கும்னு எடப்பாடி நினைக்கிறாராம்.''’’