மிழக பா.ஜ.க.வின் மாநில தலைவரானதற்குப் பிறகு டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் அவர்கள் விவாதித்தாகச் சொல்லப் பட்டது.

தேர்தல் குறித்து ஆலோசித்ததைக் கடந்து வேறு பல விசயங்களுக்காகவும் இந்த சந்திப்பை நயினார் பயன்படுத்த முயற்சித்தபோது, மோடியும் அமித்ஷாவும் செம டோஸ் கொடுத்துள்ளனர் என்கிற தகவல்களும் டெல்லியிலிருந்து கிடைக்கின்றன.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர்களோடு தொடர்பிலிருக்கும் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள் தரப்பில் இந்த சந்திப்பு குறித்து விசாரித்தபோது,‘""நயினாரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அப்பாயின்ட்மெண்ட் கொடுத்ததை யறிந்த நயினாரின் நண்பரான சி.பி.ராதா கிருஷ்ணன், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க கடுமையாக உழைக்கிறார் என நயினாரின் புகழைப்பாட, பா.ஜ.க.வை வளர்ப்பதாக நயினார் உறுதி கொடுத்திருக்கிறார். "பார்க்கலாம் சார், என்ன பண்றாருன்னு?' என தெரிவித்திருக்கிறார் நிர்மலா.

bjp

நிர்மலாவை சந்தித்தபோது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்களை விவரித்த நயினார், "தமிழகம் முழுவதும் கட்சி எழுச்சியாக இருக்கிறது மேடம்' எனச் சொல்ல... "கட்சி எப்படி இருக்கிறதுன்னு எங்ளுக்குத் தெரியும் மிஸ்டர் நாகேந்திரன். நீங்க என்ன செய்யப்போறீங்க? எவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில் உங்களுக்கு இந்த வாய்ப்பு (தலைவர் பதவி) கிடைத்திருக்கிறதுன்னு தெரியும்தானே?' என நிர்மலா சொல்ல, "புரிகிறது மேடம்; நிச்சயம் எனது பெஸ்ட்டை தருவேன்' என்றவர், ஒரு கட்டத்தில், தமிழகத்தில் நடத்தப்படும் ரெய்டுகள் குறித்து நயினார் பேச்சைத் துவக்க... "இதனை ஹெச்.எம். (ஹோம் மினிஸ்டர்) மிடம் பேசுங்கள்' என்றிருக்கிறார். அதாவது அமித்ஷாவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

இதன்பிறகு அமித்ஷாவின் அப்பாயின்ட் மெண்ட் நயினாருக்கு கொடுக்கப்பட்டதும் அமித்ஷாவை சந்தித்தார் நயினார். அப்போது, சட்டமன்ற தேர்தல் குறித்து அவரிடம் அமீத்சா கேட்க, "பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு பொதுத்தளத்தில் (மக்கள்) நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2026-ல் பா.ஜ.க. கூட்டணி, ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நினைக்கின்றனர்' எனச் சொல்ல... "மக்கள் விரும்புவது இருக்கட்டும். ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர, பா.ஜ.க. தலைவராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக்கேட்க, சில ப்ளான்களை விவரித்த நயினார், "அ.தி.மு.க.வில் சசிகலாவையும் தினகரனையும் இணைக்கவேண்டும். ஆனால், ஓ.பி.எஸ். தேவையில்லை.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதியைத் தாண்டி ஓ.பி.எஸ்.ஸுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. அவரை தவிர்த்துவிட்டு மற்றவர்களை இணைக்க மேலிடம் முயற்சித்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்' எனச் சொல்ல, இடைமறித்த அமித்ஷா, "இத பாருங்க மிஸ்டர் நயினார், அது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அதுல நாம தலையிட முடியாது. அவர்களை இணைக்க நாம் எதற்கு முயற்சி பண்ணணும்? உங்களுக்கு என்ன வேலை? பதவி கிடைக்கிற வரைக்கும் ஏதேதோ சொன்னீங்க. இப்போ, வேறு மாதிரி சொல்றீங்க.

தலைவர் பதவிக்கு வந்த பிறகு நீங்க என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க? யாரையெல்லாம் நீங்க சந்திக்கிறீங்க? யாரெல்லாம் உங்களிடம் விவாதிக்கிறார்கள்? என்றெல்லாம் உங்களைப்பத்தி எல்லா ரிப்போர்ட்டும் உளவுத்துறை எங்களுக்கு அனுப்பிக்கிட்டுத்தான் இருக்கிறது. பா.ஜ.க. தலைவரா அரசியல் பண்ணுங்க. பழைய பாசத்துல அ.தி.மு.க.காரர் மாதிரி பேசக்கூடாது. புதிதாக உங்க நட்பில் தி.மு.க.வும் சேர்ந்திருக்குன்னு எங்களுக்குத் தெரியும்' என காட்டமாக அமித்ஷா சொல்லியிருக்கிறார்.

"அப்படியெல்லாம் எந்த நட்பும் இல்லை சார்' என்று நயினார் பம்மினார். அப்போதும் விடாத அமித்ஷா, "நாலு கோடி என்னிடம் பிடிபட்டதை நாள் முழுக்க சன் டி.வி. போட்டுக் காட்டுச்சு. பொன்முடி பேசியதை ( பொன்முடி ஆபாச பேச்சு) ஏன் போட்டுக்காட்லை?'ன்னு நயினார் பேசியதை அவரிடமே சொல்லி, "நீங்க பேசினதெல்லாம் கரெக்ட்தான். ஆனா, கடந்த 4 வருசத்துல தி.மு.க.வை எதிர்த்து எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கீங்க? போராடியிருக்கீங்க? எதுவும் கிடையாது. உங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன நட்புன்னு எங்களுக்குத் தெரியும்?' என செமையா டோஸ் கொடுத்துள்ளார். பிறகு பல உத்தரவுகள் நயினருக்கு பிறப்பிக்கப்பட்டது. அமித்ஷாவின் டோஸில், சப்த நாடிகளும் நயினா ருக்கு ஒடுங்கியிருந்தது.

அமித்ஷாவுக்குப் பிறகு மோடியை சந்தித்தார் நயினார். நிர்மலாவிடமும் அமித்ஷாவிடமும் பேசியதைப் போலவே தமிழக அரசியல் நிலவரம் குறித்து மோடியிடம் விவரித்த நயினார், "தமிழகத்தில் அடிக்கடி அதிகமான ரெய்டுகள் நடத்துவதில் பா.ஜ.க.வுக்கு எதிரான விமர்சனம் மக்களிடம் இருக்கிறது. இதைத்தாண்டி பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது' என நயினார் சொன்னதும், மேற்கொண்டு அவரை பேசவிடாத மோடி, "எவ்வளவு எதிர்ப்புகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் உங்களை தலைவராக்கியிருக்கிறோம்னு உங்களுக்குத் தெரியுமா? உங்களை பற்றி எங்களுக்கு கிடைத்த காண்ட்ரவர்சி புகார்களையெல் லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டுத்தான் தலைவராக்கினோம். ஆனா, நீங்கள் பா.ஜ.க.காரர் மாதிரி பேசுவதை விட்டு விட்டு... தி.மு.க., அ.தி.மு.க.காரர் மாதிரி பேசுறீங்க? இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அமித்ஷா சொன்ன உத்தரவுப்படி உங்க அரசியல் இருக்கணும்' என எச்சரிக்கை செய்து நயினாரை அனுப்பினார் மோடி!''‘’என்று மூன்று சந்திப்புகளிலும் நயினாருக்கு நடந்ததை விவரித்தனர் அறிவு ஜீவிகள்.

Advertisment