ssநாடாளுமன்றத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவினாலும், நாமக்கல் தொகுதியைப் பொருத்தவரை தி.மு.க. கூட்டணியிலுள்ள கொ.ம .தே.க.,வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையேதான் கடும் போட்டி.

நாமக்கல்லில் தி.மு.க.தான் நேரடியாக போட்டியிடவேண்டும் என்று கழக உ.பி.க்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல்லை ஒதுக்கியதால் கழகக் கண்மணிகளி டையே தொகுதி முழுக்கவே கொஞ்சம் அதிருப்தி. ஏப்.2ஆம் தேதி வரை, பூத் கமிட்டிகளுக்கு வெறும் 5000 ரூபாய்தான் கொ.ம.தே.க. தரப்பில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது தொண்டர்களி டையே சற்று சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர், தி.மு.க. கூட் டணி பலம், உதயசூரியன் சின்னம், வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா ஆகியவற்றை நம்பி எப்படியும் கரையேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மாதேஸ்வரன். தி.மு.க.வின் உதயசூரி யன் சின்னத்தில் போட்டியிடுவது கூடுதல் பலம்.

s

Advertisment

அ.தி.மு.க. தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள 'ராகா' தமிழ்மணி, கொங்கு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்குதான் எம்.பி. சீட் என்று ஓராண்டுக்கு முன்பே இலைக்கட்சி மேலிடம் சொல்லிவிட்டதால், ஊர் முழுக்க போஸ்டர்கள், பெண்களுக்கு கோலப்போட்டி, பிரியாணி சாப்பிடும் போட்டிகளை நடத்தி, தன்னை மக்களிடம் பிரபலப்படுத்திக்கொண்டார். கட்சியின் மேல்மட்டத்தில் மட்டுமே அறியப்பட்ட தமிழ் மணிக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பரிந்துரையின் பேரில் சீட் வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இவர், சசிகலாவுடன் இப்போதும் தொடர்பிலிருக்கிறார் என்று தெரிந்தும், தமிழ்மணிக்கு சீட் தரப்பட்டுள்ளது. தமிழ்மணி, பசையுள்ள பார்ட்டி. கட்சி யில் வர்த்தக அணி மாநில அமைப்பாளராக இருக்கி றார். பூத் கமிட்டிகளுக்கு இது வரை இரண்டுமுறை பணப் பட்டுவாடாவை முடித்து, ர.ர.க்களையும் உசுப்பிவிட் டுள்ளதால் அவர்களும் இந்தமுறை நாமக்கல் தொகுதி இரட்டை இலைக்குத்தான் என்று உற்சாகமாகக் களத்திலிறங்கியுள்ளனர்.

பா.ஜ.க. தரப்பில், முன் னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் நிறுத்தப்பட்டுள்ளார். உடல்நலம் கருதி, இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லையென்று சொல்லிவந்த நிலையில், கட்சி கட்டாயப்படுத்தி களத்தில் தள்ளிவிட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்தல் களத்திற்கு புதிது என்ற நிலையில், கே.பி.ராமலிங்கம் தொகுதி முழுக்க அறிந்த முகம் என்பது மட்டும்தான் பிளஸ். பிரச்சாரம் செய்யக்கூட ஆட்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.

நாம் தமிழர் தரப்பில் சேந்தமங்கலம் ராமுடையானூரைச் சேர்ந்த கனிமொழி களம் காண்கிறார். தேர்தல் களத்திற்குப் புதியவர். பூத் கமிட்டிகூட போடவில்லை. சீமான் முகத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்.

கொ.ம.தே.க. மாதேஸ்வரன் வெற்றிபெறவே கூடுதல் வாய்ப்புள்ளது என்கிறது தி.மு.க. தரப்பு. கடைசிக்கட்டத்தில் களநிலவரம் மாறினாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் வாக்காளர் கள்.