டலூர் மாவட்ட அ.தி.மு.க. கூடாரத்தில் ஏகப்பட்ட முட்டல், மோதல்கள் அரங்கேறி வருகின்றன.

இங்கு ஏற்கனவே மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவனுக்கும், கடலூர் மத்திய மாவட்ட செயலாளரும் மாஜி மந்திரியுமான எம்.சி.சம்பத்துக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இதைத் தொடர்ந்து அடிக்கடி கோஷ்டி பூசலும் வெடிக்கும். இந்த நிலையில் கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கை, கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில், புவனகிரி, சிதம்பரம் ஆகிய 2 தொகுதியைத் தவிர, அனைத்திலும் படுதோல்வி அடைந்தது. இதற்குக் காரணம், உள்குத்து வேலைகள் என்று சொல்லி, பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவும் அவரது கணவரான முன்னாள் சேர்மன் பன்னீர்செல்வமும் அவர்களின் ஆதரவாளர்களோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

cuddalore-admk

Advertisment

இந்த நிலையில் தற்போது கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் குமரன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் வீரமணி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறது கட்சித் தலைமை. இவர்களில் கடலூர் நகர செயலாளர் குமரன் நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பத்தான் என்று, குற்றம்சாட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு, அ.தி.முக.வினர் போராட்டத்தில் குதித்ததோடு, மாஜி சம்பத்துக்கு எதிராக கோஷமிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் நகர அவைத்தலைவர் ராமச்சந்திரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அன்பு, மணி, சேகர், பஞ்சாயுதபாணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

c

Advertisment

அப்போது, அவர்கள் நம்மிடம், "நகர செயலாளர் குமரன் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ரகுபதி, நகர செயலாளராக பதவி வகித்தவர். தந்தை வழியில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர கட்சிப் பணியாற்றிவந்தார். அதேபோல் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கடந்த தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். பிறகு இவரை மாற்றிவிட்டு முன்னாள் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயத்தை வேட்பாளராக அறிவித்தனர். ஜெ. பேரவை செயலாளர் ஆலப்பாக்கம் வீரமணியோ, மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி எம்.எல்.ஏ.வுமான அருள்மொழி தேவனின் தீவிர ஆதரவாளர். அதனாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்படி இப்போது நீக்கப்பட்ட அனைவருமே, உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சிக்காக உழைத்தவர்கள்''”என்றும் கூறினர்.

மாஜி சம்பத் தரப்பினரோ, “"இவர்கள் சட்டமன்றத் தேர்தலில் முழுமையான ஈடுபாட்டுடன் தேர்தல் பணி செய்யவில்லை. மாறாக இவர்கள் உள்குத்து வேலைகளில் ஈடுபட்டதால்தான், ராமஜெயமும், சம்பத்தும் தோல்வி அடைந்தனர். அதனால்தான் துரோகம் செய்தவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்''’என்றனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான கடலூர் முன்னாள் நகர செயலாளர் குமரனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இக்கட்டான கால கட்டங்களிலும் கட்சிக் காக கடுமையாக உழைத்துள்ளோம். இது கடலூர்வாழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தல் வேலை செய்ய வில்லை என்பது அபாண்டம்’''’என்றார் அழுத்தமாக.

கடலூர் மாவட்ட அ.தி.மு.க. கலகலத்துக்கொண் டிருக்கிறது.