கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் பெருமான் சதயத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது. அப்போது சப்பரம் மின்சார லைனில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பெரியவர் சிறியவர் என பதினொரு அப்பாவிகள் உயிர்கள் பறிபோனது. 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய அரசு பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பொறுப்பில் ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார். அங்கு என்னதான் நடந்ததென நாமும் விசாரித்தோம்.
இந்த விபத்து குறித்து மாவட்ட சாலைப் பயனீட்டாளர்கள் குழு சட்ட ஆலோசகரும் தஞ்சை வழக்கறிஞருமான பிரகாஷ், "இந்த விபத்தில் உயிர்ப் பலிக்கு காரணம் நெடுஞ் சாலைத்துறை. நான் நேரடியா கச் சென்று கள ஆய்வு செய் தேன். விபத்து நடந்த பகுதியில் சமீபத்தில் சாலை புதுப்பிக் கப்பட்டுள்ளது. இந்த சாலை போடும்போது ஏற்கனவே இருந்த சாலையைவிட 15 முதல் 18 சென்டிமீட்டர் சில இடங் களில் ஒரு அடி முதல் 2 அடி வரை சாலையை உயர்த்தி யுள்ளனர். ஆனால் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு மடுபோன்று பள்ளமாக உள்ளது.
தேரோட்டத்தின்போது தேர் சப்பரத்தின் பின்பகுதியில் வந்துகொண்டிருந்த ஜெனரேட் டர் வாகனம், அந்த இடத்தில் இடப்பக்கம் திரும்பும்போது தார்ச்சாலை ஓரத்திலிருந்த அந்தப் பள்ளத்தில் சாய்ந்தது. அதன்காரணமாக தேர் சப்பர மும் இடதுபுறமாக சாய்ந்தது. அப்போது சப்பரத்தின்மீது கட்டப்பட்டிருந்த மூங்கில் குச்சிகள் எதிர்பாராதவிதமாக சாலை யோரம் சென்ற மின்சார லைனில் உரசியது. அந்த இடத்தில் சாமி ஊர்வலம் வருவதை முன்னிட்டு பொதுமக்கள் சாலையில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்திருந்தனர். அதன் காரணமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 அப்பாவி உயிர் கள் பலியானது. அந்த இடத்தில் சுமார் 250 நபர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பலர் தப்பி ஓடியுள்ளனர். பலர் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணம் விதிமுறை மீறி சாலை உயர்த்தப்பட்டதும் அதன் இருபுறமும் மடுபோன்ற பள்ளம் கிடந்ததும்தான். அரசு சாலையை மேம்படுத்துவதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதை பணிசெய்யும் ஒப்பந்தக்காரர்கள் கடைப்பிடிப்பதில்லை. அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களும் கண்டுகொள்வதில்லை. நெடுஞ்சாலைத்துறையை அடுத்து இந்த சாலையை ஒட்டி எச்.டி. மின்சார லைனை சமீபத்தில் அமைத்துள்ளனர். அவர்களும் சாலையை ஒட்டியே மின்கம்பம் அமைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அவ்வப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சேதமடைந்த சாலைகளை தரமுயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சாலையில் ஏற்கனவே போடப்பட்டுள்ள தார், ஜல்லி ஆகியவற்றை முழுவதும் சுரண்டியெடுத்து அப்புறப்படுத்திவிட்டு ஏற்கனவே இருந்த அளவில் அதன்மீது புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட வேண்டும். இதுதான் அரசு விதிமுறை. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை. இந்த விபத்திற்கு கிராம மக்கள் மீது பழிபோடுவது மிகவும் தவறு''” என்கிறார்.
நெடுஞ்சாலைத்துறை பயனீட்டாளர் நலக் குழுவின் தலைவர் ஐயாறப்பனோ, “"பொதுமக்களின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஒரே வரியில் பதில் கூறுகிறார் கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கொரோனா பரவல் காரண மாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஊரிலும் திருவிழாக்கள் நடக்கவில்லை. தற்போது திருவிழா நடத்த அரசு அனுமதித்த பிறகு அதைக் கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருந்தது அதிகாரிகளின் மிகப்பெரிய தவறு. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர். காவல்துறை உட்பட பலர் உள்ளனர். இவர்கள் திருவிழா நடக்கும் தகவலை முன்கூட்டியே அறிந்து அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தேர்த் திருவிழா நடத்து வதற்கு கிராமத்தினர் அனுமதி வாங்கவில்லை என்றால் தகவல் கிடைத்தவுடனே வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை திருவிழாவைத் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழகத்திலேயே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்தான் மிக அதிக கோவில்கள் உள்ளன. திருவிழாக்களும் தொடர்ந்து விமரிசையாக நடக்கும். ஆன்மீகச் சுற்றுலா வரும் பக்தர்கள் அதிகம். இதையெல் லாம் கருத்தில் கொண்டு கவனம் செலுத்தாதது அதிகாரிகள் தவறு. பொதுமக்களை மட்டும் குற்றம்சாட்டுவது தவறு.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையினர், மின்சார வாரியத்தினர் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தங்கள் துறையின் பணிகளைச் செய்யவேண் டும். நெடுஞ்சாலைத்துறை தார்ச் சாலையை அவ்வப்போது தரம் உயர்த்துகிறோம் என்ற பெயரில் சாலையின் உயரத்தை மட்டும் உயர்த்திவிட்டு இருபுறங்களிலும் வாய்க்கால் போன்று பள்ளமாக போட்டுவிடுகிறார்கள் இருபுறங் களிலும் தரமான அளவில் ஜல்லி போன்றவைகளை நிரப்பி உயரத்தை சமப்படுத்துவது இல்லை. இதனால் ஏகப்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகி வருகின் றன'' என்கிறார்.
அதிகாரிகள் மக்களையும், மக்கள் அதிகாரிகளையும் பரஸ்பரம் கைநீட்டுவதை விட எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்பட, செய்யவேண்டியதன் மேல் அரசு அக்கறை காட்ட வேண்டும்.