"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை ஒரு திரிசங்கு நிலையில் நிற்கிறது. அதற்குக் காரணம் காவல் துறை அதிகாரிகளிடம் இருக்கக்கூடிய கோஷ்டி மனப்பான்மைதான்' என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

poo

கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாற்பத்தி எட்டு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் கோவையில் சிலிண்டர் வெடிப்பில் கொல்லப்பட்ட ஜமேஷா முபீன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிர வாத அமைப்பில் ஆக்டிவ்வாக செயல்பட்டு பல இடங்களில் குண்டுவைக்க முயற்சித்ததுபோல் பலபேர் தமிழகம் முழுவதும் ஆக்டிவ்வாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தீவிரமாக சமூக வலைத் தளங்கள் மூலமாக செயல்படுகிறார்கள் என என்.ஐ.ஏ. கண்டுபிடித்திருக்கிறது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம், லேப்டாப் மற்றும் செல்போன் கள் ஆகியவற்றைக் கைப்பற்றி அவர் களை சிறைக்கும் அனுப்பியிருக்கிறது என்.ஐ.ஏ.

2018-ஆம் ஆண்டு இதேபோல் ஜமேஷா முபீன் வீட்டில் ரெய்டு நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை சந்தேகப் பட்டியலில் வைத்து கண்காணிக்க வேண்டும் என மாநில உளவுத் துறைக்கு உததரவிட்டார்கள். சந்தேகத்துக்குரியவர்கள் பட்டியலில் எண்பத்தி ஐந்தாவது இடத்தில் இருந்த ஜமேஷா முபீன், அவர் குடியிருந்த வாடகை வீட்டைக் காலி செய்துவிட்டு இன்னொரு இடத்திற்குச் சென்றுவிட்டார். அவரது புதிய வீட்டை கண்டுபிடிக்க போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் குண்டு வைப்பதற்குத் தேவையான அனைத்து விசயங்களையும் திரட்டி, தனது உடல் முழுக்க உள்ள முடிகளை அகற்றி தற்கொலைப்படை தீவிரவாதியாக மாறி, குண்டு வைக்கச் செல்லும் வழியில் ஏற்பட்ட ஒரு சிறு விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

Advertisment

oooo

Advertisment

அந்த விபத்துதான் கோவை மாநகரை குண்டு வெடிப்பு அழிவிலிருந்து காப்பாற்றியது. அதைத்தொடர்ந்து நடந்த சோதனைகளில் ஜமேஷா முபீனைப் போல பலர் செயல்பட தயாராகிவருகிறார்கள் என என்.ஐ.ஏ. மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த குண்டு வெடிப்பு தயாரிப்பு முயற்சிகள் தமிழகத்தில் எவ்வாறு நடந்தது என காவல்துறை வட்டாரங்களில் பெரும் சர்ச்சை இன்றளவிலும் நிலவி வருகிறது.

இந்த குண்டுவெடிப்பு முயற்சிகளை கோவை மாநகர ஆணையாளர் பால கிருஷ் ணன் தலைமையிலான சட்டம் ஒழுங்கு போலீசார் தடுத்துவிட்டனர் என்று உளவுத் துறை அதிகாரியான டேவிட்சன் தேவாசீர் வாதம் மற்றும் டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு ஆகியோர் முதல்வரின் முதன்மைச் செயலாள ரான உதயச்சந்திரன் மூலம் முதல்வருக்கு அறிக்கை அனுப்பி அந்த போலீசாருக்கு பாராட் டும் வெகுமதிகளும் கொடுக்க வைத்தார்கள். அதே நேரத்தில் இது உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு மற்றும் உளவுத்துறையின் தோல்வி என ஒரு பிரச்சாரம் களைகட்டி சுற்றிவருகிறது.

கரணம் தப்பினால் மரணம் என குண்டு வெடிப்பு அபாயத்தில் இருந்து தமிழகம் தப்பியது. கோவையில் குண்டு வெடிப்பு நடந்திருந்தால் அது இலங்கையில் இருநூறுக் கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட சர்ச் வெடிகுண்டு வெடிப் பைப் போல மிக மோசமானதாகவும் பல பத்தாண்டுகள் தமிழக அரசியலில் மறக்க முடியாத விளைவை ஏற்படுத் தக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்று பயத்துடன் சொல் கிறார்கள் காவல்துறை யைச் சேர்ந்தவர்கள். இப்படி ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டி ருக்கிறது.

இன்னொரு பக்கம், தென் மாவட் டங்களில் காவல்துறை உண்மையிலேயே பாராட்டும்படியாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் திண்டுக்கல் பகுதிக்கு வந்த பாரதப் பிரதமருக்கு வட நாட்டில் கூட வழங்கமுடியாத அளவுக்கு மிக நேர்த்தியான பாதுகாப்பை தமிழக காவல்துறை வழங்கியது. பிரதமரை யாராலும் நெருங்க முடியவில்லை. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பிரதமரிடமே அவருக்கு நெருக்கமான சில தொழில் அதிபர் கள் புகார் கூறினார்கள். எங்களால் உங்களை நெருங்கமுடியாதது குறித்து தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் கேட்டபோது, “அனுமதி இல்லாமல் யாரையும் பிரதமருக்குப் பக்கத்தில் அனுமதிக்க முடியாது. உங்கள் வேலைகளை எல்லாம் வட இந்தியாவில் வைத்துக்கொள்ளுங்கள், தமிழ் நாட்டில் அது நடக்காது” என அஸ்ரா கார்க் கூறினார் என்று வந்த புகாரைக் கேட்டு பிரதமர் வாய்விட்டுச் சிரித்தார்.

pp

இதுதவிர, வழக்கமாக தென் மாவட்டங்களை டென்ஷன் ஆக்கும் தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் போன்றவற்றை எந்த சத்தமும் இல்லாமல் காவல்துறை கையாண்டிருக்கிறது. அத்துடன் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குதல், சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், போக்சோ சட்டத்தில் அதிகமான வழக்குகளை பதிவு செய்தல் என தென் மாவட்ட காவல்துறைக்கு எட்டு நீதிபதிகள் அடங்கிய குழு வெளிப்படை யாகவே பாராட்டுக்களை தெரிவித்திருக் கிறது என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

இப்படி ஒரு பக்கம் தண்ணீர் இன்னொரு பக்கம் நெருப்பு என இருக்கும் தமிழக காவல்துறையில் நல்லபடியாக சட்டம் ஒழுங்கு விஷயங்களைக் கையாண்டவர் என பேர்பெற்ற சட்டம் ஒழுங்கு பிரிவு துணைத்தலைவர் தாமரைக்கண்ணன் நவம்பர் மாதம் ஓய்வுபெறுகிறார். அவரது இடத்திற்கு பலர் போட்டியிடுகிறார்கள். காவல்துறையை ஆக்கிர மித்திருக்கும் வால்டர் தேவாரத்தின் சிஷ்யர்கள் அமல்ராஜ் என்பவரை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். மகேஷ்குமார் அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரும் தாமரைக் கண்ணன் இடத்திற்கு வர முயற்சிக்கிறார்கள். அமல்ராஜ் அந்த இடத்திற்கு வந்தால், காவல்துறையின் மிக முக்கியமான பதவிகள் அனைத்திலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்கிற பெயர் வந்து விடும் என்பதால் அபின்தினேஷ் மோடக் என்கிற நேர்மையான வட இந்திய அதிகாரி யைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றது. இந்த முயற்சிகள் எல்லாம் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்க மானவர்களின் பெயர் களை வைத்தே நடந்துகொண்டி ருக்கிறது என தமிழக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

________________

இறுதிச்சுற்று!

ஆறுதலளித்த முதல்வர்!

ff

வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, பயிற்சியின்போது அடைந்த காயத்துக்கு சிகிச்சைக்காக சென்னை -பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் காலை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. பின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை யளிக்கப்பட்டுவந்த நிலையில்... நவம்பர் 15-ஆம் தேதி பிரியா மரணமடைந்தார். இதையடுத்து பிரியாவின் உறவினர்கள், அவளுக்கு சிகிச்சையளித்த இரு மருத் துவர்களையும் கைதுசெய்து வழக்குப் பதியவேண்டுமென போராடிவந்தனர். இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்' என அறிவித்ததோடு, "பிரியாவின் குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும்' எனவும் உறுதியளித்தார். மகளை இழந்த துயரத்திலிருந்த பிரியாவின் பெற்றோருக்கு, அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று (17-11-2022) தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் அளித்தார்.

-மணி