"ஹலோ தலைவரே, தமிழக கவர்னரை மாஜி முதல்வர் எடப்பாடி சந்திச்சுப் பேசியதை கவனிச்சீங்களா?''”
"ஆமாம்பா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திச்ச நிலையில், எடப்பாடியும் 20-ந் தேதி சந்திச்சிருக்காரேப்பா?''.”
"எடப்பாடியோடு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் ராஜ்பவன் போனாங்க. அப்ப, தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் தன் ஆட்சி அதிகாரத்தை வச்சிக்கிட்டு, அராஜகமா வெற்றியைத் தட்டிப் பறிச்சிடிச்சின்னு எடப்பாடி புகார் தெரிவிச்சார். மாநில தேர்தல் ஆணையம் முதல்வரின் கைப்பாவையா இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றலைன்னும் சொல்லி, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை கவர்னர் நிறுத்திவைக்கணும்னு எடப்பாடி கோரிக்கை வச்சிருக்காரு.''
"உள்ளாட்சித் தேர்தல்னா முந்தைய ஆளுங்கட்சி இன்றைய ஆளுங்கட்சி மீது புகார் சொல்றது சகஜம்தானே?''”
"மாநில தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சி.வி.சண்முகமும் ஜெயக்குமாரும் கவர்னர்ட்ட வலியுறுத்தியிருக்காங்க. மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாயிடிச்சின்னும், அ.தி.மு.க.வை எதிரிக்கட்சியாகப் பாவித்து, லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி முன்னாள் அமைச்சர்கள் மீது இந்த அரசு ரெய்டை நடத்திக்கிட்டு இருக்கு. காவல் துறையினரைத் தங்களின் அடியாட்களைப் போல ஸ்டாலின் நடத்துகிறார்னு கே.பி.முனுசாமியும், தன் பங்குக்கு புகார் வாசிச்சாராம். கவர்னர் ரவியோ, ஆட்சி நிர்வாகத்தை கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன்னு அழுத்தம் கொடுத்துச் சொன்னாராம்.''”
"எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு ஊருப்பக் கம் கேட்பாங்க. மாஜி மந்திரிகள் மீதான ரெய்டு நடவடிக்கைதான் ராஜ்பவனுக்கு எடப்பாடி போனதற்கான காரணமா?''”
"அது மட்டுமில்லீங்க தலைவரே, கொடநாடு விவகாரத்தில் தனக்கு நெருக்கடி முற்றுகிறதுன்னு புரிஞ்சிக்கிட்டார் எடப்பாடி. கார் விபத்து மூலம் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும், ஜெ.வின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் மனைவி கலைவாணி, அண்மையில் போலீஸிடம் கொடுத் திருக்கும் தகவல்கள், ரொம்பவும் அதிரவைக்கும் ரகத்தைச் சேர்ந்ததாம். அதனால், கொடநாடு கொலை, கொள்ளையை விசாரிக்கும் டீம், தன்னைக் கைது செய்துவிடுமோன்னு எடப்பாடி பயப்படுகிறாராம். கைதில் இருந்து தன்னைக் காப்பாற்றணும்னுதான் கவர்னரிடம் எடப்பாடி அழுத்தமான வேண்டுகோளை வச்சிருக்கார். அதோட, இப்ப ஸ்டாலினும் சசிகலாவும் ரகசியமாக் கூட்டு சேர்ந்துக்கிட்டு, தன்னை உள்ளே வைக்கத் திட்டமிடுவதாகவும் கவர்னரிடம் எடப்பாடி அதிரடி புகாரை யும் வாசிச்சாராம். இதை டெல்லியின் கவனத்துக்குக் கொண்டுபோவதாக, கவர் னர் நம்பிக்கையூட்டி அவர் களை அனுப்பி வச்சாராம்.''”
"கவர்னரை சந்திக்கச் சென்ற எடப்பாடியுடன், ஓ.பி.எஸ். போகலையே?''
"ஓ.பி.எஸ். உட்பட 8 பேருக்கு அப்பாயின்ட் மெண்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் வரமுடியலைன்னு, கவர்ன ரிடம் சொல்லிவிட்டார்கள். உண்மையான கார ணம், எடப்பாடிக்கு எதிரான மோசடிப் புகாரை ஓ.பி.எஸ். கிளப்பினாராம். அதாவது, ஜெயலலிதா முதல்வராக இருந்தப்ப... அவரது அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்தவர்கள், அப்ப கோடிக்கணக் கில் வசூலித்து, அவரிடமும் சசிகலாவிடமும் கொடுத்திருந்தார்களாம். அதிலிருந்து 100 கோடி ரூபாயை அவர்கள், அ.தி.மு.க.வின் கட்சி நிதியில் சேர்த்திருந்த நிலையில், ஜெ.’ மரணமடைந்து விட்டார். எடப்பாடி கையில் அரசாங்கம் வந்த நேரத்தில் கட்சி ஃபண்டில் போடப்பட்ட 100 கோடி ரூபாயையும் அவர் எடுத்துவிட்டாராம். இது தொடர்பாக அண்மையில் ஓ.பி.எஸ் உள் ளிட்டவர்கள் கேள்வி கேட்க, நான் என் கைக்காசை தேர்தல் உட்பட கட்சியின் அனைத்துப் பணிகளுக்காகவும் செலவு செய்திருக்கிறேன். அதில் அந்த 100 கோடியும் செலவாயிடிச்சின்னு அவர் கைவிரிக்க, இதனால் ஷாக்கான ஓ.பி.எஸ். டீம், எடப்பாடி மீது மோசடிப் புகாரை எழுப்ப ஆரம்பிச்சிருக்கு. அந்தக் கடுப்பில்தான் ஓ.பி.எஸ்.சை கழற்றிவிட்டுட்டு, ராஜ்பவன் போயிருக்கார் எடப்பாடி.''”
"ம.தி.மு.க.வில் துரை வைகோவை தலைமை கழகச் செயலாளரா ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்திருக்காங்களே?''”
"வைகோ மகன் துரை வையாபுரி, தன் பெயரை துரை வைகோன்னு மாற்றிக் கொண்டதி லிருந்து அவரது அரசியல் ஆர்வம் பற்றி நாம பேசிக்கிட்டுத்தான் இருக்கோம். அது பற்றி விவாதிக்க ம.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் 20-ந் தேதி நடந்துச்சு. வாரிசு அரசியலுக்கு எதிரா உருவான கட்சி ம.தி.மு.கங்கிறதால, துரை வைகோவுக்கான பதவி பற்றி விவாதம் நடந்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 5 மா.செ.க்கள், இந்தக் கூட்டத்தைப் புறக்கணிச்சதா தகவல் கசிஞ்ச நிலையில், துரை வைகோவை ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளரா தேர்ந்தெடுத்திருக்காங்க.''”
"பிரைமரி ஹெல்த் சென்டர்களில் இருக்கும் மருத்துவர்களும், ஆதங்கத்தில் இருக்காங் களேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலமான 2019-ல், 1400 எம்.பி.பி.எஸ் மருத்துவர்களை, தேர்வு செய்தனர். அவர்களில் ஆயிரம் மருத்துவர்களை பிரைமரி ஹெல்த் சென்டர்களில் நியமித்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியற்றினர். இவர்களை இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, அதைச் செய்ய வில்லை. பணி நிரந்தரம் ஆகாததால் உரிய சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லையாம். தி.மு.க. ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படலை. இவர்களின் நிலை குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கவனத்துக்கு நாம் கொண்டு சென்ற போது, இதுகுறித்து விரைவில் பரிசீலிக்கிறோம்னு சொல்லியிருக்கிறார்.''”
"போலி சாமியார் சிவசங்கர் பாபா, விவகாரத்தில் பரபரப்பு தெரியுதே?''”
"சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மூன்றுபேரை, விசாரணை அதிகாரியாக இருந்த குணவர்மன் என்கிற டி.எஸ்.பி., சுய லாபத்துக்காக நழுவவிட்டாராம். அந்த அதிகாரியை, இப்ப சென்னை கார்ப்ப ரேசனின் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.யாக நியமிச்சிருக்காங்க. இந்த நிலையில், அவரால் நழுவவிடப்பட்ட அந்த மூன்று பேரையும் விரைவில் கைது செய்ய, உரிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.''
"ம்...''”
"தலைவரே... அ.தி.மு.க.வின் பொன்விழாவை முன்னிட்டு ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சசிகலா போனாருல்ல, அதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ்.ஸை ராமாபுரம் தோட்டத்துக்கு வரணும்னு எம்.ஜி.ஆர். குடும்ப வாரிசு ஒருவர் அழைச்சிருக்காரு. ஓ.பி.எஸ்.சும் தன் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யுடன் போறதுக்கு ரெடியானாரு. தகவலறிந்த எடப்பாடி, நீங்கள் மட்டும் அங்கே சென்றால் சர்ச்சைகள் வரும்னு அவரைத் தடுத்துவிட்டாராம். இதுவும் எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸை திருப்பி யிருக்கிறதாம்''”
"நான் ஒரு முக்கியத் தகவலைச் சொல்றேன்... நம்ம ராங்கால் பகுதியில் 2021, அக்டோபர் 13-15, நக்கீரன் இதழில் வெளியான ரெப்கோ வங்கி குறித்த செய்திக்கு, அந்த வங்கியின் மக்கள் தொடர்பு அதிகாரி வைத்தியநாதன் மறுப்பு தெரிவிச்சிருக்காரு. ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா, அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ள அமைப்பின் எந்த உறுப்பினர் பதவியிலும் இல்லை என்றும், அவரது கணவர் இறந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது என்றும், தமிழக முதலமைச்சரிடம் மேலாண்மை இயக்குநர் வழங்கியது கொரோனா நிதி அல்ல, தமிழக அரசின் பங்குத் தொகைக்கான ஈவுத் தொகைதான்னும் தெளிவா விளக்கியிருக்காரு.