வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
வெளிப்படையாக, நம் கண் எதிரிலேயே நம்மை வீழ்த்த கொலைவாளோடு வரும் எதிரிகைளை விட, உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
இதை உணராததன் விளைவுதான், ஜெ. சந்தித்த மரண விபரீதம்.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து
நம்மைக் கண்டு தொழுது கும்பிடும் கைக்குள்ளும் ஆயுதம் இருக்கலாம். அதேபோல் நமக்காக உருகிக் கண்ணீர் விட்டுப் பசப்பும், சசிகலாக்களின் கண்ணீரின் பின்னாலும் ஆபத்து இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் வள்ளுவர்.
ஒரே நாளில் இரண்டு அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை, நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையில அடிபட்டுப் போயிருச்சுனு சொல்லலாம். மக்களுக்கான ஒரு தீர்வு நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையில கிடைச்சிருக்கு. போலீஸோட அட்ராசிட்டி எவ்வளவு கொடூரமா இருந்துச்சுங்கிறதை ஒளிவு மறைவு இல்லாம வெளிப் படுத்தியிருக்கு. நீதியரசருக்கு தூத்துக்குடி மக்கள் மட்டுமில்லாம, தமிழ்நாட்டு மக்கள் சார்பா நன்றி சொல்றேன்.
துப்பாக்கிச் சூட்டை வெளிக்கொண்டு வந்தததில் நக்கீரன் பங்கும் இருக்கு. கலெக்டர், எஸ்.பி. மற்றும் எல்லா அதிகாரி களின் அலட்சியத்தையும் நாம் தொடர்ந்து எழுதியிருக்கோம். நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் அதிக நாள் எடுத்துக்கிட் டாங்க. இவ்வளவு விஷயங்களை வெளிய கொண்டுவரு வாங்களானு சந்தேகம் இருந்துச்சு. ஆணையம் அரசிடம் தன் அறிக்கையை சமர்ப்பிச்சுட் டாங்க. ‘ஜெயலலிதா மருத்துவ மனையில் அட்மிட்டானதில் இருந்து நக்கீரன்தான் தொடர்ந்து பாலோ பண்ணி யிருக்கோம், தனியா புத்தகமும் வெளியிட்டோம். ஒவ்வொன் றையும் அங்குலம் அங்குலமா செய்தி பண்ணியிருந்தோம்.
டிசம்பர் 5-ஆம் தேதி இரவு பதினொன்னரைக்கு ஜெயலலிதா இறந்துட்டதா சொன்னாங்க. அதற்கப்புறமும் அதில இருந்த நிறைய சந்தே கங்களை நக்கீரன் கேள்வி எழுப்பியது.
ஜெ.வுடன் கூடயே இருந்த உடன்பிறவாத சகோதரி, அக்கா அக்கான்னு சொல்லி பக்காவா திட்டம்போட்டு ஒரு முழுநீளக் காட்சியை, மருத்துவ மனையில் அனுமதித்தது முதல் சிதையில் ஏற்றியது வரை ஒரு திரைக்கதை நல்லா பண்ணி யிருந்தாங்க. அதை ஆணையம் புட்டுப் புட்டு வெச்சிருக்கு.
சிலபேர், ஜெ.வை உங்க ளுக்குப் பிடிக்காது. உங்களை கஷ்டப்படுத்தினாங்க. அப்புறம் ஏன், பின்னாலுள்ள விஷயங்களைத் தோண்டித் தோண்டி வெளியே கொண்டுவர்றீங்க? அதான் இறந்துடுச்சுல்ல விட்டுடவேண்டியதுதானேன்னு சொன்னாங்க? ஜெ.வுக்கும் நமக்கும் ஏழாம் பொருத் தம்தான். இருந்தும் இதை ஏன் கையில் எடுக்கி றேன்னா,…அவர் நம்மை ஆண்ட முதல்வராச்சே.
75 நாளும் அப்பல்லோவுல, பத்து ரூம் போட்டு சசிகலா உறவினர்கள் இருந்தாங்கனு ஆணையம் சொல்லியிருக்கு. அதே அப்பல்லோவுல தம்பிகள் பிரகாஷ், அருண்பாண்டியன், பரமேஷ், மனோ, புகைப்பட நிருபர்கள் ஸ்டாலின், அசோக், சுந்தர், குமரேசன் எல்லோருமே ஷிப்ட் போட்டு வேலை பார்த்தாங்க. மருத்துவமனையே கதியா கிடந்தாங்க.
அதனாலதான் ஆறுமுகசாமி ஆணையத்துல சொல்லியிருக்க விஷயங்கள்ல எழுபத்தைந்து சதவிகிதத்துக்கும் மேல நாங்க கண்டறிஞ்சு வெளிக் கொண்டுவந்திருக்கோம். இந்த நேரத்துல நாம மார்தட்டிக்குவோம்.
அந்தக் காலத்துல மன்னர்களைக் கொல்றது என்பது ஒரு ராஜ சூழ்ச்சி. அரியணையில் இருக்கும் போது, தனக்குப் பின்னாடி எந்த சூழ்ச்சியும் நடக்குதா இல்லையானு விழிப்பா இருந்து தங்களைப் பாதுகாத்துக்கிறவங்களும் இருக்காங்க. அதுல ஜெயலலிதா கோட்டைவிட்டுட்டாங்க. அந்த ஓட்டையை வைத்துதான் மிகப்பெரிய கோட்டை கட்டத் திட்டமிட்டாங்க சசிகலா வகையறாக்கள்.
2011-ல் ஆட்சிமாற்றம் வருது. ஜெ. முதலமைச் சர் ஆகிறாங்க. உளவுத்துறை கொடுத்த துப்பால, ஜெ. சிறைக்குப் போயிடுவாங்க. நடராஜனை சி.எம்.மா ஆக்கப்போறாங்கன்னு ஏதோ ஒரு ஹோட்டலில் சசிகலா குழுவினர் பேசியது, ஜெ.விடம் சொல்லப்பட்டது. சசிகலாவோட சொந்தங்களை வேரோடு பிடுங்கி வெளியே எறிஞ்சுட்டாங்க. ஆனா விதி விடலை. சசி திரும்ப உள்ள வந்துட்டாங்க.
2016 செப்டம்பர் மாதம், அப்பல்லோவுல அட்மிட் ஆயிருந்தாங்க. முதலில் சிறிய உடல்நலக் குறைவுன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் வந்து 75 நாளும் இவங்க நம் காதுல பூவெச்சாங்க பாருங்க. ஆறேழு அறிக்கை வந்துச்சு. நாளை காலைல டிஸ் ஜார்ஜ் ஆகி வீட்டுக்குப் போயிருவாங்க…. டிஸ்ஜார்ஜ் ஆகிற டைமை அவங்க முடிவுக்கு விட்டுட்டோம்னு மருத்துவமனையில் சொன் னாங்க. முன்னாள் அமைச்சர் ஒருத்தர், அம்மா எங்களுக்கு மூணு வகையான ஸ்வீட் கொடுத்தாங்க. அவங்களும் சாப்பிட்டாங்க. நாங்களும் சாப்பிட் டோம்னு அடிச்சுவிட்டார். அப்புறம் அந்தர்பல்டி அடிச்சு, என்னை சொல்லச் சொன்னாங்க சொன்னோம் அப்படின்னார். அப்ப ஒரு ஆக்டிங் கவர்னர் இருந்தார். அவர் என்ன சொன்னார்னு அது அவருக்குத்தான் வெளிச்சம். வெங்கைய நாயுடும் வந்து பார்த்துட்டுப் போனார். மொத்தத்துல பார்சல் பண்ணிக் கொடுத்துட்டாங்க.
தினகரன் செய்தித்தாளில் ஒரு பாக்ஸ் செய்தி போட்டிருப்பாங்க. அதுல மெல்லக் கொல்லும் விஷம், மரக்கட்டையால் தாக்குதல், கால் துண்டிப்பு போன்ற செய்திகள் எல்லாம் வதந்தி.
கால் இல்லைங்கிற விஷயத்தை நாம்தான் பெரிசா செய்தி பண்ணினோம். அட்டைப் படம் பண்ணினோம். தொடர்ந்து எழுதினோம். வேற யாரும் பண்ணலை. எதுக்கு வம்புன்னு பண்ண லையா, ஜெ.வே போயிடுச்சுன்னு விட்டுட்டாங் களான்னு எனக்குத் தெரியலை. ஜெயலலிதாவுக்கு கால் இல்லைங்கிறதை இரண்டாம் நாளே சந்தேகத்தைக் கிளப்பிட்டோம்.
இருக்குங்கிறதுக்கு சில சாட்சியங்களைச் சொல்லிட்டிருந்தாங்க. எனக்கு இல்லைங்கிறதுல அசைக்கமுடியாத நம்பிக்கை.
கால் துண்டிப்பு விவகாரம் நக்கீரன் பண்ணி யது. அதுக்கு ஆணையத்துல ஒரு பதில் சொல்லியிருக்காங்க. 445-வது பக்கத்துல ஈர.12-ன் சாட்சியங்களை ஆராய்ந்தபிறகு, ஈர.14 டாக்டர் கிருஷ்ணப்பிரியா, ஈர.17- டாக்டர் சிவக்குமார், ஈர26 ஐயப்பன், ஈர.94 டாக்டர் மீரா கிருஷ்ணப்பிரியா, ஈர.104- டாக்டர் ரேமண்ட் டோமினிக் சேவியோ மற்றும் ஈர.106- டாக்டர் பாபு குருவில்லா ஆபிரகாம் ஆகியோரின் கூற்றுப்படியும், மற்றும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படியும், மறைந்த முதல்வரின் கால்கள் மற்றும் கால்விரல்கள் அவரது இறுதிமூச்சுவரை சரியாகவும், உள்ளவாறே இருந்தன என்றும் இந்த ஆணையம் கருதுகிறது.
தினகரன் பேப்பர்ல, ஜெ. மறைவுக்குப் பிறகு அவரது உடலில் எம்பாமிங் செய்தவர் என்ற முறை யில், மருத்துவர் சுதா சேஷய்யன், ஊடகங்களில் பரவிய வதந்தியைப்போல முதல்வரின் முகத்தில் துளைகள் இல்லை எனச் சொல்லியுள்ளார்.
ஜெயலலிதா சிசியூவில் இருந்த அரிய புகைப்படம் கிடைச்சுது. இறந்தபிறகும் ஜெ.வுக்கு அதே இடத்துல கன்னத்துல மூணு புள்ளிகள் இருக்கும். அதை நாங்க ரவுண்ட் பண்ணி, ஜெ. முகத்துல எதுக்காக அந்தத் துளையைப் போட்டாங்கனு ஒரு செய்தியைப் போட்டோம்.
அந்த மூணு துளைகளுக்கான காரணத்தை எழுதியிருப்போம். “அந்தத் துளைகள் ஆக்ஸிஜன் குழாயோ, திரவ உணவு அல்லது குழைந்த உணவு செலுத்தப் பயன்படும் ட்யூப் நழுவாமல் இருக்க வைக்கப்பட்ட கிளிப்பின் தழும்பு. அதுபோல் உள்ளது. சுயநினைவற்ற நிலையில் உள்ள பேஷண்டுக்குத்தான் கிளிப் வைக்கப்படும். காரணம், கிளிப் வலியை ஏற்படுத்தக்கூடியது.
என இந்த மூணு புள்ளிக்கான விளக்கத்தை எழுதியிருப்போம்.
சுதா சேஷய்யன் அந்த மூணு புள்ளியை முக் கியமா சொல்றாங்க. முகத்தில் துளைகள் இல்லை என்று சொல்லியுள்ளார். எனவே உடல்ரீதியாக வன்முறைக்கான எந்தத் தடயமும் காணப்படவில்லை. அடுத்துச் சொல்றதுதான் முக்கியம், மேலும் எம்பாமிங் செய்யும்போது கால்கள் துண்டிக்கப்பட்டதா என நான் கவனிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
முகத்துல இருந்த மூணு புள்ளிய கண்டுபிடிச்ச மருத்துவர் சுதா சேஷய் யன், அந்தம்மாவோட முரட்டுக் கால் களை கவனிக்கவில்லையா? ஐந்தரை அடி உடலில் இரண்டு கால்கள் இல்லைனு நக்கீரன் நாயா கத்துச்சு.…பேயா கத்துச்சு. அதுக்கு இந்தம்மா எம்பாமிங் செய்யும்போது கால்கள் துண்டிக்கப் பட்டதானு நான் கவனிக்கவில்லைனு சொல்லியிருக்கார். ஒண்ணு, இருந்துச்சு அல்லது இல்லை,… இரண்டுதானே பதில் கூறவேண்டும். மற்றவங்க கால் இருந்துச்சு… விரல் இருந்துச்சுன்னு சொல்லியிருக்காங்க. முழுப் பூசணிக்காய் இல்லை… முரட்டுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறதா இருக்குல்ல.
அந்தம்மா பெரிய பதவியில் இருக்கார். அந்த பதவியே ஜெ. மரணத்துக்கு அப்புறம் கிடைத்த சன்மானம்தான். ஆட்சி மாற்றம் வந்தபிறகும் அது நீடிச்சிருக்கு.
அந்தம்மா இன்னொரு இடத்துல சொல்லும்...…
நாலு வருடத்துக்கு முன்னால ஆறுமுகசாமி ஆணையத்துல சாட்சி சொல்லிட்டு வெளியே வந்து பேசும். பத்திரிகையாளர்கள். சிகிச்சையில இருக்கும்போது பார்த்தீங்களான்னு கேட்கிறாங்க. இல்லைங்கிறாங்க. இறந்ததா செய்தி கிடைச்ச பின்புதான் போனேன்னு சொல் றாங்க. எப்ப போனீங்கன்னு கேட்கும்போது, டிசம்பர் 5-ஆம் தேதி இரவு பத்தரை மணிக்கு எனக்குச் செய்தி வந்துச்சு. 11:40-க்கு அங்கே போயிட்டேன். நள்ளிரவு 12 மணிக்கு பார்த்தேன். 12:20-க்கு எம்பாமிங் நடந்துச்சுனு சொல்றாங்க.
எனக்கு இறந்தபிறகு பத்தரை மணிக்குப் போன் வந்துச்சு. பதினொன்னு நாற்பதுக்கு அங்க போயிட்டேன். அந்தப் பேட்டில சொல்லுது.
ஒருவர் இறந்த தேதி, நேரம் வைத்துதான் அவங்களுக்கு திதி கொடுப்பாங்க. இப்ப நாலாம் தேதி 3.50-க்கு இறந்துட்டதா சொல்றாங்க. போட் டுக் கொடுத்தது யாரு பூங்குன்றன். ஜெ.வுக்கும், சசிக்கும் உதவியாளரா இருந்தவர். ரொம்ப நாளைக்கு அப்பறம்தான் ஆணையத்துல சாட்சி சொன்னார். அவர்கிட்ட இருந்து லேசுல ஒரு தகவலை வாங்கிட முடியாது. சொத்துள்ள பெரிய ஆள் பூங்குன்றன்.
திதி செய்த சதி:… இறந்த நேரத்தை வைத்துதான் திதி செய்வாங்க. உண்மையை எங்கு புதைத்துவைத்தாலும் பொத்துக் கிட்டு வரும். சசிகலாவைக் காப் பாத்த ஒளிஞ்சு, ஒளிஞ்சு கட்டாயம் வந்தே ஆகணும்னு விரட்டுன பிறகுதான் வந்து சாட்சி சொன் னார். அவர் வாயிலிருந்தே ஒரு விஷயம் வெளி வந்துச்சு. நாலாம் தேதி 3.50-க்கு இறந்தத வெச்சுதான் திதி பண்ணிக்கிட்டிருக்கோம்னார். ஐந்தாம் தேதியில்ல, அதுக்கு முதநாளே இறந்துட்டாங்க.
எம்பாமிங் பண்ண டாக்டர் சுதா சேஷய்யன், தன்னை அறியாமலே பத்தரைக்கே செய்தி வந்துடுச்சுன்னு சொல்லியிருக்காங்க.
நக்கீரன் புலனாய்வில் உயிரைப் பணயம் வைத்து வெளிக்கொண்டு வர்றோம். எல்லோருமே கூட்டுச் சதியா இருந்துருக்காங்க. நீதியரசர் சாட்சி களை வைத்துதானே முடிவுக்கு வரமுடியும். இறந்த போது போய் அவர் பார்க்கலை. சிகிச்சையின் போது போய் பார்க்கலை. அவருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. ஐயப்பன்கிறவர் காலைக் கட்டு னேன் எனச் சொல்லியிருக்கார். இதுக்கிடையில நீங்க பார்த்தீங்கன்னா இரண்டு கால் இருக்கிற மாதிரி வீடியோ வந்துச்சு. ஜூஸ் குடிக்கிற மாதிரியும், காலை ஆட்டுற மாதிரியும், தேர்தல் நேரத்துல அந்த வீடியோவைப் போட்டு வியாபாரம் பண்ணினாங்க. அந்த வீடியோவை நக்கீரனுக்காகத் தான் போட்டாங்க. இன்னைக்கு ஜெ. அண்ணன் மகள் தீபா சொல்றாங்க. அது காலோட போட்டோ போட்டது பொய்யா இருக்கும்னு எனக்கு சந்தேகம் இருக்கு. சி.பி.ஐ. விசாரணை வைக்கணும்னு அறிக்கை கொடுத்திருக்காங்க. நாங்க அந்த வீடியோ பொய்னு சொல்லலை. வேற எங்கேயோ எடுத்தது. ஜெ. சிகிச்சையிலிருந்த எழுபத்தைந்து நாள்ல எடுத்ததில்லைனு சொல்றோம்.
ஜெயலலிதாவின் உடலில் இருந்த நோய்களின் பட்டியல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, வெர்டிகோ, ஹைப்போதைராய்டிசம். நாள்பட்ட வயிற்றுப் போக்குடன் குடல் அழற்சி, நாள்பட்ட மூச்சுக் குழல் அழற்சி, சிறுநீர்த் தொற்று, நடக்கும்போது தலைசுற்றல் இத்தனை நோய்கள் ஜெயலலிதாவுக்கு இருந்ததா ஆணையம் சொல்லியிருக்காங்க.
ஒரே நாளில் இத்தனை நோயும் வந்திருக்காது. இத்தனைக்கும் அவங்க சிகிச்சை எடுத்தாங்களானு திரும்பிப் பாருங்க. ஜெ.ங்கிற பெண்மணி 1990-ல தேவகி மருத்துவமனைல ஒருமுறை அட்மிட் ஆனாங்க. தி.மு.க. அரசு. என்னைக் கொல்றதுக்கு சதி பண்ணினாங்க. ஒரு லாரி வந்து என் மேல மோதிச்சுன்னு அப்ப ஒரு ட்ராமா போட்டாங்க. ராஜீவ்காந்தி எல்லாம் வந்து பார்த்தாரு. 90-க்கு அப்புறம், கடைசியா 2016 செப்டம்பர்ல அப்பல்லோல அட்டமிட்டானதுதான்.
26 வருஷம் கழிச்சுதான் ஆஸ்பத்திரில அட் மிட்டாகியிருக்கு. இத்தனை நோய்க்கும் போயஸ் கார்டன்ல ஒரு மருத்துவமனை செட்அப் இருக்கு. கொடநாடு, சிறுதாவூர்லயும் மருத்துமனை செட் அப் இருக்கு. எல்லா உயர்தர சிகிச்சை நிபுணர்கள், அந்தந்த இடத்துக்குப் போய்தான் சிகிச்சை அளிச்சிருக்காங்க. அதுமாதிரி சமயத்துல எடுத்த வீடியோவைத்தான், நமக்கு காதுல பூ வெச்சு, கால் இருக்குன்னு ஒரு படத்தைப் போட்டாங்க.
அப்ப எல்லோரும் நம்மைத் திரும்பிப் பார்த்தாங்க.
கால், கால்னு ஏன் கத்துறீங்கன்னு நம்மைக் கேட்குறாங்க. நாம துப்பறிஞ்சு கண்டுபிடிச்சதுங்க. அதை விட்டுக்கொடுக்க முடியாது.
5-ஆம் தேதி அந்தம்மா இறந்துடுது. 6-ஆம் இறுதி ஊர்வலம். 7-ஆம் தேதி காலையில தினத்தந்தியில ஒரு கால்பக்கம் விளம்பரம் பண்ணி யிருந்தாங்க, அதுல நாங்கதான் முதல்ல சொன் னோம்னு க்ளைம் பண்ணியிருந்தாங்க. அந்தப் பேப்பரைப் பார்க்கும்போது ஒரு சின்ன சந்தேகம் வந்துச்சு. உடனே அலுவலகத்துக்கு வந்து, வரும்போதே சிஸ்டம் ஆபரேட்டர் தம்பி கணேசன் ஆபீஸ் வரச்சொன்னேன். அதை காபி பண்ணி என்லார்ஜ் பண்ணச் சொன்னேன். அவர், நமக்கே அந்த படம் வந்திருக்குன்னு சொல்ல, அதை என்லார்ஜ் பண்ணி போடச்சொன்னேன்.
அந்தப் பெட்டியை மட்டும் என்லார்ஜ் பண்ணச் சொன்னேன். அதை மட்டும் டைட் பண்ணச் சொன்னேன். காலே இல்லை. ப்ளாட்டா இருக்கு. "காலே காணலையேயா'ன்னு சொல்ல, அவரும் "ஆமா'ன்னு சொன்னார். 6-ஆம் தேதி காலைல ராஜாஜி ஹால்ல மக்கள் பார்வைக்கு வெச்சாங்கல்ல. அதை எடுக்கச் சொன்னேன்.
அந்தப் படத்தை டைட் பண்ணச் சொன்னேன். மக்கள் பார்வைக்காக வெச்ச படம். இதுல கால் தெரியுதா.… கொடியோட பச்சைக் கலர் மீறி கால் வெளிய வர்ற மாதிரி இருக்கும். இதைத்தான் அட்டைப் படம் வெச்சோம். கால் வடிவிலான ஒரு வடிவம் தெரியுதுல்ல,… அது மறுநாள் எங்கே போச்சு?
நக்கீரன் ஏன் விடாப்பிடியா காலைப் பிடிச்சு தொங்குதுன்னா, ரோசய்யா மலர்ச்செண்டு வைக்கும் போது பொசுக்குனு உள்ளிறங்குச்சு. தம்பிக எடுத்த படம், அரசாங்கம் அனுப்புன படம் எல்லாத்தையும் எடுத்து டைட் பண்ணிப் பார்த்தோம்.
கால் தொடையிலிருந்து இரண்டு காலும் இல்லை. எனக்குப் பகீர்னு இருந்துச்சு. அப்பதான் கால் விஷயத்தை ஆணித்தரமா சொல்ல ஆரம்பிச்சேன்.
கலைஞரோட இறுதி ஊர்வலத்துல இருந்த பெட்டி. பெட்டி வேணா வித்தியாசமா இருக்கலாம். இருவர் உடல்மீதும் தேசியக் கொடி போர்த்தியிருக்கு. கலைஞர் உடலில் மார்பிலிருந்து தேசியக் கொடி போர்த்தியிருக்கு. ஜெயலலிதா உடலில் வயிறிலிருந்துதான் தேசியக் கொடி போர்த்தியிருக்கு. கலைஞருக்கு கறுப்புசிவப்பு கரை வேட்டி, காலில் கட்டுப் போட்டிருக்காங்க. அவருக்கு இதேமாதிரி அளவுள்ள பெட்டிதான். ஆறுமுகசாமி ஆணையத்துல சாட்சி சொன்னவங்க, ஜெயலலிதாவுக்கு, கால்லதான் கட்டுப் போட்டோம்னு சொன்னாங்கல்ல. படத்துல காலையும் காணோம். கட்டையும் காணோம்.
இருவருமே நம்மை ஆண்டவங்க. இருவரது பூத உடலும் ராஜாஜி ஹால்லதான் வைக்கப்பட் டது. இருவரது உடலிலும் தேசியக் கொடி இருக்கு. கலைஞருக்கு கால் இருக்கு. ஜெ.வுக்கு கால் இல்லை.
அதுலயும் ஒரு பிராடுத்தனம் என்னன்னா, கலைஞருக்கு வெச்ச மாதிரி தேசியக் கொடியை மார்பிலிருந்துதான் போட்டிருக்கணும். ஆனா, காலைல வெச்ச பூத உடலில், கலைஞருக்கு எப்படி மார்பிலிருந்து கொடியைப் போத்துனாங்களோ, அதுபோலதான் ஜெயலலிதாவுக்கும் மார்பிலிருந்து கொடியைப் போர்த்தியிருக்காங்க. ஜெ.வுக்கு கால் தெரியுது. இது போலி கால். சசிகலாவின் மேற்பார்வையில் உடலைத் தூக்கும்போது பயங்கர ஸ்க்ரீன்ப்ளே. மார்பிலிருந்த கொடி தூக்கும்போது வயிற்றுக்குக்கீழே போய், சவப்பெட்டியின் கடைசி வரைக்கும் போயிடுச்சு. கால் தெரியக்கூடாதுனு சவப்பெட்டியின் கடைசிவரைக்கும் போர்த்தி யிருக்காங்க.
அவங்களோட துரதிர்ஷ்டம், ஆர்மி உடலைக் கையில் எடுத்துச்சு. அவங்க எடுக்கும் போது கொடியை டைட் பண்ணி எடுத்துட்டாங்க.
நம்மிடம் மனோன்னு ஒரு தம்பி இருந்தார். சவப்பெட்டி சம்பந்தப் பட்ட கம்பெனிக்கு, அம்மா வெச்சிருந்த அதே பெட்டி வேணும்னு சொல்லி 10,000 ரூபாய் அட் வான்ஸ் குடுத்து, அந்தப் பெட்டியைப் படம் எடுத்துட்டு வந்தார். பெட்டியோட அளவு ஆறு அடி. பெட்டியில ஜெ.வோட உடல் இருக்கும்போது இரு பக்கமும் இடைவெளி. அந்தம்மாவோட உடல் அளவு மூணரை அடிதான்.
ஜெயலலிதாவோட உடலை நிறுத்திவெச்சு ஒரு படம் போட்டுருக்கோம். உயிரோட இருந்தபோதுள்ள அதேயளவுள்ள படத்தை வெச்சு ஒப்பிட்டு அட்டைப் படம் போட்டிருந்தோம். கோடு போட்டு ஒப்பிட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒப்பிட்டிருந்தோம். சவப்பெட்டியில் இருக்கிற படத்தில் காலைக் காணோம்.
நான் பெரிய விற்பன்னர், விஞ்ஞானி கிடை யாது. என் பார்வைக்கு ஜெ. துள்ளத் துடிக்கத்தான் இறந்திருகிறதா படுது. ஜெ.வுக்கு எப்ப உயிர் போச்சுன்னு யாருக்கும் தெரியாது. ஆறுமுகசாமி கமிஷன்லயே சாட்சியங்கள் அடிப்படையில்தான் அவரது மரண நேரம் சொல்லப்பட்டிருக்கு. அந் தம்மாவோட ஒரு உறுப்பு வெட்டப்பட்டிருக்கு.
ஒரு பெரிய கட்சியோட தலைவி, ஆண்ட முதல்வரோட கால்கள் வெட்டப்பட்டிருக்கு. புகைப்படங்களை வெச்சுதான் அதை நாங்க கண்டுபிடிச்சோம். தலைவியோட உயிர் சின்னாபின்னப்படுத்திப் போயிருக்கு. அதுக்கு காரணமானவங்க பதில் சொல்லியாகணும். பாதிப் பேர் பதில் சொல்லியிருக்காங்க. மருத்துவர் சுதா சேஷய்யன் மாதிரி ஆட்கள் தப்பிச்சுட்டாங்க.
நக்கீரனைப் பொறுத்தவரை பிடிச்ச பிடியிலிருந்து விலகி நிற்கிறதில்லை. அது எங்களோட பணி. இன்னைக்கு வரை அப்படித்தான் போய்க்கிட்டிருக் கோம். ஜெ. மறைவுக்குப் பிறகு, ஆறுமுகசாமி கமிஷன்ல விசாரணை நடந்து அறிக்கை வந்திருச்சு. அறிக்கையை நாங்க எந்த இடத்துலயும் குறை சொல்லலை. கால் பற்றி சாட்சி சொன்னவங்க எல் லாம் பிராடு. பொய் சொல்லிருக்கான். ஜெ.வைப் பாத்துட்டு கால் இருக்குன்னு சொன்னாங்கள்ல அவனை எதால அடிக்கிறதுன்னு நீங்க முடிவெடுத்துக்கோங்க.