த்து ஆண்டு களில் 14 தற்கொலை கள். சர்வதேசத் தரத்தி லான சென்னை ஐ.ஐ.டி. இந்த எண்ணிக் கையில் இந்தியாவி லேயே முதலிடம் பிடித்திருக்கிறது. சமீ பத்தில் நடந்த பாத்திம ôவின் தற்கொலை, இதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அத்தனை கேள்விகளோடும், 28 ஆண்டுகள் சென்னை ஐ.ஐ.டி.யில் இணை பேராசிரியராக இருந்து, ஐ.ஐ.டி.யில் சாதியக் கொடுமைக்கு எதிராக பேசியதற்காக நீதிமன்றத் தீர்ப்பை பெற்றும் "பேராசிரியர்' பதவி கொடுக்கப்படாமல் அங்கிருந்து ஓய்வுபெற்றவரும் கலைஞர் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசின் "கல்பனா சாவ்லா' விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவருமான வசந்தா கந்தசாமியைச் சந்தித்தோம்.

பாத்திமா தற்கொலை வரை மர்மங்கள் நிறைந்த இடமாகவே சென்னை ஐ.ஐ.டி. இருக்கிறது. என்ன காரணம்?

ஏகப்பட்ட நெட்வொர்க், லாபி செயல் பாடுகள் இருப்பதுதான் மர்மத்துக்குக் காரணம். பாத்திமாவின் இழப்பை தற்கொலை என்று சொல்வதைவிட, நிறுவனப் படுகொலை என்பதே சரி. அந்தளவுக்கு அழுத்தம் கொடுத்து, தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள்.

எதன் அடிப்படையில் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கி றீர்கள்?

Advertisment

தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் இடமே பெறமுடியாது. உயர் சாதியினர் மட்டுமே அங்கு படிக்கமுடியும். பாத்திமா ஒரு குழந்தை. அவளுக்கு உதவ, அவள்சார்ந்த சமூகத் தினர் யாருமில்லை. இதற்குக் காரணமான மூன்று பேராசிரியர் களை விட்டு விட்டு, பாத்திமாவின் அப்பாவை ஐந்துமணிநேரம் விசாரிக்க வேண்டிய தேவையென்ன இருக்கிறது. எல்லாம் முடிந்ததும் மெத்தனமாக ஒரு தீர்ப்பைச் சொல்லப் போகிறார்கள்; அதுதான் நடக்கப் போகிறது.

vasantha

பாத்திமா மதிப்பெண் குறைவாக வாங்கியதாகச் சொல்கிறார்களே?

தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மதிப்பீட்டில் காட்ட முடியும். எல்லாமே பேராசிரியரின் கையில்தான் இருக்கிறது. மறுகூட்டல் என்பதே ஐ.ஐ.டி.யில் கிடையாது. பாத்திமாவின் அறிவைக் குறை சொல்லக்கூடாது. அப்படியொரு அறிவான குழந்தைக்கே பாடம் நடத்த முடியாத பேராசிரியர் களைத்தான் கேள்வி கேட்கவேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் வெளிப்படைத்தன்மை, ஐ.ஐ.டி.யில் ஏன் இல்லை?

உயர்சாதி ஆதிக்கமே அதற்குக் காரணம். விதிமுறை கள் எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்களாக தங்களை நினைக்கிறார்கள். சாதித்திமிர்தான் காரணம். அதற்கு சாதகமான ஒரு கட்டமைப்பையே உள்ளேயும், வெளியேயும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஐ.ஐ.டி.யில் உங்களை ஒடுக்கியதற்கு என்ன காரணம்?

1996-ல்தான் முதன்முதலாக தலித் மாணவர் ஒருவர் ஐ.ஐ.டி. கணிதத்துறையில் பதிவு செய்தார். கடைசிவரை தீண்டத்தகாதவர் என்று சொல்லியே அவருக்கு அறை ஒதுக்கவில்லை. அந்த மாணவருக்கு ஆதரவாக செயல்பட்டேன் என்பதற்காக, எனது பதவி உயர்வில் பாரபட்சம் காட்டினார்கள். நீதிமன்ற வழிகாட்டுதலைக்கூட அவர்கள் மதிக்கவில்லை.

உங்களது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததா?

வெற்றியாகத்தான் இடஒதுக்கீடு கிடைத்தது. அதனடிப்படையில் சேர்க்கை நடந்தாலும், படிப்பை முடிக்கவில்லை என்று புள்ளிவிவரம் கொடுப்பார் கள். இவர்களே பாடம் நடத்தி, திருத்தி, மதிப்பெண் கொடுக்கிறார்கள். ஆதிக்க சாதியினரைத் தவிர பிற மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் காரணமே, இவர்கள் கொடுக்கும் அழுத்தம்தான்.

பிராமணர் அல்லாத பிரிவினருக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படாமல் இருப்பதற் கும் தகுதிதான் காரணம் என்கிறார்களே?

அப்படியானால், பேராசிரியர்களை ஐ.ஐ.டி. தேர்வு செய்யக்கூடாது. யூ.பி.எஸ்.சி. போல அனைத்துப் பிரிவினருக்கான பிரதிநிதி களுடன் தேர்வுநடத்திப் பாருங்கள். யாருக்கு தகுதி இருக்கிறது என்பது அப்போது தெரியும். அதைச்செய்யாமல் பி.சி., தலித் பிரிவினருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்பவர்களை முட்டாள்கள் என்றுதான் சொல்வேன்.

அவர்களின் திறமையை விமர்சிக்கும் அளவுக்கு உங்களுடைய திறமையை நிரூபித் தீர்களா?

130 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். எல் லாமே அமெரிக்காவில்தான் வெளியானது. ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளை எழுதியிருக் கிறேன். தகுதி, திறமை பற்றியெல்லாம் பேசுகிற இவர்களில் யாருக்காவது வக்கிருந்தால், ஒரு ஐந்து புத்தகத்தை எழுதச் சொல்லுங்கள், பார்க்கலாம்.

இனியேனும் தமிழகத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்கள், ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கமுடியுமா?

வாய்ப்பே கிடையாது. அந்தக் குழந்தை போனதுமே முடமாகிவிடும். அதன் அறிவை மழுங்கடித்து, அவமானப்படுத்தி, ஒன்றுமில்லாத சூன்யமாக்கி அனுப்புவதுதான் ஐ.ஐ.டி.யின் மகத்தான பணி. மதம், சாதி, தமிழர் -இதில் எதுவாக இருந்தாலும் பேதம் பார்த்து வளர விடமாட்டார்கள். கொஞ்சம் கருப்பான மாணவராக இருந்தால், ஜென்மத்துக்கும் ஐ.ஐ.டி. யில் தேர்ச்சிபெறவே முடியாது. என்னிடம் படித்த பிராமணரல்லாத மாணவர்களே பொதுப்பிரிவினர் என்று போட்டுக் கொண்டதால்தான் வெற்றி பெற்றார்கள். பெண்ணாக இருந்துவிட்டால் மனு சாஸ்திரத்தின்படி அவர்களுக்கு பணிவிடை செய்பவளாகவே பார்ப்பார்கள். ஐ.ஐ.டி. நடைமுறையும் அதையே உணர்த்தும்.

28 ஆண்டுகால போராட்டத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?

தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தோம். சுதந்திரமாக எதுவும் செய்ய முடியாது. எனது கணவர் கந்தசாமி முனைவர் பட்டம் பெற்றிருந்தும், எனது போராட்டத்திற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்து, துணை நின்றார். இன்றும் எனக்கான நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். தம்பி நக்கீரன்கோபால் எனது போராட்டத்தை அட்டைப்படக் கட்டுரையாக வெளிக்கொண்டு வந்ததோடு, இன்றுவரை முழுமையான ஆதரவு தருகிறார்.

-சந்திப்பு: பெலிக்ஸ்

தொகுப்பு: -ச.ப.மதிவாணன்

படம் : ஸ்ரீ பாலாஜி