மிழகத்தில் கடந்த காலங்களில் மணல் திருடர்களிடம் காவல் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பல அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் உயிர்கள் மணல் கொள்ளையர் களால் பறிக்கப்பட்டது. அதே போலதான் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங் களில் தொடர்ந்து நடக்கும் ஆடு திருட்டில் சில காவலர்கள் அலட்சியம் காட்டியதால், தற்போது சக காக்கிச் சட்டையை ரத்தக் கறையாக்கிவிட்டனர் ஆடு திருடர்கள்.

"நவல்பட்டி எஸ்.எஸ்.ஐ கொல்லப்பட்டது எப்படி? கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் என்ன?' மனம் திறந்தார்கள் சில காக்கிகள்..

ff

"தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவன் 21 வயது மணிகண்டன். பல வருடமாக தோகூர், நவல்பட்டு உட்பட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சாலையோர வீடுகளில் நிற்கும் ஆடுகளை நள்ளிரவு ஒரு மணி முதல் 3 மணிக்குள் மக்கள் அசந்து தூங்கும் நேரத்தில் திருடி திருச்சி சந்தையில் விற்றுவிட்டு, விடியும்முன்பே ஊருக்குச் சென்றுவிடுவான். யாருக்கும் சந்தேகம் வராதபடி பகலில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவான்.

Advertisment

மணிகண்டன் திருமணம் செய்தது புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள அன்னப்பட்டி யில். மணிகண்டன் மனைவியின் சித்தப்பா மகன் தான் 14 வயது சிறுவன். அதேபோல மணிகண்டனின் சின்னம்மா மகன் தான் 9 வயது சிறுவன்.

மணிகண்டன் அடிக்கடி தன் மனைவி ஊருக்கு வரும்போது, அவனது மச்சான் 14 வயது சிறுவனை கடைகளுக்கு அழைத்துச் சென்று தீனி வாங்கிக் கொடுத்திருக்கிறான். சில நேரங்களில் தான் போதை ஏற்றும்போது சிறுவன் என்றும் பார்க்காமல் போதை ஏற்றியிருக்கிறான். என்னோட வந்தா நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த் தைகளை சிறுவனிடம் அள்ளிக்கொட்ட சிறுவனும் மணிகண்டனுடன் இரவில் செல்லத் தொடங்கினான். நார்த்தாமலை உள்பட பல இடங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஆடுகளைத் திருடி, அதே ஊரில் உள்ள ஒருசில கசாப்புக் கடைகளில் கொடுத்து பணத்தை வாங்கியதால், 14 வயது சிறுவனுக் கும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது.

இந்த நிலையில்தான், வடகாட்டுப் பட்டியில் மணிகண்டனின் சின்னம்மா உறவினர் இறந்து கரும காரியம் செய்யச் சென்ற மணிகண்டன், இரவானதும் திருட்டு ஆசையில் ஒரு பைக்கில் கிளம்பியிருக்கிறான். இந்தமுறை 14 வயது மச்சானுடன் புதிதாக 9 வயது சிறுவனையும் சேர்த்துக்கொண்டிருக் கிறான். தோகூர் சென்று வழியில் ஒரு வீட்டில் நின்ற ஆட்டைத் தூக்கிக் கொண்டு நவல்பட்டு காவல் சரகத்தில் வந்தபோது, எஸ்.எஸ்.ஐ பூமிநாதனும், ஏட்டு சித்திரவேலுவும் பார்த்து விரட்டியுள்ளனர்.

Advertisment

ff

கீரனூர் எல்லைவரை விரட்டிவந்து பள்ளத்திப்பட்டி சுரங்கப் பாதை மூடியதால் போக வழியின்றித் தவித்து நின்ற 3 பேரையும், பூமிநாதன் பிடித்து சாலையில் முட்டிபோட வைத்துவிட்டு ஏட்டு சித்திரவேலுவுக்கு போன் செய்து தகவல் சொன்னதோடு, மணிகண்டனின் அம்மா நம்பரை வாங்கி, உங்கள் மகன் மற்றும் உங்க தங்கச்சி மகன் மணிகண்டன், மச்சான் உள்பட 3 பேரும் ஆடு திருடி வரும்போது பிடித்து வைத்திருக்கிறோம். விடிந்ததும் நவல்பட்டு காவல் நிலையம் வாங்க'' என்று தகவல் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து போலீசாரை போனில் அழைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மணிகண்டன், அருகில் கிடந்த கல்லை எடுத்து பூமிநாதனின் பின்மண்டையில் தாக்க, நிலைகுலைந்து கீழே விழுந்த நேரத்தில் தனது பைக்கில் வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் தலையில் அடுத்தடுத்து 4 வெட்டுகள் வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறான்.

அதன்பிறகு வந்த ஏட்டு சித்திரவேலும், மற்றொரு எஸ்.எஸ்.ஐ. சேகரும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சி.சி.டி.வி. பதிவுகளை ஒரு குழு ஆய்வுசெய்ய, செல்போன்களை ஒரு குழு ஆய்வுசெய்து தகவல் களை சொல்லிக் கொண்டிருக்க 4 பிரிவாக போலீசார் தேடுதல் பணியை தொடங்கினர். எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கடைசியாக பேசிய நம்பர்களை கால் ஹிஸ்டரி வாங்கிப் பார்க்கும்போது, 21 நிமிடம் வரை ஒரு புதிய எண்ணில் பேசியது தெரியவந்தது. அந்த எண் மணிகண்டனின் தாயாருடையது.

அவரைத் தேடி தோகூருக்கு ஒரு டீம் போனது. ஆனால் அந்த செல்போன் கடைசியாக கே.புதுப்பட்டி பகுதியில் சிக்னல் காட்டியதால் அந்தப் பகுதிக்கு சென்ற குழு, வடகாட்டுப்பட்டிக்குச் சென்றபோது மணிகண்டன் உள்பட பூமிநாதனைக் கொன்ற கும்பல் சிக்கியது. இந்த வழக்கில் போலீஸ் தொழில்நுட்ப பிரிவு, சிறப்பு பிரிவு, செல்போன் நிறுவனம் என அனைவரும் வேகமாகவும் சரியாகவும் செயல்பட்டதால் குற்றவாளிகளை விரைவாக பிடிக்க முடிந்தது'' என்றனர்.

இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு... "பூமிநாதன் முதலமைச்சர் பதக்கம் பெற்றவர். கமாண்டோ பயிற்சி பெற்றவர். விவேகத்துடன் செயல்படக் கூடியவர். சம்பவத்தன்று சட்டப்படியும் சிறார்களிடம் கனிவாகவும் நடந்துள்ளார். 100 சதவிகிதம் சரியான ஆட்களை கைது செய்திருக்கிறோம். இனிமேல் ஆடு திருட்டுக்கு முடிவு கட்டப்படும்''’என்றார்.