கோவை மாவட்டத்தில் பல பெண்களை மோசடியாகத் திருமணம் செய்து பணம், நகை, பொருட்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்ட மோசடி கல்யாண மன்னன் பற்றி புகார் வரவே அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினோம்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), "30 வயதான நான் கல்லூரியில் படிக்கும் போதே அதே கல்லூரியில் படித்த ஒருவரை காதலித்தேன். பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை காதல் திருமணம் செய்து எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டோம்.
இந்நிலையில் எனது பெற்றோர் எனக்கு இரண்டாவது திருமணம் செய்ய நாமக்கல் பகுதியில் இயங்கும் திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தனர். கரூர் மாவட்டம் நல்லியா பாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், அவருடைய பெற்றோர் கருணாநிதி, நிர்மலாவுடன் பெண்கேட்டு வந்தனர். என் பெற்றோர் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதையும், ஒரு குழந்தை இருப்பதையும், தற்போது விவாக ரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை கூறி பார்த்திபன் குடும்பத்தாரை அனுப்பிவைத்தனர். அதன்பின், பார்த்திபன் என் செல்போனுக்கு தொடர்ந்து போன் செய்து பேசினார். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உன்னை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உன் குழந்தை இனி நம் முதல் குழந்தை என பல ஆசை வார்த்தை கூறினார். இதனால் இருவீட்டார் சம்மதத் துடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
கொரோனா தொற்று ஊரடங்கால் எங்கள் ஊரிலுள்ள முருகன் கோவிலில் எளிமையான முறையில் 27-05-2020 அன்று திருமணம் நடந்தது. வரதட்சணை யாக எனக்கு 35 சவரன் தங்க நகை யும், மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் பணமாகவும், ஏழு சவரன் நகை யாகவும் என் வீட்டார் கொடுத் தனர். திருமணம் முடிந்து கோயம் புத்தூரிலுள்ள பார்த்திபன் வீட் டிற்கு சென்றோம். அன்று இரவு நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாகக் கூறிய பார்த்திபன், நடுராத்திரியில் போதையில் வீட்டுக்கு வந்தார். சில நாட்கள் கழித்து வீட்டுக் குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திபனிடமும் அவன் பெற்றோரிடமும் வாங்கிய கடன் தொகையை திருப்பித் தருமாறு கூச்சலிட்டனர். ஒருவழியாக அவர் களை சமாதானம் செய்து பணத்தை விரைவில் தருவதாகக் கூறி அனுப்பி னார்கள்.
என் வீட்டாரிடம் எப்படியாவது பேசி 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். பணத்தைப் பெற்றுத்தராவிட்டால், கடன்காரர்கள் புகாரளித்தால் அரசு வேலை பறிபோகும் என்று கெஞ்சினார் பார்த்திபன். நானும் இவர்களை நம்பி என் வீட் டாரிடம் பணம் கேட் டேன். இந்நிலையில் பார்த்திபன் எனது பெயரில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் என்னுடைய திருமணத்திற்காக போட்ட நகைகளை என் பெயரிலே அடமானம் வைத்தார். சேலத்திலுள்ள எனது மாமா குணசேகரனிடம் நான்கு லட்சம் ரூபாய் வங்கி வழியே பெற்றார். எனது அம்மாவின் பெயரில் நாமக்கல்லில் உள்ள கே.டி.எஸ். பைனான்ஸ் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டார். நான் சீட்டு போட்டு 5 லட் சம் வைத்திருந்தேன். அதையும் பெற்றுக்கொண் டார். எனது தம்பி வினோத் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாயை பார்த்திபனிடம் கொடுத்தனர்.
கடன் பிரச்சினை ஒருவழியாகத் தீர்ந்தது என்று என்னிடம் கூறிவிட்டு, சென்னையில் ட்ரெயினிங் உள்ளதாகக் கூறி பார்த்திபன் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்துவந்தார். மாதம் இரண்டு முறை மட்டுமே வீட்டுக்கு வந்துசென்றார். இதனிடையே கடன் கொடுத்தவர்கள் வழக்குத் தொடர்ந்த தால் அரசு வேலையி லிருந்து நீக்கப்பட்ட தாகத் தெரிவித்தார். ஆனால் எச்.டி.எப்.சி. வங்கியில் மாதம் ஒன் றரை லட்சம் சம்பளத் திற்கு வேலை கிடைத்துள்ளதாகவும், சென்னையில் தங்கி வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
என்னிடமிருந்து பணத்தையும் நகையையும் பெற்றபின் பார்த்திபனின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி யது. இந்நிலையில் நான் மூன்று மாத கர்ப்பமாக இருந்தேன். என் வயிற்றில் வளரும் குழந்தை அவருடையது அல்ல என்று என்னிடம் சண்டை போட, மனமுடைந்து நான் பூச்சிமருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தேன். இதையே சாக்காக வைத்து குழந்தை வயிற்றில் நன்றாக வளராது என்று கூறி குழந்தையைக் கலைக்க வைத்தார். பார்த்திபன் மீதான சந்தேகத்தால், நான் அவருடைய செல்போன் மற்றும் லேப்டாப்பை சோதனை செய்தேன். கேரள மாநிலம் பாலக்காட்டில் நீது என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு குழந்தை அவருக்கு இருப்பது தெரியவந்தது. பின்னர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும், கோவையைச் சேர்ந்த மஞ்சு, தீபா, கஸ்தூரி, நிர்மலா, காயத்திரி, பூர்ணிமா, ஹேமா என லிஸ்ட் நீண்டுகொண்டே போனது. இவர்களில் சில பெண்களை திருமணம் செய்தும் சில பெண்களை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது. இதற்கு அவனுடைய பெற்றோரும் உடந்தை.
என்னிடம் மோசடி செய்து வாங் கிய 15 லட்சம் ரூபாயையும், கார் மற்றும் 42 சவரன் நகைகளையும் தருமாறு கேட்டேன். அதற்கு, தற்போது குடி யிருக்கும் வீட்டைக் காலி செய்தால் தான் தருவேன் என தெரிவித்தார். நான் வீட்டைக் காலி செய்யாத காரணத் தால் அடியாட்கள் மூலம் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இதுதொடர்பாகவும் அவர் செய்த மோசடிதொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளேன்'' என்றார்.
ரமாவைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய சீதா (பெயர் மாற்றப்பட்டுள் ளது), “"எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் பக்கத்துல ஒரு கிராமம். சினிமாவில் படம் டைரக்ஷன் பண்ண வேண்டும் என்பது கனவு. ரக்ஷித் என் பவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் படப்பிடிப்பு நடத்துறதா தகவல் வந்துச்சு. ஸ்கிரிப்ட் ரைட்டிங் கிற்கு ஆள் தேவைன்னு சொல்லியிருந் தாங்க. ரக்ஷிதை மீட் பண்ணப்போ, படத் தயாரிப் பாளர், என்று சொல்லி பார்த்திபன்னு ஒருத்தரை அறிமுகம் செய்தார். நாலஞ்சு நாள் ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஸ்டோரி போர்டு, லொகேஷன் வேலையை செஞ்சிட்டு வந்தோம். ஒரு நாள் ராத்திரி போன்ல பேசிட்டிருந்தேன். அப்போ அந்த பார்த்திபன் வரச்சொல்லியிருந்தாரு. அவர் ரூமுக்குப் போனேன். ஸ்கிரிப்ட் பத்தி என்கிட்ட பேசிட்டு இருந்தாரு. அப்போ ஜூஸ் ஒண்ணு கொடுத்தாரு. அதைக் குடிச்சதும் நான் நினைவிழக்க ஆரம்பிச்சேன். பார்த்திபன் என்கிட்ட அத்துமீறுவதைத் தடுக்க முடியல. அன்னைக்கு இரவெல்லாம் என்னைச் சீரழிச்சார். மறுநாள் காலையில ஏன் இந்த மாதிரி பண்ணுனீங்கன்னு கேட்டு அழுதேன். அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு. எனக்கு 18 வயசுகூட ஆகலைன்னேன். கொஞ்ச நாள் சினிமா வேலை பாரு. படம் முடிஞ்சதும் திருமணம் வச்சுக்கலாம்னார். நாங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல வீடு வாடகைக்கு எடுத்து புருஷன் பொண்டாட்டிபோல வாழ்ந்து வந்தோம்.
கல்யாணம் பண்ணுங்கன்னு வற்புறுத்துனதால நண்பர்கள் மூலமா, ஆன்லைன்ல திருமணம் செஞ்சதா ஒரு சர்டிபிகேட் கொடுத்தார். இந்த நேரத்துல நான் கர்ப்பமா யிருந்தேன். இப்போதைக்கு குழந்தை வேணாம்னு சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தி கர்ப்பத்தைக் கலைச்சாரு. ஒரு சமயம் அவருக்கு வந்த போனை நான் அட்டெண்ட் பண்ணு னேன். அப்பதான் இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதும், பல பெண்களிடம் இவருக்கு தொடர்பு இருக்கிற விஷயமும் தெரியவந்தது. இதைக் கேட்டதுக்கு என்னை அடிச்சு நொறுக் கிட்டார். வேற சப்போர்ட் இல்லாததுனால எங்கேயும் போக முடியல. இவரால நிறைய பெண்களோட வாழ்க்கை சீரழியுது. இனியும் எந்தப் பொண்ணும் ஏமாறக்கூடாதுதான் நான் புகார் கொடுத்திருக்கேன்''’என்று அழுதபடி பேசினார்.
நாம் பார்த்திபனைத் தொடர்புகொண்டு பேசியபோது, "எனக்கும் கேரளாவைச் சேர்ந்த நீது என்ற பொண்ணுக்கும் கல்யாணம் ஆனது உண்மைதான். சட்டப்படி கோர்ட்ல டைவர்ஸ் வாங்கியிருக்கேன், ரமா வயதை மறைத்து என்னை கல்யாணம் பண்ணியிருந்தாங்க, ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருந்ததை மறைச்சிருந்தாங்க. அதனால எங்களுக் குள்ள சச்சரவு ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கு. சீதா படம் நடிக்கதான் வந்தாங்க. என்கிட்ட நிறைய பணம் வாங்கி யிருக்காங்க. அதுக்கான ஆதாரம் இருக்கு. எதுவா இருந்தா லும் சட்டப்படி சந்திக்க தயார். மத்தபடி நீங்க சொல்ற பொண்ணுங்கள யாருன்னு தெரியல. அவங்க எல்லாம் எனக்கு ப்ரெண்ட்டா இருக்கலாம்''” என்று முடித்துக்கொண்டார்.
"பல பெண்களுடன் நீங்கள் நெருக்கமாக இருக்கும் படங்கள் இருக்கிறதே. அந்தப் பெண்கள் எல்லாம் யார்? தவிர வும் அரசு வேலை, எச்.டி.எஃப்.சி. வேலை, படத் தயாரிப்பு என பல வேலைகளில் ஈடுபட்டது எதனால்?''’என்ற கேள்வி களுக்கு பார்த்திபனிடம் பதில் இல்லை.