ரோடு இடைத்தேர்தல் போட்டி ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கும், தந்தை பெரியாரை இழிவுபடுத்தி அவரை விமர்சிப்பதன் மூலமாக மக்களின் கவனத்தை திசை திருப்பமுடியும் என கணக்குப் போட்டுள்ள நாம் தமிழர் கட்சி சீமானுக்குமானதாக மாறியிருக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுகிற 42 சுயேட்சைகளில் பலர் இந்த தேர்தலை சீமானுக்கு எதிரான போராட்டக் களமாக மாற்றியுள்ளார்கள்.

அந்த வரிசையில் பத்திரிகையாள ரும், சமூக ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவருமான தமிழா தமிழா பாண்டியனும் ஒருவர்.

எதற்காக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்? என நாம் கேட்டதும், "நான் கட்சி சார்பற்றவன். மூடநம்பிக்கை, சமூக அநீதிக்கு எதிராக தன் வாழ்நாள் முழுக்க பாடு பட்ட தந்தை பெரியாரை பிற்போக்குவாதிகள், மதவாதிகள், மேல்சாதி ஆதிக்கவாதிகள், கடவுளின் பெயரைச் சொல்லி பிழைப்பு வாதம் நடத்தும் கும்பல்கள் விமர்சித்து வந்துள்ளார்கள். எந்த பெரியாரால் இன்று வெளியில்வந்து பேசமுடிகிறதோ அதில் ஒருவரான சீமான், பெரியாரைப் பற்றி கேவலமான குற்றச்சாட்டுகள், ஆதாரமற்ற தகவல்களை பரப்பிவருகிறார்.

அவர் இந்த இடைத்தேர்தல் களத்தை தந்தை பெரியாருக்கு எதிரான களமாக மாற்றி, தனக்குக் கிடைக்கிற வாக்குகள் அனைத்தும் பெரியாரை மக்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று, தேர்தலுக்குப் பிறகு பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டி யிடாததால், யாருமற்ற களத்தில் ஒரு மோடி மஸ்தான்போல பெரியாருக்கு எதிராக விளை யாடிக்கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு ஒரு ஆபத்தான சக்தியான இந்த சீமானை மக்களிடம் அம்பலப்படுத்து வதற்காகவே நான் இந்த இடைத்தேர்தலில் போட்டி யிடுகிறேன். அ.தி.மு.க. வாக்கு களை முழுமையாக சீமான் பெறமுடி யாது என்றாலும், அதைத் தடுக்கத்தான் எங்களைப் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கிறோம்''’என்றார்.

சுயேட்சை வேட்பாளர் சா.கிருஷ்ணமூர்த்தி, "நான் ஈரோடு மரப்பாலத்தை சேர்ந்தவன் நாங்கள் வாழ்கிற வீடு தந்தை பெரியாரால் எங்கள் குடும்பத் திற்கு கொடுக்கப்பட்டது. தந்தை பெரியாரின் சமூகப்புரட்சி, பெண் விடுதலை, சமூக சீர்திருத்த கருத்துக்களில் அனைத்து மக்களும் உடன்படுவார் கள். பெரியாரின் கருத்துக்கள்தான் இன்று சட்டரீதியாக நமக்கு பாதுகாப்பைக் கொடுத்துவரு கிறது. அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தலைவரை அசிங்கப்படுத்தி தொடர்ந்து தவறான தகவல் களைக் கொடுக்கிற சீமானை மக்களிடம் அம்பலப் படுத்தவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற் காகத்தான். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடு கிறேன். எனக்காக தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன், சுந்தரவல்லி, விடுதலை அரசு போன்றவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் தந்தை பெரியாரின் உன்னதமான கருத்துக்களை எடுத்துரைத்தும், அ.தி.மு.க. தலைவர்களான மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எப்படியெல்லாம் சீமான் கேவலமாகப் பேசினார் என் பதை ஆதாரத்தோடு அ.தி.மு.க. தொண்டர்களிடம் நிரூபித்தும், தந்தை பெரியாரை புகழ்ந்து, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேசிய பதிவுகளை வெளியிட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை ஒரு பிரச்சாரக் களமாக நாங்கள் பயன்படுத்துகிறோம்'' என்றார்.

விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி வெண்ணிலா, "1957-ல் தந்தை பெரியார் சட்ட எரிப்பு போராட் டம் நடத்தியபோது அதில் கலந்துகொண்டவர் களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது. பெரியாரின் அறிவிப்பை யேற்று தஞ்சை சோழபுரத்தைச் சேர்ந்த எங்கள் தாத்தா முருகேசன் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆக, நான் தந்தை பெரியாரின் கொள்கைவழிப் பேத்தி. பெரியார் ஒருவர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் இந்த தமிழ் சமூகம் இப்போதும் மூடநம்பிக்கையில் ஊறித் திளைக்கும். இப்போது வடமாநிலங்களில் எப்படி எல்லாவித அநீதிகளும் மதச்சாயம் பூசிக்கொண்டு நிற்கிறதோ.... அதுபோல தமிழகம் இருந்திருக்கும். ஆனால் பெரியார் பிறந்ததால்தான் சமத்துவம், சமூக நீதி இங்கு நிலைபெற்றது.

erode

பெரியாரைப் புகழ்ந்து, அதன் மூலமாக நாம் அமைத்துக்கொடுத்த மேடைகளில் ஏறி தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டு பிரபலமான நபராக வலம்வந்து, இப்போது வளர்ந்த வீட்டையே எரிக்கிற ஒரு அபாயச் செயலை சீமான் செய்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் மோசமான ஆட்சி, மோடியின் தவறான நிர்வாகம், நிர்மலா சீதாராமனின், ஜி.எஸ்.டி. என்கிற ஒரு கோரமான வரிவிதிப்பால் தமிழகத்தின் பொருளாதார நிலை மிகவும் பாதாளத்தில் தள்ளப்படுவதை, அம்பலப் படுத்தவேண்டிய இந்த தேர்தல் களத்தில், தவறான தகவல்களைக் கொண்டு பெரியார் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்வதால் ஊடக வெளிச்சம் பெறும் செயலை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல்களின் பின்னணியிலிருந்து செய்கிறார் சீமான்,

Advertisment

அந்த சீமானை மக்களிடம் அம்பலப்படுத்த தேர்தலை ஒரு பிரச்சார களமாக நாங்கள் எடுத்துள்ளோம். எங்களின் இந்த தேர்தல் பிரச்சார பயணத்திற்கு எங்கள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகின்ற னர்'' என்றார்.