சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் இப்படி யாராலும் தன்னை எதுவும் செய்யமுடியாதென, அ.தி.மு.க. தலைவர் நானே என்று அதிகார மமதையிலிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வடிவில் இடி இறங்கியிருக்கிறது.
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். உட்பட அனைவரையும் இணைத்து கட்சி ஒன்றாகச் செயல்பட வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பே செங்கோட்டையன் தலைமையில் மாஜிக்கள் தங்கமணி, வேலுமணி உட்பட சிலர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசிப்பார்த்தார்கள்.
ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இசைவாக எந்தப் பதிலும் தரவில்லை. செங்கோட்டையனின் முயற்சிக்கு தமிழகம் முழுக்க உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் ஆதரவு கொடுத்தார்கள். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு செங்கோட்டையனை கட்சியிலிருந்து ஓரங்கட்டும் வேலையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. ஈரோடு மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் தன்னிச்சையாக செயல்பட்டார் எடப்பாடி.
தொடர்ந்து தன்னை அவமதிப்பதை செங்கோட் டையன் அமைதியான முறையிலேயே பார்த்துவந்தார். இந்த நிலையில்தான் கடந்த 9-ஆம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் அத்திக்கடவு அவினாசி திட்டத் தால் பயன்பெற்ற விவசாயிகள் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார்கள். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாமலிருந்ததை காரணம்காட்டி அந்த நிகழ்ச்சிக்குச் செல்லாமல் புறக்கணித்தார் செங் கோட்டையன். தனது அதிருப்தியையும் வெளிப்படை யாகக் கூறினார்.
சீனியர் செங்கோட்டையன் கூறுவது சரியானது. எடப்பாடி பழனிச்சாமி தனித்துச் செயல்படுகிறார். அது தவறு என்றும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். படம், அவரைத் தொடர்ந்து கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்திய அம்மாவின் படம் என இரண்டு தலை வர்களின் படமில்லாமல், விபத்தில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் படம் மட்டும் இருப்பது ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களை அவ மதிப்பதுபோல் இருக்கிறது என ஆங்காங்கே கலகக் குரல்கள் எழுந்தன.
செங்கோட்டைய னுக்கு நெருக்கமான சிலரிடம் நாம் பேசியபோது அவர் மனதில் உள்ளதைக் கூறினார்கள். "சசிகலா, ஓ.பி.எஸ். உட்பட அனைவரையும் கட்சியில் இணைக்கவேண்டும். அ.தி.மு.க. என்றால் இப்போது வட மாவட்டம், கொங்கு மண்ட லத்தில் மட்டுமே இருக்கிறது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை முழுமையாக இழந்துவிட்டோம். அதற்குக் காரணம் அ.தி.மு.க. இப்போது ஒரு சாதிக்கட்சியாக பார்க்கப்படுவதுதான். அ.தி.மு.க.வுக்கு எப்போதுமே 27% வாக்குகள் நிரந்தரமாக இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அது 20 ற்ர் 23% ஆகக் குறைந்துவிட்டது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், அனைத்து சமூகக் கட்சி நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்லவேண்டும். சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரை இணைக்கவேண்டியது அவசிய மாகிறது. இதைத்தான் நேரடியாக செங்கோட்டையன் எடப்பாடி யிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. இதேநிலை தொடர்ந் தால் கட்சி வாக்கு வங்கியை முழுமையாக இழக்கக்கூடும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க. சந்தித்திருக்கவேண்டும் என்று செங்கோட்டையன் விரும்பினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலைப் புறக் கணிப்பதாக அறிவித்து வேட் பாளரை நிறுத்தவில்லை. நடந்து முடிந்த இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி 10% தி.மு.க.வுக்கு போயிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் தொடர் செயல்பாடுகள் அ.தி. மு.க.வை பலவீனப்படுத்தி கொண்டே செல்வதால், செங் கோட்டையனின் மனம் மிகவும் வேதனையில் உள்ளது. கட்சியை எப்படியாவது காப்பாற்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். அவர் எப்பொழுதுமே அதிரடியான பேர்வழி அல்ல. அமைதியாக இருந்து காரியம் சாதிப்பவர். பல நிர்வாகிகள் அவரோடு தொடர்பிலுள்ளார்கள். மிக விரைவில் அ.தி.மு.க. தலைமை சீர்செய்யப்படும். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் உரிய முக்கியத்துவம் தரலாம் என்பதுதான் செங்கோட்டையன் கணக்கு.
கட்சியை தன் கையில் வைத்திருக்க அவர் ஆயிரம் கோடி செலவழித்துவிட்டதாகவும், இப்போது கட்சித் தலைமை மாறினால் தனக்கு ஆயிரம் கோடி யார் கொடுப்பார்கள் என்று கேட்கிறாராம் எடப்பாடி. "இந்த ஆயிரம் கோடியை எடப்பாடி பழனிச்சாமி என்ன வியர்வை சிந்தி சம்பாதித்தாரா? எல்லாமே ஆட்சி அதிகாரத்திலிருந்து பயன்பெற்றதுதானே?'” என்கிறார்கள்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் தோட்டத்து வீடான கோபி குள்ளம்பாளையம் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை பரிந்துரைப்படியே தமிழக காவல்துறை பாதுகாப்பு வழங்கிவருகிறது.
கோபி அருகேயுள்ள நல்லகவுண்டம்பாளையம் கிராமத்தில் 12ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கோட்டையன் "மறைந்த தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் என்னை வாழவைத்த தெய்வங்கள். இந்த இயக்கம் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்'' என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கைவிடும் தொனியில் பேசினார். செங்கோட்டையனின் இந்த எதிர்ப்புக் குரல் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளையும் ஈர்த்துள்ளது.
மிக நெருக்கமான அ.தி.மு.க. சீனியர்களிடம், "பழனிச் சாமிக்கு மார்ச் வரை டைம் கொடுப்போம். மார்ச் மாதத்திற்கு பிறகு அ.தி.மு.க.வின் மானத்தை நாம் இணைந்து காப்போம்'' எனக் கூறியிருக்கிறாராம் . செங்கோட்டையனின் செயல்திட்டங் களுக்கு எடப்பாடி பழனிச்சாமி இணங்கிவரவில்லையென்றால், அதன்பிறகு தனிநபராக எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வுக்கு வெளியே நிறுத்தப்படுவார் என்கிறார்கள் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்.