தேர்தல் காலம் நெருங்கிவிட்டது. எதைத் தொட்டால் வாக்குகள் வந்து கொட்டும் என்பதுதான் அரசியல் வாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கும். அருமனை கிறிஸ்துமஸ் விழாவுக்குச் சென்றார் முதல்வர் எடப்பாடி. அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், ஜெயலலிதா இங்கு வந்தபோது தெரிவித்ததை நினைவூட்டினார். எடப்பாடி பேசும்போது, ""அ.தி.மு.க. ஆட்சி அமைந் தால் பட்டா இடத்தில் தேவாலயங்கள் கட்ட அனுமதிக்கப்படும் என ஜெயலலிதா கூறியதை பரிசீலிக்கிறேன் என கூறிச் செல்ல, எடப்பாடி பழனிசாமி மீது கிறிஸ்தவ மற்றும் இந்து அமைப்புகளின் கோபம் திரும்பியுள்ளது.

eps-cm

தேவாலயங்கள் கட்ட அனுமதி தந்தால் இந்து, கிறிஸ்தவ அமைப்புகள் ஏன் கோபப்படவேண்டும்?

அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை தலைவர் வழக்கறிஞர் தியோடர் சேம், “""1984 மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் புதிதாக ஆலயங்களோ, கோவில்களோ அமைக்கக்கூடாது என அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில்தான் 2010-ல் கிறிஸ்துமஸ் விழாவுக்கு வந்த ஜெயலலிதா, பட்டா இடத்தில் தேவாலயம் என்ற அறிவிப்பை வாக்குறுதியாக அளித்தார். ஆனால் அந்த அறிவிப்பு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது.

Advertisment

இந்த நிலையில் எடப்பாடி முதல்வரானதும் குமரி மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ., பெந்தேகொஸ்தே, இரட்சணிய சேனை, லுத்தரன் சபை உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகள் சேர்ந்து மூன்றுமுறை கருங்கல் அல்லது நாகர்கோவிலில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு அவரை அழைத்தோம். அவர் வர மறுத்துவிட்டார். இந்தநிலையில் இந்த ஆண்டு கிறிஸ்தவ விழாவில் முதல்வர் கலந்துகொள்ள இருப்பதாக அவர் தரப்பில் எங்களை அணுகினார்கள். அப்போது எங்கள் தரப்பிலிருந்து அருமனையில் ஜெயலலிதா அறிவித்துச் சென்ற அறிவிப்பை முதல்வர் நிறைவேற்றவேண்டும் என்று கூறினோம். அதற்கு அவர்களுடைய பதில் மௌனமாகவே இருந்தது. இதுசம்பந்தமாக மந்திரி வேலுமணிகூட பேசினார். எங்கள் முடிவில் உறுதியாக இருந்தோம்.

eps-cm

இந்தநிலையில்தான் கடைசியில் தளவாய்சுந்தரத்தின் முயற்சியில் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண் டார். இந்த மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டால் தமிழகம் முமுவதும் சிறுபான்மையினர் வாக்கைப் பெற்றுவிடலாம் என்ற குறிக்கோள்தான். கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளவேண்டுமென்ற எண்ணம் இருந்திருந்தால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ அமைப்புகளும் அழைத்த விழாவுக்கு வந்திருக்கலாமே.

Advertisment

அதைவிட்டு பிஷப், பாதிரியார்கள், கிறிஸ்தவ அமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளாத தனிநபர் விழாவில் கலந்து கொண்டார். அது ஒரு அ.தி.மு.க. கூட்டம்போல் தான் நடந்தது. 2010-ல் ஜெயலலிதா பட்டா இடத்தில் தேவாலயங்கள் கட்டலாம் என அறிவிக்கும்போது அதே மேடையில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர். எடப்பாடி 4 ஆண்டு கள் ஆட்சியிலிருந்தபோது எதுவும் செய்யாமல் இப்போது அம்மா கூறியதை பரிசீலனை செய்கிறேன் என்கிறார். இரு மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ. தலைமையில் ஒரு சமா தான கமிட்டியாவது அமைத்திருக்கலாம் அதுகூட செய்யவில்லை'' என்றார்.

eps-cm

விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன் கூறும் போது, ""இதே அருமனை பகுதியில் இந்துக்கள் கொண்டாடும் பொங்கல் விழாவை இரவு 10 மணிக்கு மேல் நடத்த அனுமதியில்லை. காலகாலமாக இரவு முமுவதும் நடத்தப்பட்டு வந்த சரஸ்வதி பூஜை விழாவையும் தற்போது இரவு 10 மணிக்கு மேல் நடத்த அனுமதியில்லை. ஆனால் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் இரவு 11.45 மணி வரை பேசியிருக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. இது எந்தவிதத்தில் நியாயம். வேணுகோபால் கமிஷன் பரிந்துரைத்த படி கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டக்கூடாது என்ற நிலை இருக்கும்போது எப்படி முதல்வர் அதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பேன் என்பார்? நடைமுறைப்படுத்த முடியாத ஒரு காரி யத்தை அழுத்தமாகக் கூறி இரு மதத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா?

சில தினங்களுக்கு முன்தான் அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் பிரதமரையும் முதல்வர் எடப்பாடியையும் இந்து இயக்கங்களையும் கடுமையாக ஒருமையில் பேசியது சமூக ஊடகங்களில் பரவியது. இதை தொடர்ந்து போலீசார் ஸ்டீபன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையெல்லாம் உளவுத்துறை மூலம் அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமல் முதல்வர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதன் நோக்கம் என்ன? மத நல்லிணக்க விழாவாக இருந்தால் முதல்வா? வருவதை வரவேற்கிறோம். ஆனால் தனிநபர் நடத்திய இந்த விழாவுக்கு அரசு பல கோடி ருபாய் செலவு செய்திருக்கிறது. அரசு இயந்திரங்களும் காவல்துறையும் நடுரோட்டில் இரவு பகலாகக் கிடந்தன. இங்கு மக்கள் பணம்தானே விரயமாகி யிருக்கிறது''’’ என்கிறார்.

இதுகுறித்து அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபனிடம் பேசும் போது, “""இங்கு ஆண்டுதோறும் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு எல்லா கட்சித் தலைவர்களும் பல முதல்வர்களும் வந்திருக்கிறார்கள். அதை நாங்கள் மதம், அரசியல் சாராத நல்லிணக்க விழாவாகத்தான் நடத்தினோம். பல தலைவர்கள் இங்கு வரும்போது சிலருக்கு சில கருத்துகள் இருக்கலாம். அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்'' என்றார்.

-மணிகண்டன்