கடந்த 2022, டிசம்பரில், புதுக் கோட்டை மாவட்டம், முத்துக்காடு ஊராட்சியி லுள்ள வேங்கைவயல் கிராமத்தில் சில குழந்தை களுக்கு ஒவ்வாமை ஏற் பட்டு மருத்துவமனை களில் சிகிச்சைபெற, டிசம்பர் 26ஆம் தேதி, மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தபோது, அதில் மலம் கலந் திருப்பது கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
இதையடுத்து, வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரணை செய்துவந்த நிலையில், அப்போ தைய மாவட்ட ஆட்சியர் வேங்கை வயல் சென்றபோது திடீரென தீண் டாமை புகார் எழுப்பியதால் வழக்கின் தன்மை மாறி, நாடு முழுவதும் பேசுபொருளானது. அதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை முழுமை யடைய இருந்த நிலையில், சி.பி.எம்., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அப்பகுதி மக்க ளின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2023, ஜனவரி 14ஆம் தேதி வழக்கு விசாரணையை சி.பி. சி.ஐ.டி-க்கு மாற்றியது தமிழக அரசு. தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாரா யணா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
வேங்கைவயல், இறையூர், காவேரி நகர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சந்தேகத்துக் குரிய நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை செய்து, செல்போன்களையும் ஆய்வு செய்தனர். இறுதியில் சுமார் 31 நபர்களுக்கு டி.என்.ஏ. சோதனை, 5 பேருக்கு குரல் பதிவு சோதனை எனப் பல அறிவியல் சோதனைகளையும் செய்தனர். இதற்கிடையே உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தினர். நாடாளுமன்றத் தேர்தலை இரு கிராமங்களும் புறக்கணிப்பதாக அறிவிக்க, அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வேங்கைவயல் கிராம மக்கள் மட்டும் வாக்களித்தனர்.
இவ்விவகாரம் இரண் டாண்டுகளாகத் தொடர் வதால், சி.பி.ஐ. விசா ரணைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந் நிலையில்தான் கடந்த ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான சி.பி.சி.ஐ.டி போலீசார், மூடி, முத்திரையிட்ட ஒரு கோப்பை நீதிமன்றத்தில் கொடுத்தனர். இந்நிலையில் தான் 24ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறி ஞர் ரவீந்திரன் சி.பி.சி.ஐ.டி. தரப்பிலிருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தான் இச்செயலை செய்தவர்கள். முத்துக்காடு ஊராட்சிமன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாவின் பெயரைக் கெடுக்க இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்று கூறியதும் வேங்கைவயல் மீண்டும் பரபரப்பானது.
இதையடுத்து சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோர் வேங்கைவயல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பையே குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர். அதனால் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டனர்.
வேங்கைவயல் சம்பவத்தில் வதந்திகள் பரப்ப வேண்டாமென்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில், "வேங்கைவயல் குடிநீர்த்தொட்டி விவகாரம் சம்பந்தமாக கிராம சபைக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, போலீஸ்காரர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்தை ஊராட்சிமன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா அவமானப்படுத்தியதால் அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த செயல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்தையா ஆகியோரிடம் விசாரணை செய்ததுடன், அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்து, அழிக்கப்பட்ட பதிவுகள், படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். அதனால் இது சம்பந்தமாக யாரும் வதந்திகள் பரப்ப வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லை, உடனே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 25ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வி.சி.க.வினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தவர்கள், பழைய பேருந்து நிலையமருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சிலையிடம் மனு கொடுக்க முயன்றபோது போலீசார் தடுத்ததால் திடீரென சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல வி.சி.க. மேற்கு மாவட்டச் செயலாளர் வெள்ளைநெஞ்சன், வடக்கு மா.செ. இளமதி அசோகன் உட்பட பலர் வேங்கைவயல் கிராமத்திற்குள் செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, "சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கையில்லை. எங்கள் தரப்பையே குற்றவாளியாக்கியுள்ளனர். உண்மையை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என்று வேங்கைவயல் கிராம மக்கள் தர்ணா செய்தனர். இறையூர் மக்களோ, சி.பி.சி.ஐ.டி. விசாரணை காலம் கடந்தாலும், விசாரணை அறிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் ஊர் பெயருக்கு இனி களங்கமில்லை' என்கின்றனர்.