தாலுகா அலுவலகங்களில் வரு வாய்த்துறையினரைக் ‘கவனித்துவிட்டால்’ உடனே காரியம் நடந்துவிடும். இல்லையென் றால். வீண் அலைக்கழிப்புக்கு ஆளாக நேரிடும். இந்த நடைமுறைச் சிக்க லுக்குள் மாட்டிக்கொண்டு, கடந்த இரண்டரை வருடங்களாகப் போராடி வருகிறார் ஓய்வுபெற்ற தலைமை யாசிரியர் கதிரேசன்.

அவரை சாத்தூர் கோட் டாட்சியர் அலுவலகத்துக்கும், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கும் தொடர்ந்து அலையவிட் டுள்ளது, வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம்.

கதிரேசனை சுற்றலில் விட்டது ஏன்?

dd

Advertisment

விருதுநகர் மாவட் டம் - வெம்பக்கோட்டை வட்டம் - கணஞ் சாம்பட்டி கிராமம் - உட்கடை க.மடத்துப்பட்டிதான் கதிரேசனின் பூர்வீக ஊர். 1993ல் அந்த ஊரில் 956.25 சதுர அடி கொண்ட காலி மனையினை கந்தசாமி நாயக்கரிட மிருந்து வாங்கிய கதிரேசன், சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையப் பத்திரம் பதிவு செய்தார். அந்த இடத்துக்கு எதிரில் கதிரேசனின் அம்மா மாரியம்மாளுக்கு வீடு உள்ளது. கதிரேசன் வாங்கிய காலி மனையில் போட்ட ஆழ்துளைக்கிணறை மாரியம்மாள் வீடு பயன்படுத்தி வருகிறது.

2008-ல் தாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றிய கதிரேசனைச் சந்தித்த கிராம நிர்வாக அலுவலர், அந்தக் காலி மனைக்கு பட்டா வாங் குவதற்கு விண்ணப்பிக்கச் சொன்னார். கதிரேசனும் அதே ஆண்டில் பட்டா கேட்டு விண்ணப்பித் தார். 2009ல், 97 சதுர மீட்டர் காலி மனைக்கு, 26 சதுர மீட்டர் இடத்துக்கு மட்டுமே பட்டா தந்தனர். 2022ல், தான் அனுபவம் செய்துவரும் நத்தம் காலியிடம் என்றுள்ள 293/12ல் விஸ்தீரணம் 71 சதுர மீட்டர் இடத்துக்கும் பட்டா வழங்கக்கோரி, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கநாதனைச் சந்தித்தபோது, சாத்தூர் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கச் சொல்லிவிட்டு, நான் பட்டா பெற்றுத்தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ff

அதன் பிறகு, சாத்தூர் கோட்டாட்சியரிடம் பட்டா கேட்டு மனு அளித்தார் கதிரேசன். சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம், வெம்பக்கோட்டை வட்டாட்சியரிடம் இதுகுறித்த அறிக்கை கேட்டது. வட்டாட்சியர் அலுவலகம் ஏனோ பதில் அனுப்பவில்லை. வட்டாட்சியர் ரங்கநாதனை மீண்டும் சந்தித்தார் கதிரேசன். "செக்ஷன் கிளார்க் சரவணன் சாத்தூருக்கு மாற்றலாகிப் போய்விட்டார். மீண்டும் மனுச் செய்யுங்கள்''’என்றார் வட்டாட்சியர். கதிரேச னும் மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு பதிலளித்தார் வட்டாட்சியர். அதனால், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தார் கதிரேசன். சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அறிக்கை கேட்டார் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர். அதன் பிறகு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வெம்பக் கோட்டை வட்டாட்சியரிடம் அறிக்கை கேட்டார்.

இப்படியே கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்தபடி இருந்திருக்கிறது. அந்த நத்தம் காலியிடத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் அடிக்கடி நேரில் ஆய்வு செய்வதும் நடந்திருக்கிறது. ஒருகட்டத்தில் தற்போதைய வெம்பக்கோட்டை வட் டாட்சியர் முத்துபாண்டீஸ்வரி கதிரேசன் மாதம்தோறும் ரூ.61000 ஓய்வூதியம் பெற்று வருகிறார். அவருக்கு கணஞ்சாம்பட்டி கிராமத்தில் காரை வீடு உள்ளது. நிலங்கள் உள்ளன. சிவகாசி - சித்துராஜபுரத்திலும் சாத்தூர் வட்டத்திலும் வீடுகள் இருக்கின்றன. அதனால், கதிரேசன் கோரும் நிலக்கிரைய பட்டா வழங்க மார்க்கமில்லை’ என்று கடந்த 6-2-2024 அன்று ‘மேலெழுத்து’ மூலம் தெரிவித்துள்ளார்.

கதிரேசன் நம்மிடம் ஆழ்துளைக் கிணறு அமைத்து அந்த நத்தம் காலி மனையை நான் அனுபவம் செய்துவருவது குறித்து கணஞ்சாம் பட்டி கிராம நிர்வாக அலுவலரும், வெம்பக் கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளரும் அறிக்கை அளித்தனர். அரசாங்கத்துக்கு முறைப் படி ரூ.38500 செலுத்தி பட்டா பெற்றுக் கொள்ளலாம் என்று வருவாய் ஆய்வாளர் என்னிடம் கையெழுத்து வாங்கி, மண்டல துணை வட்டாட்சியரிடம் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் முத்துபாண்டீஸ்வரி அந்த இடத்தைப் பார்வையிட்டார். இதற்கிடையே தலையாரி கருப்பசாமி என்னிடம் ரூ.30000 கையூட்டு கேட்டார். அவர்கள் கேட்டதும் கையூட்டு தராததால், எனக்கு பட்டா வழங்கப் பரிந்துரை செய்த அறிக்கையை எடுத்துவிட்டு, வேறொரு அறிக்கையைத் தயார் செய்து அனுப்பிவிட்டார் மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன். வட்டாட்சியர் முத்துபாண்டீஸ்வரியும் பட்டா வழங்க இயலாது என்று மனுதாரரான எனக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியருக்கும் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டார்.

நத்தம் பட்டா இருந் தால்தான் அந்த நிலத்தைப் பின்னாளில் விற்கமுடியும். அதனால்தான், அரசாங்கத் துக்கு பணம் செலுத்திப் பெறக்கூடிய நிலக்கிரைய பட்டா கேட்டு விண்ணப் பித்தேன். வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் என்ன நடக்கிறதென்றால், விண்ணப்பத்தில் எல்லாம் சரியாக இருந்தால் ரூ.5000 சிறு குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், ரூ.30000 கையூட்டு தரவேண்டும். தலையாரி மூலம் பெறப் படும் இந்தக் கையூட்டு தொகையை சம்பந்தப் பட்ட அலுவலர்கள் பிரித்துக்கொள்வார்கள். 15-7-2022ல் எனது அண் ணன் மகன் சங்கர்ராஜ், ஒரு இடத்துக்கு பட்டா பெறுவதற்கு, கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வர னுக்கு ரூ.5000 கையூட்டு கொடுக்கவேண்டியதாயிற்று.

இரண்டரை வருடங் கள் என்னை அலையவிட்டு, இப்போது பட்டா இல்லையென்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய ஆதங்கம் எல்லாம், என்னை மாதிரி படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களை வருவாய்த் துறையினர் என்ன பாடு படுத்துவார்கள் என்பதுதான். வருவாய்த்துறை அலு வலகங்களில் பலரும் வகைவகையாக லஞ்சம் வாங்குகிறார்கள்.'' இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண் டும் என்பதற்காகவே, நக்கீரனிடம் முறையிடுகிறேன் என்றார் வேதனையுடன்.

கையூட்டு பெற்று பிரித்துக்கொள்வார்கள் என்று கதிரேசன் நம்மிடம் பட்டியலிட்ட மண்டல துணை வட்டாட்சியர் ராஜமோகன், வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன், தலையாரி கருப்பசாமி ஆகியோரைத் தொடர்புகொண்ட போது "நாங்கள் நேர்மையானவர்கள். இதுவரை யாரிடமும் நாங்கள் லஞ்சம் கேட்டதில்லை. எங்களுக்கு யாரும் லஞ்சம் தந்ததுமில்லை.''’என்று சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி பேசினார்கள்.

வெம்பக்கோட்டை வட்டாட்சியர் முத்துபாண் டீஸ்வரி நம்மிடம் "ஒருவர் பட்டாவுக்கு விண்ணப்பித்தால், பட்டா வழங்கமுடியும் அல்லது வழங்கமுடியாது என்று உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். இரண்டரை வருடங்களாக கதிரேசனின் பேப்பரை வைத் திருந்தது சரியில்லைதான். மண்டல துணை வட்டாட் சியரிடமும், வருவாய் ஆய்வாளரிடமும் கதிரேசன் மனுவுக்கு ஏன் பரிந்துரை செய்தீர்கள் என்று கேட்டேன். நான் நடத்திய ஆய்வின் முடிவில், கதிரேசனுக்கு பட்டா வழங்கமுடியாது என்று கடிதம் கொடுத்துவிட்டேன். வருவாய்த் துறையினர் லஞ்சம் கேட்டால், கதிரேசன் புகார் அளித்திருக்க லாமே? நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போமே? இதெல்லாம் நான் வெம்பக்கோட்டையில் வட்டாட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்னால் நடந்தது'' என்று விளக்கம் அளித்தார்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கும்போது, பொதுவாழ்விலும் அலுவலகத்திலும் அவமானத்தைச் சந்திக்கின்றனர். இதுவே மிகப்பெரிய தண்டனையாகும். ஆனால், கூகுள் பேலியில் லஞ்சம் வாங்கும் அளவுக்கு சில இடங்களில் வருவாய்த்துறை டிஜிட்டல் மயமாகிவிட்டது.

Advertisment

d