விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைவாய்ந்த சான்றோருக்கு விருது வழங்கிவருகிறார்கள். அந்தவரிசையில் 2022-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர், மூத்த தலைவர் சித்தராமையாவுக் கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும், காமராசர் கதிர் விருது வி.ஜி.பி. உலகத் தமிழர்கள் கட்சி தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது -மேனாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சி.செல்லப்பனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு விருது -தொல்லியல் அறிஞர் கா.இராசனுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் இரா.ஜவஹருக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் வி.சி.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பாலாஜி வரவேற்புரை வழங்கினார். எழில் கரோலின் நன்றியுரை ஆற்றினார்.

தந்தை சார்பில் மார்க்ஸ் மாமணி விருது பெற்ற எழுத்தாளர் ஜவஹர் புதல்வன், “"இந்த நேரத்தில் என்னுடைய அப்பா இருந்திருந்தால், இந்த விருது வழங்கும் விழாவில் ஒரு பெண்ணுக்குக்கூட விருது இல்லையே எனக் கேட்டிருப்பார். அவர் பெண் உரிமைக்காகவும் போராடியவர்''’என்றார்.

Advertisment

hh

அயோத்திதாசன் ஆதவன் விருது பெற்ற செல்லப்பன், "நான் பணிபுரியும்போது ஆதி திராவிடர் பிரச்சனைகளைக் கையிலெடுத்து அவர்களுக்கான பணிகளைச் செய்யும் வாய்ப்பு கிட்டியது. வி.சி.க. கட்சி தொடங்கியது முதலே ஆதிதிராவிடர் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை யை ஊட்டிவந்துள்ளது. ஆதிதிராவிடர் முன்னேற்றத்துக்காக, இந்தியா முழுவதும் வி.சி.க. வளர்ச்சி பெறவேண்டும்''’என்றார்.

செம்மொழி ஞாயிறு விருதுபெற்ற தொல்லியல் அறிஞர் இராசன், "இந்த விருதை என்னுடைய ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். அகழாய்வில் இந்தியாவில் கிடைத்தவை முழுவதும் பிராமி மொழியில் இருந்தாலும் தமிழகத்தில் கிடைத்த அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருந்தன. இது தமிழர்களைப் பெருமைப்படுத்தியுள்ளது. இந்திய வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்படவேண்டும்''’என்றார்.

காயிதே மில்லத் பிறை விருதுபெற்ற தெகலான் பாகவி, "விடுதலை சிறுத்தை கட்சி தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இயங்கவேண்டும். இஸ்லாமியரும் தலித் மக்களும் சேர்ந்து பாசிச ஆதிக்கத்தை வேரறுக்கவேண்டும்''’என்றார்.

பெரியார் ஒளி விருதுபெற்ற ராஜதுரை, "நான் பெரியார் பற்றி பேசப் போவதில்லை. கம்யூனிஸ்டுகள் முழுமையாக அம்பேத்கரை உள்வாங்கவில்லை. வி.சி.க. தலைவரோ கம்யூனி ஸத்தையும் அம்பேத்கரையும் ஒருசேர உள்வாங்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறார். நான் எந்த அரசியல் கட்சியிடமும் விருதுகள் வாங்குவ தில்லை, ஆனால் வி.சி.க. கட்சி வழங்கிய விருதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்''’என்றார்.

அம்பேத்கர் சுடர் விருது பெற்ற கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசுகையில், "பெரியார் பிறந்த மண்ணில் அம்பேத்கர் விருதை தம்பி திருமாவளவன் கையில் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். சனாதனத்துக்கு எதிரான களத்தில் திருமாவுடன் நானும் என்றும் நிற்பேன். இந்த நாட்டில் பலவிதமான சாதிகள் உருவாகக் காரணம், சனாதன சக்திகள் தான். சட்டத்தில் சமத்துவம், சகோதரத்துவம் அம்பேத்கர் கொண்டுவந்தும் என்ன பயன்? இன்று வரை உயர் சமூகம் உயர் சமூகமாகவும், கீழிருக்கும் சமூகம் கீழே இருந்துகொண்டும் இருக்கிறது.

குடியரசுத் தலைவராக ஒரு பட்டியல் இனத்தவரை நியமித்துள்ளோம் என மார்தட்டிக்கொள்ளும் இவர்கள், ஏன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஒரு தலித்தை தலைவர் ஆக்கவேண்டியதுதானே''’எனக் காட்டமான கேள்விகளை எழுப்பினார்.

இறுதியாகப் பேசிய வி.சி.க. தலைவர், தொல். திருமாவளவன், "விருது பெற்ற சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். வி.சி.க. அம்பேத்கர் விருதினை ஏன் சித்தராமையாவுக்கு வழங்கினோம் என்றால், கர்நாடகாவில் பெரியார் இல்லை, திராவிடம் இல்லை, ஆனால் சித்தராமையா தோன்றியிருக்கிறார் என்றால், அதற்கு கர்நாட காவில் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முன்பு பசவராஜ் என்பவர் பார்ப்பன எதிர்ப்பை உருவாக்கியுள்ளார். அதன் பலனாகவே சித்தராமையா உருவாகியுள்ளார்.

சனாதன சக்திகளுக்கு தடுப்புச்சுவராக இருப்பது அரசியலமைப்புச் சட்டம்தான். அதை ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர். தமிழகத் திலிருந்து பா.ஜ.க.வை ஓட ஓட விரட்டியடிக்க வி.சி.க.வால் முடியும். மத்தியில் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் தொடர்வதைத் தடுக்கவே, பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியாவிலுள்ள அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பின்னால் திரளவேண்டும். தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்கும் சக்தி காங்கிரசுடன் இணைந்தால் மட்டும்தான் சாத்தியமாகும். இல்லையேல் அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வார்கள்''’என எச்சரிக்கை விடுத்தார்.

Advertisment