சனாதனத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதியின் போர்க்குரல், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை பயமுறுத்தி வருகிறது. உதயநிதியின் அரசியல் நடவடிக்கைகளை எப்படி முடக்குவது என திட்டமிடுகிறது டெல்லி. முதல்வர் ஸ்டாலினைவிட இப்போதெல்லாம் உதயநிதியின் அரசியலை கண்டுதான் மிரளுகிறது பா.ஜ.க. இந்த நிலையில், உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆலோசனை டெல்லியில் நடந்திருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uday_15.jpg)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் கடந்த 2-ந் தேதி நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘’"சனாதன எதிர்ப்பு மாநாடு என போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என போட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள். சிலவற்றை ஒழித்துத்தான் ஆகவேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலே ரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதன மும். சனாதானத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத் துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது''’என்று பேசினார்.
உதயநிதியின் இந்த பேச்சு தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவில் எதிரொலித்தது. வட இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ஊடகங்களும் உதயநிதியின் பேச்சை வைத்து விவாதங்களை நடத்தின. இதனால் ஏகத்துக்கும் பரபரப்பு அதிகரித்தது.
"மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர் தொடங்கி பா.ஜ.க. தலைவர்கள் பலரும் உதயநிதியின் பேச்சை எதிர்த்தும் கண்டித்தும் வருகின்றனர். சனாதனத்தை பின்பற்றும் ஹிந்துக்களை இனப் படுகொலை செய்யச்சொல்கிறாரா உதயநிதி? அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றெல்லாம் கடுமையாக விமர் சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதேசமயம் உதயநிதியின் பேச்சுக்கு திராவிட அரசியலில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், "எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கெல் லாம் பயப்படமாட்டேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்தும் எங்கள் தீர் மானத்தில் இருந்து பின்வாங்கம ôட்டோம்''’என்று சூளுரைத்திருந் தார் உதயநிதி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uday1_5.jpg)
இந்த நிலையில், உச்சநீதி மன்ற வழக்கறிஞர் வினீத்ஜிண் டால் என்பவர், "சனாதன தர்மத் திற்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையிலும் இழிவாகவும் பேசி யிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சனாதன தர்மத்தை தொற்று நோய்களுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என அவர் கூறியிருப்பது, சனாதனத்தை பின்பற்றும் இந்துக்களை இனப் படுகொலை செய்ய அழைப்பது போல இருக்கிறது. சனாதனத்தின் மீதான வெறுப்பைக் கொட்டி யிருக்கிறார்.
அரசியலமைப்பு சட்டத் தின்படி அமைச்சராகவும் எம்.எல். ஏ.வாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கும் அவர், மத உணர்வுகளைத் தூண்டுவது ஏற்புடையதல்ல. அவரது பேச்சு, சனாதன தர்மத்தை பின்பற்றும் எனது மத உணர்வுகளை புண் படுத்துகிறது. அதனால், உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்ட னைச் சட்டம் 153, 153 ஏ, 153 பி, 295 ஏ, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண் டும்''‘’என்று டெல்லி காவல்துறை யில் புகார் கொடுத்திருக்கிறார் வழக்கறிஞர் வினீத்ஜிண்டால்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.க.வின் மாநில செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன், "சனாதனத்தை தொற்றுநோய் களுடன் ஒப்பிட்டு ஹிந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியுள்ளார். இரு பிரிவினரிடையே கலவரம் உருவாகவேண்டும் என்ற உள் நோக்கத்திலேயே அப்படி பேசி யிருக்கிறார். அதனால் அமைச்சர் உதயநிதி மீது வழக்குத் தொடர குற்றவியல் நடைமுறை சட்டம் 197-ன்படி நீங்கள் அனுமதி தரவேண்டும்''’என்று தமிழக கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
"மாநில அமைச்சராக இருப்பவர் மீது வழக்குத் தொடர வேண்டுமாயின் கவர்னரின் அனுமதி பெறவேண்டும் என்பதாலேயே இப்படி ஒரு கடிதத்தை கவர்னர் ரவிக்கு அனுப்பியிருக்கிறது தமிழக பா.ஜ.க. ஆக, உதயநிதிக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க டெல்லியில் தொடங்கி தமிழ்நாடு வரை வரிந்துகட்டுகிறார்கள் பாஜகவினர்.
இந்த நிலையில்தான், ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்துக்கள் பின்பற்றும் உணர்வுகளுக்கு எதிராகவும் தி.மு.க. இருப்பதாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டுமானால் உதயநிதிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்' என்று பா.ஜ.க.வின் தேசிய தலைமை திட்டமிடுகிறது. இதற்காக உதயநிதியை கைது செய்ய டெல்லியில் ஆலோசிக் கப்படுகிறது. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் இதனை சீரியசாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். இதுகுறித்து மேலும் நாம் விசாரித்த போது, "ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கவர்னருக்கு எதிராக உதயநிதி பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் நோட்பண்ணி வைத்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். கவர்னரை செருப்பால் அடிப்பார்கள் என உதயநிதியின் பேச்சு கவர்னர் ரவியை மிகவும் புண்படுத்தியது. டெல்லியும் இந்த பேச்சை ரசிக்கவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uday2_1.jpg)
பொதுவாகவே, உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், அதில் அவர் பேசும் பேச்சுக்கள் என அனைத்தையும் உளவுத்துறை மூலம் ரெக்கார்ட் செய்து சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், சனாதனத்தை பற்றிய அவரது பேச்சை சீரியசாக எடுத்துக் கொண்டி ருக்கிறது. அதாவது, பா.ஜ.க.வின் அரசிய லுக்காக பயன்படுத்த நினைக்கின்றனர்.
குறிப்பாக, மோடி சர்க்காருக்கு எதிராக உருவாகி யுள்ள இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய தூணாக இருப் பது தி.மு.க.தான். அந்த கட்சிக்கு நெருக்கடி உருவாக்கு வதன் மூலம் இந்தியா கூட் டணிக்குள் பிரச்சினையை உருவாக்கலாம் என்றும், ஹிந்துக் களுக்கு எதிரான தி.மு.க.வை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன என மக்களிடம் கொண்டுசெல்வதன் மூலம் இந்தியா கூட்டணிக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க முடியும் என்றும் திட்டமிட்டு உதயநிதியின் பேச்சை கையிலெடுக்கிறது மோடி சர்க்கார். அந்த வகையில், உதயநிதியை கைது செய்தால் என்னமாதிரியான சாதக -பாதகங்கள் நடக்கும் என டெல்லியில் விவாதிக்கப்படுகிறது'' ‘’ என்கிறார்கள் மத்திய அரசு பணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள்.
உதயநிதி மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருப்பதால்தான் கவர்னருக்கு கடிதம் தரப்பட்டுள்ளது. டெல்லியின் உத்தரவின்படியே இந்த கடிதம் கவர்னருக்கு தமிழக பா.ஜ.க. அனுப்பியிருப்பதாக நம்பப்படுவதால் தி.மு.க.வின் மேல்மட்டத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், உதயநிதியின் சனாதன பேச்சுக் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, "உதயநிதியின் பேச்சு யாருடைய நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் எதிராக எந்த வகையிலும் இல்லை. இனப் படுகொலையோடு அவரது பேச்சை ஒப்பிடுவது பா.ஜ.க.வின் அறியாமையைக் காட்டுகிறது. திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என சிலர் சொல்கிறார்கள். அதற்காக திராவிடம் பேசும் தி.மு.க.வினரை கொலை செய்வதாக அர்த்தமா? காங்கிரஸ் இல்லாத பாரதம் என்கிறார் மோடி. அதற்காக காங்கிரஸ்காரர்களை கொல்லப்போகிறார் என அர்த்தப்படுத்திக்கொள்ள முடியுமா? அது போலதான் இதுவும். சனாதனம் என்கிற கோட்பாட்டைத்தான் உதயநிதி கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். அதனால் எந்த சட்ட சிக்கலும் வராது''’என்று ஸ்டாலினிடம் சட்ட நிபுணர்கள் விவரித்துள்ளனர்.
உதயநிதியின் இந்த சனாதன பேச்சை வைத்து அரசியல் கணக்குகளை கூட்டிக் கழித்து பா.ஜ.க. போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘"சனா தனம் பற்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பேசிக்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் அதிகமாக பேச வேண்டும். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனியும் அப்படித்தான் பேசுவேன். இதற்காக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இந்தியா கூட்டணியின் கூட்டம் வெற்றியடைந்திருப்ப தால் அவர்கள் (பா.ஜ.க.) தடுமாறுகிறார்கள். இந்தியா கூட்டணி வலுப்பெற்றிருப்பதை திசை திருப்பவே இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும். எனக்கு சாதி, மதம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. எல்லா மதமும் எனக்கு ஒன்றுதான். சாதி, மத பாகுபாடுகள் நீங்க வேண்டும்''’என்று தனக்கு எதிரான பா.ஜ.க.வின் திட்டத் திற்கு பதிலடி தந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதிக்கு எதிராக மத்திய அரசு சட்ட நடவடிக்கை எடுத்து அவர் கைது செய்யப் பட்டால், அது உதயநிதி யின் இமேஜை தேசிய அளவில் உயர்த்தும். அந்த அரசியல் இமேஜ் தி.மு.க. வுக்குத்தான் சாதகம் என்கிறார்கள்' அரசியல் விமர்சகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/uday-t.jpg)