முதல் மாநில மாநாட்டை முடித்துள்ள த.வெ.க. விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி யிருக்கிறார். அதேநேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள்தான் மாவட்டத்தலைவர், மாவட்ட பொறுப்பாளர் என அரசியல் செய்யத் துவங்கிவிட்டனர். ரசிகர் மன்றங்களில் இருந்தவர்களுக்கும் தற்போது புதிதாகக் கட்சிக்குள் வந்தவர்களுக்குமான கோஷ்டி பிரச்சினை நாளுக்கு நாள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெடித்துவருகிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் சாமந்தான்பேட்டை சுகுமாறனுக்கும், தி.மு.க.விலிருந்து பெரும்கூட்டத்தோடு த.வெ.க.வில் இணைந்த அக்கரைப்பேட்டை சேகருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்த மோதலில் சேகரை கட்சியிலிருந்து நீக்குவதாக சுகு மாறன், இருமுறை லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ss

நாகை மாவட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, "சுகுமாறன் சாமந்தான்பேட்டை மீனவர் சமுகத்தைச் சேர்ந்தவர். சேகருக்கு மீனவர் வட்டாரத்தில் செல்வாக்கு அதிகம். சுகுமாறன் அரசியலுக்குப் புதிது. இருவரும் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் யார் பெரிய ஆள் என்கிற போட்டாபோட்டி தொடங்கிடுச்சு.

சுகுமாறன் பொறுப்பு போடுவதற்கு வெளிப்படையாகவே பணம் கேட்கிறார். அதனால சிலர் தி.மு.க.விற்கே திரும்பிப்போயிட் டாங்க. சிலர் சேகர் தலைமையை ஏற்றுச் செயல்படுறாங்க. அதில் கோபமான மாவட்டத் தலைவர் சுகுமாறன், சேகரை கட்சியைவிட்டு நீக்கியதாக அறிவிச்சார். புஸ்ஸி ஆனந்த் கைதைக் கண்டித்து புத்தூர் ரவுண்டானாவில் சேகர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள, பேருந்துநிலைய பகுதியில் சுகுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாகவே எல்லா நிகழ்ச்சிகளும் இருவர் தலைமையில் நடக்கிறது.

அக்கரைப்பேட்டையில் ஐநூறுக்கும் அதிகமானவர்களோடு த.வெ.க. கொடியை கோயிலில் வைத்து பூஜைசெய்து பேரணி யாகச் சென்று அங்குள்ள ஊராட்சி மன்ற பகுதியில் கொடியேற்றி மிரளவிட்டார் சேகர். இந்த நிகழ்ச்சிக்கான பேனர்களில் மாவட்ட தலைவர் சுகுமாறனின் பெய ரோ, படமோ, அழைப்போ கொடுக் காமல் நடத்திமுடித் தனர். இதனால் ஆத் திரமான சுகுமாறன், இரண் டாவது முறையாக சேகரை கட்சியைவிட்டு நீக்குவதாக தனது லெட்டர்பேடு மூலம் அறிவித்துள்ளார்'' என்கிறார்கள்.

இதுகுறித்து அக்கரைப்பேட்டை சேகரிடம் கேட்டோம், "நான் தளபதியின் ரசிகன். ஆரம்பத்தில் இணக்கமா செயல்பட்ட சுகுமாறன், திடீர்னு என்னை ஓரங்கட்டும் வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சிட்டார். சமீபத்தில் 28 பொறுப்புகள் போட்டோம். எங்க கட்சியிலிருந்து ரெண்டு பேர் தி.மு.க.விற்கு போனாங்க. அந்த பொறுப்பை யாருக்கும் போடாதீங்க. எங்க ஏரியாவுலயே திரும்பக் கொடுக்கணும்னு சொல்லியிருந்தேன். சில நாள் கழித்து மீனவர் அணி கூட் டம் போட்டோம். கூட்டத்தில் அந்த இரண்டு பொறுப்பையும் அக்கரைப்பேட்டைக்கு போட ணும்னு சொன்னேன். அது முன்னாடியே போட்டாச்சுன்னு சுகுமாறன் சொன்னார். அந்த பொறுப்பை அதே ஏரியாவுல வேறு யாருக்காவது கொடுத்தாத்தானே ஆளுங்கட்சி புள்ளிகளை எதிர்த்து அரசியல் செய்யமுடியும்னு கேட்டேன்.

நான் யார்ட்டயும் கேட்கணும்னு அவசியமில்ல. நான் மாவட்ட தலைவர். என் விருப்பத்துக்கு தான் பொறுப்பு போடுவேன். உங்களுக்கு கேட்க அதிகாரம் கிடையாதுன்னு எல்லாருக்கும் முன்னாடி ஒருமையில பேசிட்டார். பிறகு திருமருகலில் கொடியேற் றும் நிகழ்ச்சி. ஒன்றியச் செயலாளர் கவி அழைப்பு கொடுத்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து சுகுமாறன் போனதும் கவி எங்களுக்கு மரியாதை செய்தார். அதுக்காக ஒன்றியச் செயலாளரைத் திட்டியிருக்கிறார். அதுக்கப்புறம்தான் லெட்டர் பேடில் என்னையும், ஆல்பர்ட்ராயன் உள்ளிட்ட சில பேரையும் கட்சியைவிட்டு தூக்கினதா வாட்ஸ் அப்ல போட்டார். சுகுமாறனுக்காக நாங்க கட்சியில் சேரலை. தலைமை முடிவெடுக்கட்டும்'' என்றார்.

சுகுமாறன் கூறுகையில், "தி.மு.க.வில் பெரிய பொறுப்பிலிருந்த சேகரை நான்தான் த.வெ.க.விற்கு கொண்டுவந்தேன். வந்த சில நாட்களிலேயே உட்கட்சி அரசியலை உண்டாக்கிட்டார். இருக்கிற சில பொறுப்பாளர்களை வச்சுக்கிட்டு தனக்குத்தானே மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாளர் என பதவியைப் போடுகிறார். வந்ததிலிருந்து தன்னிச்சையா செயல்படுறார். சேகரை நீக்கினது நீக்கியதுதான்'' என்றார்.

"தி.மு.க. மாவட்ட பிரமுகர் தம்பியிடம் பணம் வாங்கிக்கொண்டு சேகரை ஓரங்கட்டுறதாகவும், பொறுப்பு போடுவதற்கு பணம் வாங்குறதாகவும் சொல்லுறாங்களே உண்மையா?''’என்றோம். ஆயிரம்பேர் ஆயிரம் சொல்லுவாங்க. தி.மு.க.வின ரிடம் பணம் வாங்கியதா கூறி என்னை அசிங்கப் படுத்த நினைப்பது ஒருபோதும் நடக்காது. தலைவ ருக்காக எதையும் செய்வேன்'' என்கிறார் சுகுமாறன்.

ஜனவரி 7ஆம் தேதி பனையூரில் த.வெ.க. பொதுச்செயலாளர் தலைமையில் நாகை நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் புஸ்ஸி ஆனந்த், "ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இருப்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். எப்பவுமே உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுகுமாறனை மாவட்ட தலைவராக ஏற்றுச் செயல்படவேண்டும்'' எனக்கூறி அனுப்பி யுள்ளார்.