மெல்ல மெல்ல இலங்கை போதைக்கடத்தல் மாஃபியாக் களின் ஆதிக்கத்திற்குள் போய்க் கொண்டிருக்கிறது தூத்துக்குடி -இலங்கை கடல் பாதை.

கடந்த வாரம்... தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் சோதனைச்சாவடியில் கூரியர் கண்டெய்னர் வாகனம் ஒன்று, நிறுத்தாமல் தூத்துக்குடியை நோக்கிப் பறந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகப் பொறி தட்ட, போலீசார் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து, ஹைஸ்பீடில் விரட்டிச்செல்ல, குளத்தூரையடுத்த பல்லாகுளம் காட்டுப்பகுதியில் புதருக்குள் நிறுத்திவிட்டுத் தப்பி யோடியிருக்கிறார்கள்.

துரத்திவந்த போலீசார் வாகனத்தின் கன்டெய்னரைத் திறந்து பார்த்த நொடியில் அசந்து விட்டனர். மூட்டை மூட்டையாக கஞ்சாக்கள் மற்றும் -ட்டர் கணக்கில் மண்ணெண்ணெய். தகவல் போய் ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாகனத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசியதில், 452 கிலோ கஞ்சா மூட்டைகளும் 242 -ட்டர் மண்ணெண்ணை கேன்களும் இருப்பதுகண்டு அதிர்ந்தனர்.

Advertisment

tuty

கடந்த சில மாதங்களாக இலங்கைக்குக் கடத்தப்படும் போதைப் பொருட்கள் பிடிபடுவது தொடர் சம்பவங்களென்றாலும், அவைகளில் பல கடத்தல்கள் பாதுகாப்புத்துறையினர் வசம் சிக்காமலேயே போயிருக்கின்றன. குறிப்பாக போதைச் சரக்குகள் இலங்கைக்கு அதிக அளவில் கடத்தப்படுவது புரியாத புதிராகவும் உள்ளது என்கிறார்கள் மாவட்டக் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.

Advertisment

போதைத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு, க்யூ பிரிவு மற்றும் கடலோரக் காவல் தடுப்புப் பிரிவின் உயரதிகாரிகளிடம் பேசியபோது நிலைகுலைய வைக்கிற அந்தத் தகவல்கள் கிடைத்தன.

உலக நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்ப அடைக்க வழியில்லாமல் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த நிலையில் இருக்கிறது இலங்கை.

அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரமும், பிழைப்பிற் கான வழிகளும் அடியோடு மண்ணுக்குள் புதையுண்டு போய்விட்டன. மீளவேண்டிய கட்டாய நெருக்கடியி-ருக்கும் இலங்கை, வருமானத்திற்காக போதை வியாபாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது.

சர்வதேச சந்தைகளில் போதைச் சரக்குகளுக்கு அபரிமிதமான டிமாண்டும், விற்பனையில் ஒன்றுக்குப் பத்தாக லாபங்கள் மாஃபியாக்களால் அள்ளப்படுவது தெரிந்த விஷயம். எனவே போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பு வதை ஊக்குவித்தால் நாட்டுக்கு வருமானம் கிடைக்கும், வழியும் பிறக்கும் என்ற கதையாக, உள்நாட்டிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதித்து அறிவிப்பும் வெளியிட்டுவிட்டது இலங்கை.

tuty

இப்படி, ஒருபக்கம் ஊக்குவித்தாலும், மறுபக்கம் போதைக் கடத்தல் நாடு என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக, தமிழகத்தி-ருந்து கடல் வழியாகக் கடத்தப்படும் போதைச் சரக்குகள் வழியில் இலங்கை கடற்படையினர் வசம் சிக்கிக்கொண்டால் சரக்கும், கடத்தப்படுகிற படகு, கடத்தல் புள்ளிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதோடு கடத்தல் புள்ளி களையும் உள்ளே வைத்துவிடுவார்கள். உலக நாடுகளை ஏமாற்ற இலங்கை இப்படி சீன் போட்டாலும், கடத்தப்படுகிற போதைச் சரக்குகள் இலங்கைக்குள்ளே சென்றுவிட்டால் தடை யில்லையாம்.

இதற்கு ஆதாரமாக சில கடத்தல் சம்பவங்களையும் விவரித்தனர் அதிகாரிகள்.

இலங்கையைச் சேர்ந்த சர்வதேச கஞ்சா கடத்தல் மாஃபியா சிவா, வெளிநாடுகளில் நெட் ஒர்க்குகளை வைத்திருப்பவன். கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த மன்சூர் அ-. இவர் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிடிபட்டு புழல் சிறையில் இருந்தபோது இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தத் தொடர்பின் காரணமாக மன்சூர் கஞ்சாவை மூட்டை மூட்டையாகக் கடத்தி சரக்குகளை சிவாவிடம் சேர்த்திருக்கிறார்.

வழக்கமாக கஞ்சா கடத்த--ருந்த மன்சூர் கடந்த 6.03.2022 அன்று தூத்துக்குடியின் வெள்ளப்பட்டிக் கடல் பகுதியி-ருந்து 450 கிலோ கஞ்சா மூட்டைகளை இலங்கைக்குக் கடத்துகிறபோது தூத்துக்குடி க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கியிருக்கி றார்.

அதேபோன்று இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த தாஸ் என்பவர் அரசியல் பின்புலம் கொண்டவர். இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவரின் மகனிடம் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக்கொண்ட தாஸ், பிரவுன் சுகர், கேட்டமைன், கஞ்சா ஆயில் உள்ளிட்ட கஞ்சா போதைச் சரக்குகளை தமிழகக் கடல் வழியாக கடத்தி வரச்செய்து வெளிநாடுகளுக்கு கடத்துபவர். சென்னை கோவா, மும்பை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நெட் ஒர்க்குகளை வைத்துக்கொண்டு போதைக் கடத்தலை ரெகுலராக மேற்கொண்டிருப்பவர்.

இலங்கைக்குக் கடத்தவிருக்கிற போதைச் சரக்குகள் வட மாநிலங்களி-ருந்து தூத்துக் குடியின்கீழ் வைப்பார் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் அங்குள்ள இருதயவாஸ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு, இருதய வாஸின் சகாக்களின் மூலமாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு கொழும்பு நகரின் தாஸிடம் ரெகுலராக சேர்க்கப்பட்டுவிடுமாம்.

tt

கீழவைப்பார் டூ இலங்கைக் கடல்வழியின் நெளிவு சுளிவுகளைத் துல்-யமாக அறிந்த இந்த ஏஜண்ட், இலங்கை சென்றடைகிற ஏழு மணி நேரத்தையும் 5 மணி நேரத்திற்குள்ளாக இவரது கையாட்களை சென்றடைந்து சரக்கை உரிய புள்ளியிடம் சேர்ப்பித்துவிடுகிற திறன்கொண்டவராம். போதைச் சரக்கு கடத்தப்படுகிற இவரது படகு பாதுகாப்புத்துறை, நேவிக்காரர் களிடம் பிடிபடாம-ருப்பதற்காக, அவர்களின் மூவ்மெண்ட்களை தெரிந்துகொண்டு பிடிபடாமல் ரூட்டை மாற்றுவதற்காக அந்தத் துறைகளிலேயே தகவலைப் பெறுவதற்கான தொடர்புகளையும் வைத்திருப்பவராம். இதன் காரணமாகவே மாஃபியாக்கள் மொத்தச் சரக்கையும் அதற்கான கூ-யையும் கொடுத்துவிடுவதால் சரக்குகளும் சேதாரமின்றி சென்றடையவேண்டிய இலக்கை அடைய, போதைக் கடத்தல்கள் ரெகுலராகியிருக்கின்றன.

தன்னுடைய கடத்தல் ரூட், தொடர்புகளை போலீஸ் மற்றும் என்.ஐ.பி.யினர் சேஸ் செய்துவிடாம-ருப்பதற்காக தன்னுடைய டீ-ங்குகள், மூவ்மெண்ட்களை வாட்ஸ் அப் கால் மற்றும் நெட் மூலமாக வைத்துக் கொள்வதால் பாதுகாப்புத் துறையினரால் இவரை பின்தொடர முடியாமல் இருந்திருக்கிறது.

கடந்த பிப்ரவரியின்போது கோவாவி-ருந்து வெளிநாட்டிற்கு கடத்த வேண்டிய 10 கிலோ கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் என்கிற உயரிய போதைச் சரக்கு சென்னை கொண்டுவரப்பட்டு இலங்கையிலுள்ள மாஃபியா தாசிடம் சேர்ப்பிப்பதற்காக இருதயவாஸிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 30 கோடி என தெரிந்துகொண்ட இருதய வாஸ் 10 கிலோ சரக்கிற்கு கடத்தல் கூ-யாக 55 லட்சம் தொகையில் தனது ஆட்களின் மூலமாக கடத்தியிருக்கிறார். அந்த போட் தூத்துக்குடி கடல் மார்க்கத்தைத் தாண்டி சர்வதேச கடல் எல்லையைத் தொடுவதற்குள் பொறிவைத்து விரட்டிய தூத்துக்குடி க்யூ பிரிவினர் நடுக் கட-ல் படகை மறித்து சரக்கையும், கடத்தல் கையாட்களான ஏழு பேர் மற்றும் இருதயவாஸையும் வளைத்திருக்கிறார்கள்.

“அண்டையிலுள்ள கடல் நாடான இலங்கை வருமானத் திற்காக போதை உற்பத்தியை அனுமதித்தும், போதைக் கடத்த லுக்கு பக்கபலமாகச் செயல்படுவதன் விளைவே தற்போது மூட்டை மூட்டையாக சரக்குகள் பல்வேறு வழிகளில் கடத்தப் படுவதோடு பார்வை பதியாத கூரியர் வாகனத்திலும் கடத்தல் என்ற லெவலுக்குப் போயிருக்கிறது என்கிறார்கள்.

கூரியர் நிறுவனத்தின் பெயர்கொண்ட பச-48 உவ 3753 என்ற ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணுடைய கன்டெய்னர் வாகனம், சந்தேகத்தினடிப்படையில் விரட்டியபோதுதான் சிக்கியிருக்கிறது” என்கிறார் தூத்துக்குடி எஸ்.பி.யான பாலாஜி சரவணன்.