மைச்சர் கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொல்லப் பட்டு 10 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இதுவரையில் கொலையாளிகள் பிடிபடாத நிலையில் சிறப்பு தனிப்படை புலனாய்வுக் குழு அமைக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்டமாக சந்தேகத்துக்குரிய 13 பேர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டு உண்மை கண்டறியும் சோதனைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

gg

இந்த நிலையில், சந்தேகப் பட்டியலில் இடம்பெற்ற பலரும் பதட்டமடைந்ததோடு, தத்தம் தரப்பை வலுவாக முன்வைக்க பெயர்பெற்ற வழக்கறிஞர் களைத் தேடிப்பிடித்துள்ளனர். சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல் பகுதியில் மையம் கொண்டிருந்தது. மன்னார் குடி பகுதியைச் சேர்ந்த ஒரு ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், குடவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கிய நபரிடம் விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக்குழு அழைப்புக் கொடுத்திருந்தது.

Advertisment

சில நாட்களாக வேலைப் பளு அதிகமாக உள்ளதாக சமாளித்த அந்த குடவாசல் புள்ளி, நவம்பர் 7-ஆம் தேதி, தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால் தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று கூறியுள்ளார். அவர் விசாரணையைத் தவிர்ப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையிலிருந்து விலக்குப் பெற நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதேபோல தொடக்க கால விசாரணை அதிகாரி ஒருவரும் விரைவில் விசாரணைக்கு ஆஜராகவேண்டிய நிலை உள்ளதால், பதற்றத்தில் மாஜிக்களின் உதவியை நாடியுள்ளதோடு ஆளுந்தரப்பையும் நாட உள்ளதாக காவல்துறை வட்டாரம் காதில் கிசுகிசுக்கிறது.

Advertisment

_______________

இறுதிச் சுற்று!

gg

விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் சீனிவாசன் அவர்களது தாயாரும், அமரர் பாலசுப்ரமணியன் அவர்களது துணைவியாருமான திருமதி சரோஜா பாலசுப்ரமணியம் இயற்கை எய்தினார். நவம்பர் 7, 2022 அன்று, அவரது இல்லத்துக்குச் சென்று உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித் தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் முதல்வருடன் இருந்தார். நக்கீரன் ஆசிரியரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.