ரு சிறுமிக்கு நடந்த கொடூரம் பாண்டிச்சேரி பொதுமக்களைக் கலங்கடித் துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த கணவன் - மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதில் கணவர் கடந்த 2016ஆம் ஆண்டு மரண மடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரை அந்தக் கைம்பெண் இரண்டாவதாக மணந்துகொண்டார். இவர்கள் மும்பையில் வசிக்கின்றனராம்.

gg

அவர்களின் 16 வயது மகளுக்குப் பெற்றோர் தந்த அதீத செல்லம் காரணமாக, கூடாத நண்பர்களின் சகவாசமும், போதை மருந்துப் பழக்கமும் அவளைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பெங்களுரூவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் அவளுக்கு சிகிச்சை தந்துள்ளனர். பெங்களுரு வில் சிகிச்சை பெறும் மகளைப் பார்ப்பதற்காக பெற்றோர்கள் அங்கு சென்றபோது, தன்னை மீண்டும் மும்பைக்கு அழைத்துச் செல்லும்படி அவள் அழுதிருக்கிறாள். கணவரின் பெற்றோர் பாண்டிச்சேரியில் வசித்து வருவதால் பாண் டிச்சேரிக்கு அழைத்துவந்து தங்கியுள்ளனர்.

Advertisment

புதுவையில் தங்கியிருந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு அந்த சிறுமி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அவளை அனைவரும் தேடிவந்த நிலையில், நவம்பர் 2ஆம் தேதி அந்த சிறுமி, பாண்டிச்சேரி கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி போலீஸ் தரப்போ, "அங்குள்ள வைஷாலி வீதியில் அந்தச் சிறுமி ஓரு ஆட்டோவை நிறுத்தி ஏறி, போதை மருந்து எங்கே கிடைக்கும் எனக் கேட்டிருக்கிறாள். கோட்டகுப்பத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ டிரைவர் காஜாமொய்தீன், அந்தச் சிறுமிக்கு போதை மருந்து வாங்கிதந்து, போதையில் இருந்த அவளை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு அந்த சிறுமியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கும் மது வாங்கித் தந்து, மீண்டும் மீண்டும் அந்த சிறுமியிடம் தன் ssஆசையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறான். விடிந்ததும், தந்திராயன் குப்பத்தில் ஒரு விடுதியில் தங்கயிருந்த இளைஞர்களிடம் அவளை அவன் ஒப்படைத்திருக்கிறான். வயதின் அடிப்படையில் சிறுமி என்றாலும் பார்ப்பதற்கு,அவள் மாடர்ன் பெண்ணாக இருந்திருக்கிறாள். சென்னையில் தங்கி ஐ.டி. வேலை செய்யும் வாரணாசி, தெலுங்கானா, ஒரிசா, பெங்களுருவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் அந்த சிறுமியைத் தாங்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் சென்று தங்களது இச்சையைத் தீர்த்துக்கொண்ட தோடு, அப்படியே அவளைத் தங்களது காரிலேயே சென் னைக்கு அழைத்துச்சென்று ஒரு லாட்ஜில் 2ஆம் தேதி வரை வைத்திருந்து ஆசையைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் ஓலா டாக்ஸியை புக் செய்து அந்த சிறுமியை அனுப்பியுள்ளனர். பாண்டிச்சேரி கடற்கரையில் போதை மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டிருந்த அவளை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோது தான், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விசயமே தெரியவந்திருக்கிறது. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர், இளைஞர்கள் என இதுவரை ஐந்து பேரைக் கைது செய்துள் ளோம்''’என்கிறது போலீஸ்.

இது குறித்து பாண்டிச்சேரி தி.மு.க. மகளிர் அணி மாநில அமைப்பாளர் காயத்ரி நம்மிடம், "இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டது. வெளியில் தெரியாமலும் புகார் ஆகாமலும் இப்படி நிறைய பாலியல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற சில சம்பவங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அங்கு தீர்வு பெறாத நிலையிலேயே காவல் நிலையத்துக்கு வந்து புகார் தருகின்றனர். இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. அதற்கு காவல்துறையில் உள்ள அதிகாரிகளின் ஆதரவும் இருப்பது வேதனைப்பட வைக்கிறது. போதைக்கு அடிமையாகாதீர்கள் என ஆண்களுக்கு மட்டும் சொல்வ தற்கு பதில் பெண்களுக்கும் சொல்லவேண்டிய நிலையில் பாண்டிச்சேரியை மாற்றி விட்டார்கள். திரும்பிய பக்கமெல்லாம் பாண்டிச்சேரியில் ரெஸ்ட்டோ பார்கள் உள்ளன. இரவெல்லாம் இந்த பார்களைத் திறந்து வைத்து கூத்தும், கும்மாளமாக இருந்து பொதுமக்களுக்குத் தொல்லைகளை ஏற்படுத்துகின்றனர்''’என்று ஆதங்கப் பட்டதோடு...

Advertisment

"கடந்த வாரம் ஒரு ரெஸ்ட்டோ பாரில் இருந்துவந்த சத்தத்தால் கோபமான குடியிருப்பு வாசிகள் அந்த ரெஸ்ட்டோ பாரை விடியற்காலை 2 மணிக்கு முற்றுகையிட்டார் கள். பல பார்கள், பெண்களுடன் அங்கு வந்தால் மது அன்லிமிடெட் மதுபானம் தருவதாக விளம்பரம் செய்கின்றன. அதேபோல் கிட்ஸ்டோ பார் என ஓப்பன் செய்து சோசியல் மீடியாவில் விளம்பரம் செய்கிறார்கள். அதாவது, பெற்றோர்கள் சரக்கு சாப்பிடலாம், குழந்தைகள் தனியே அமர்ந்து விளையாடலாம், உணவு சாப்பிடலாம் இலவசம் என்கிறார்கள். இதையெல்லாம் எப்படி அரசும், காவல்துறையும் அனுமதிக்கிறது எனத் தெரியவில்லை. பெண்கள் காவல் நிலை யங்களுக்கு சென்று புகார் தந்தால் அதனை வாங்கி முறையாக விசாரிக்க மாட்டேன் என்கிறார்கள். இங்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறையை விசாரிப்பதற்கான ஆணையத்தின் சேர்மன் பதவி உட்பட பல பதவிகள் காலியாக இருக்கின்றன. காரைக்கால் மாவட்ட சிறார், பெண்கள் நல ஆணையத்திலிருந்து வந்துதான் விசாரிக்கிறார்கள்.

இந்த சிறுமிக்கு நடந்தது போல் இனியும் இதுபோன்ற அவலம் நடக்ககூடாது என்றால் இங்கு அதிகளவு விழிப்புணர்வு தேவை''’ என்றார் கவலையாக.

’கேரள சிறுமி விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை போலீஸ் சொல்லிவருகிறது. அது யாரைக் காப்பாற்ற? என்று தெரியவில்லை” என்கிறார்கள் அங்குள்ள எதிர்க்கட்சியினர். புதுவை யின் தட்பவெப்பம் டேஞ்சரசாக மாறிவருகிறது.