இரண்டில் ஒன்று!
கதையை விட தனது கதாபாத்திரத்துக்கு ஸ்கோப் மற்றும் அதிக கெட்டப்புகள் இருக்கும் பட்சத்தில் தவறாமல் நடித்து விடுகிறார் விக்ரம். இப்போது "சித்தா' பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ‘"வீரதீர சூரன்'’ படத்தில் நடித்துவரும் அவர், இரண்டு கெட்டப்பில் மட்டும்தான் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு அடுத்து ஒரு வித்தியாசமான கதைகளம் கொண்ட படத்தில் நடிக்க முடிவெடுத்து, இதற்காக சாந்தகுமார், ராஜேஷ் எம் செல்வா உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் கதை கேட்டார். எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வில்லை. இதனால் இளம் இயக்குநர்களை அழைத்து கதை கேட்க முடிவெடுத்த விக்ரம் முதற்கட்டமாக "பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், "மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஷ்வின் ஆகியோரிடம் கதை கேட்டு... எந்த கதை நமது டேஸ்ட்டுக்கு ஒத்து வரும் என்ற யோசனையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். விரைவில் ஒரு இயக்குநரை விக்ரம் தேர்ந்தெடுக்கவுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt_86.jpg)
ஓவர் சவுண்டு!
அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் "குட் -பேட் -அக்லி'’ படம் உருவாகிவரும் நிலையில் இசையமைப்பாளராக கமிட்டானவர் தேவிஸ்ரீ பிரசாத். இப்போது அவர் இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு பின்னால் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முதலில் அவர் எல்லா படத்துக்கும் பாடல்கள் தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது. அதே போல் சமீபத்தில் அவர் இசையமைத்த "கங்குவா' படம், முழுக்க சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதோடு "புஷ்பா 2' படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்த அவர், சில காரணங்களால் பின்னணி இசையை அமைக்கவில்லை. இப்படி அவர்மேல் ஏகப்பட்ட புகார்கள் எழ... அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஜி.வி.பிரகாஷை கமிட் செய்துள்ளது "குட் -பேட் -அக்லி'’ படக்குழு. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் முதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்திருந்த நிலையில் இருவருக்கும் உண்டான நட்பின் காரணமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘"கிரீடம்' படத்துக்கு பிறகு 17ஆண்டுகள் கழித்து அஜித் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வுள்ளார்.
நம்பிக்கை நாயகன்!
"பார்க்கிங்', "லப்பர் பந்து' வெற்றி மூலம் நம்பிக்கைக்குரிய நாயகனாக மாறியிருக்கிறார் ஹரிஷ்கல்யாண். கைவசம் "நூறு கோடி வானவில்' மற்றும் "டீசல்' ஆகிய படங்களை வைத்துள்ளார். இப்போது புதிதாக அவர் கமிட்டாகியுள்ள படத்தை லிஃப்ட் பட இயக்குநர் வினித் வரபிரசாத் இயக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளார். நாயகியாக நிறைய நடிகைகள் பேசப்பட்ட நிலையில் இறுதியாக "ஸ்டார்' படம் மூலம் அறிமுக மான இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தனை ஒப்பந்தம் செய் துள்ளனர். இவர் நடித்த ஆல்பம் பாடலான ‘"ஆச கூட...'’ பாடல் இளைஞர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
ப்ளான் இ!
"புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக் கும் நிலையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘"ஊ சொல்றியா மாமா'’ பாடல் போல் இந்தப் படத்திலும் ‘"கிஸ்ஸிக்'’ என்ற ஒரு பாடல் இடம்பெற் றுள்ளது. இதில் தனது துள்ளல் நடனம் மூலம் கவனம் ஈர்த்த தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த பாடல் எதிர்பார்த்த அளவு ஹிட்டடிக்காததால் படக்குழு சற்று அப்செட்டில் இருக்கிறது. படம் வெளியாகி சரியாக போகாத நிலைமை வந்தால், சில நாட்களிலே பாடல் வீடியோ வை வெளியிடும் ப்ளானும் இருக்கிறதாம். இந்த பாடலுக் காக சமந்தாவைவிட 60 சதவீதம் கம்மியான சம்பளமே ஸ்ரீலீலா வாங்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/tt-t_6.jpg)