தயாரிப்பாளர் தனுஷ்!
தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் தொடர்ச்சியாக படங்களை தயாரித்துவந்தார். 2018ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படமும் என தான் நடிக்கும் இரண்டு படங்களை தனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் முதல் முறையாக இயக்கவுள்ள படத்தையும் தனது வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தனுஷே கதை எழுதி அதில் நடிக்கவுள்ளாராம். ஓம் பிரகாஷை இயக்குநராக அறிமுகப்படுத்துவதன் மூலம் இரண்டாவது ஒளிப்பதிவாளரை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். முதலாவதாக "வேலையில்லா பட்டதாரி' மூலம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இயக்குநராக அறிமுகப்படுத்தி, அவரது இயக்கத்தில் "தங்கமகன்' படத்திலும் நடித்திருந்தார் தனுஷ். ஓம்பிரகாஷ், வேல்ராஜ் இருவரும் தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக் பிரியா பவானி!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_292.jpg)
பிரியா பவானிசங்கர், தற்போது விஷாலுக்கு ஜோடியாக "ரத்னம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருள்நிதியின் "டிமாண்டி காலனி 2', கமலின் "இந்தியன் 2' படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் "செப்ரா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜீவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கு "பிளாக்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் என்ட்ரி!
சூர்யா நடிக்கும் "கங்குவா' படத்தை இயக்கிவரும் சிறுத்தை சிவா, அடுத்ததாக அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவார் என தகவல் வந்தது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி, கங்குவாவை முடித்துவிட்டு பாலிவுட் பக்கம் செல்லத் திட்டமிட்டுள்ளாராம். இந்தி படத்திற்காக ரன்பீர்கபூர் மற்றும் வருண்தவான் இருவரிடமும் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் படங்களை இயக்கி வந்த சிவா, முதல்முறையாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
டாப் ஸீக்ரெட்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_222.jpg)
இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி, டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ்போ என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும், அத்திருமணம் ராஜஸ்தான் உதய்பூரில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அண்மையில் பெரிதாக யாருக்கும் தெரிவிக்காமல், திருமணத்தை நடத்தி முடித்துள்ளார் டாப்ஸி. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற் றுள்ளது. இதில் நெருங்கிய நண் பர்கள், உறவினர் கள், சில திரைபிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்கு முன்னாடி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியையும் சத்தமே இல்லாமல் நடத்தி முடித்துள்ளார் டாப்ஸி.
இரண்டாவது வில்லன்!
கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி பிரபலமான முத்தையா, தற்போது தனது மகனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி முடித்துள்ளார். இப்படமும் அவரது முந்தைய படங்களைப் போலவே உருவாகிறது. இதில் வில்லனாக பரத் நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில்... தற்போது இன்னொரு வில்லனாக ஒளிப்பதிவாளர் சுகுமார் நடித்துள்ளார். நடிகராக வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசையாம். அதை அறிந்த முத்தையா, வில்லன் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார். வில்லனாக நடிப்பதோடு, படத்தின் ஒளிப்பதிவாளரும் சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை குறுகிய காலத்திலேயே முத்தையா நடத்தி முடித்துவிட்டாராம்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-03/cinema-t_5.jpg)